Published:Updated:

அப்பாக்களை சி.எம். ஆக்கிய மகன்கள்!

உ.பி., பஞ்சாப் அதிசயம்!

அப்பாக்களை சி.எம். ஆக்கிய மகன்கள்!

உ.பி., பஞ்சாப் அதிசயம்!

Published:Updated:
##~##

ந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள், மொத்த இந்தியாவையும் உலுக்கி, அனைத்துக் கட்சிகளையும் அதிர வைத்துள்ளது!  

மினி நாடாளுமன்றத் தேர்தல் என்று வர்ணிக்கப்படும் உத்தரப்பிரதேசத்தில் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது காங்கிரஸ். மாயாவதியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டார் முலாயம்சிங். பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல், ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். உத்தரகாண்டில் பி.ஜே.பி. - காங்கிரஸ் இடையே ஆட்சியைப் பிடிக்க இழுப்பு வேலை நடந்து வருகிறது. கோவாவில் காங்கிரஸிடம் இருந்து பி.ஜே.பி. ஆட்சியைத் தட்டிப் பறித்துள்ளது. மணிப்பூரில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்த்ததும் டெல்லிப் பத்திரிகை யாளர்கள்,

அப்பாக்களை சி.எம். ஆக்கிய மகன்கள்!

'மன்மோகன் சிங் தலை தப்பிவிட்டது’ என்று சொன்னார்கள். 'தேர்தல் முடிவுகள் காங்கி ரஸுக்குச் சாதகமாக வந்திருந்தால், ராகுலை பிரதமராக அமர்த்தும் வேலை இந் நேரம் தொடங்கி இருக்கும்’ என்பது இவர்களின் கருத்து.

இந்தத் தேர்தலின் வெற்றி, வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் காங்கிரஸ் இந்தத் தேர்தலை மிகவும் நம்பி ஏமாந்து விட்டது.

ஐந்து மாநிலத் தேர்தலின் வெற்றி தோல்வி தேசிய அரசியலில் எப்படிப் பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து, 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையின் அசோசியேட் எடிட்டர் சேகர் ஐயர் விவரிக்கிறார்.

''முன்பு சாதிஅரசியல் மட்டுமே வெற்றியை நிர்ணயித்தது. இப்போது  ஆட்சியாளர்களின் செயலைப் பொறுத்தும் மக்கள் வாக்களிக்கிறார்கள். தங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது ரிக்கார்டு சரியில்லை என்றால், எதிராக வாக்களிக்கிறார்கள். இதுதான் உ.பி-யில் நடந்துள்ளது.

அப்பாக்களை சி.எம். ஆக்கிய மகன்கள்!

மாயாவதிக்கு சாதகமாக உ.பி-யில் 403 தொகுதிகளிலும் தலித்களுக்கு 50,000 வாக்குகள் இருக்கின்றன. இது மட்டும் போதாது என்றுதான், கடந்த 2007-ம் ஆண்டு தேர்தலில் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தார். தலித் என்று மட்டும் சொல்லாமல் 'சர்வ சமாஜ்’ என்று சொல்லி தன்னுடைய இமேஜை மாற்றிக் கொண்டார். தலித் களுக்கு மட்டுமின்றி முஸ்லிம்கள், தாக்கூர்கள், பிராமணர்களுக்கும் டிக்கெட் கொடுத்தார். அப்போது முலாயம்சிங் ஆட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த அதிருப்தியை மாயாவதி தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்.

இதே ஃபார்முலாவைத்தான் இப்போது சமாஜ்வாதி கட்சி பின்பற்றி உ.பி-யில் வெற்றி பெற்றுள்ளது. இதற்குக் காரணம் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ். மாயாவதிக்கு தலித் ஓட்டுகள் மாதிரி, முலாயம் சிங்குக்கு யாதவ் ஓட்டு வங்கியும் கூடுதலாக முஸ்லிம் ஓட்டு வங்கியும் இருந்தது. யாதவர்கள் மட்டுமின்றி தாக்கூர்கள், பிராமணர்கள் என்று தொகுதிக்குத் தக்கவாறு வேட்பாளர்களை நிறுத்தினார் அகிலேஷ்.

இதுதவிர, சமாஜ்வாதி கட்சிக்கு குண்டர்கள் கட்சி என்கிற இமேஜ் உண்டு. அதனைத் தகர்த்தார் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ். அடுத்து, உ.பி-யில் சுமார் 1 கோடியே 68 லட்சம் புதிய வாக்காளர்கள் வந்தனர். இந்த இளம் வாக்காளர்களை பிடிக்கத்தான் ராகுல் களம் இறங்கினார். ஆனால், இதில் வெற்றி பெற்றது அகிலேஷ்.

ராகுல் காந்தியுடன் பணக்காரப் பட்டாளம் கூடவே சென்றது. இந்தப் பட்டாளம், ராகுலை உ.பி. ஸ்டைலுக்கு மாறும்படி யோசனை சொல்லியது. 'சின்னப் பையனாகவும் சாஃப்ட்டாகவும் இருப்பதால் யாரும் உங்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. கொஞ்சம் கோபமாகவும் ஸ்டைலாகவும் இருந்தால்தான் இளைஞர்கள் விரும்புவார்கள்’ என்று சொல்லப்பட்ட ஆலோசனைகளை, அப்படியே செய்தார் ராகுல். தாடி வைத்தார். ஹெலிகாப்டரில் பறந்தார். தலித் வீட்டில் சாப்பிட்டார். தன்னை ஒரு கோபக்காரர் என்று காட்டுவதற்காக பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கையைக் கிழித்து எரிந்தார்.

ஆனால், அகிலேஷ் யாதவ் கோபப்படவில்லை. சிரித்தபடியே வலம் வந்தார். அவரது பால்வடியும் முகத்தைக் கண்ட மக்கள் அவருடைய கட்சி மாறிவிட்டது என்று நம்பினார்கள். அவருடன் சென்றவர்கள் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படித்த ஏழை மாணவர்கள். இவர்களோடு சைக்கிளில் சுமார் 250 கிலோமீட்டர் சென்றார். இந்த அணுகுமுறையைத்தான் இளம் வாக்காளர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் விரும்பினர். இதனால், பி.ஜே.பி-க்கு கிடைக்கும் நகர்ப்புறத்து மேல்ஜாதி வாக்குகளும் கூட சமாஜ்வாதி கட்சிக்கு கிடைத்தது. வயதாகி நடக்க முடியாமல் ஹெலிகாப்டரில் போன முலாயம் சிங் முதல்வரானாலும், தந்தைக்குக் கிடைத்த பதவிக்கு மகனே காரணம் என்று சொல்லலாம்.

  கேரளா மாதிரி பஞ்சாபிலும் ஆளும்கட்சி ஒரு போதும் மீண்டும் பதவிக்கு வந்தது இல்லை. இம்முறையும் ஆளும் அகாலித்தளக் கட்சிக்கு எதிரான அலை கடுமையாக இருந்தது. கூட்டணிக் கட்சியில் இருந்த பி.ஜே.பி. அமைச்சர்கள் ஊழல் செய்து பதவியை விட்டு விலகினர். ஆனால், இங்கு முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் பாதல் மீண்டும் முதல்வராகக் காரணம் அவருடைய மகன் சுக்பிர் சிங் பாதல்.

பஞ்சாபில் இந்துக்கள் ஓட்டு பி.ஜே.பி-க்கு கிடைக்கும். பணக்காரர்களான ஜாட் சீக்கியர்கள் வாக்குகளும் கிராமப்புற வாக்குகளும் அகாலிதளக் கட்சிக்குக் கிடைக்கும். பிற்

படுத்தப்பட்ட சீக்கியர்கள், தலித் சீக்கியர்கள், ஜாட் அல்லாத சீக்கியர்கள் வாக் குகள் காங்கிரஸின் வாக்கு வங்கியாக இருந்தது. ஆனால், உ.பி. மாதிரி இங்கும் சுக்பிர் சிங் செயல்பட்டார். ஜாட் அல்லாதவர்களுக்கும் தேர் தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். தன்னுடைய கட்சியிலும் இந்துக்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். இப்படி சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு டிக்கெட் கொடுக்கப்பட்டது. கோதுமை மாவு, பருப்பு இலவசத் திட்டங்களையும் கொண்டு வந்தார். முலாயம் சிங் மாதிரி பிரகாஷ் சிங் பாதலுக்கும் உடல்நிலை சரி இல்லை. ஆனால், சுக்பிர் சிங்கின் சிரித்த முகம் தந்தை யை மீண்டும் ஆட்சியில் அமரவைத்துள்ளது. இதனால், கடுகடுவென இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான அமரீந்தர் சிங் முகம் எடுபடவில்லை.

அப்பாக்களை சி.எம். ஆக்கிய மகன்கள்!

கோவாவில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் முதல்வர் திகம்பர் காமத் மீது கனிமஊழல் புகார் இருந்ததால், ஆளும் கட்சிக்கு எதிரான அலை கடுமையாக இருந்தது. இங்கு காங்கிரஸுக்கு கிறிஸ்தவர்கள் வாக்குகளும் பி.ஜே.பி-க்கு இந்துக் கள் ஓட்டுக்களும் வழக்கமாகக் கிடைக் கும். பி.ஜே.பி. தலை வரும் முன்னாள் முதல்வருமான மனோகர் பாரிக்கர் இந்த ஊழலை வெளி ப்படுத்தியதால், காங்கிரஸின் வாக்கு வங்கியான கிறிஸ்தவ ஓட்டுக்கள் சிதறிப்போனது. பி.ஜே.பி. என்ற அமைப்பையும் தாண்டி ஐ.ஐ.டி பட்டதாரியான பாரிக்கரின் முயற்சிதான் பலமான கிறிஸ்தவ வாக்குவங்கியின் பின்னணியில் இருந்த திகம்பரை வீட்டுக்குப் போகவைத்தது.

அப்பாக்களை சி.எம். ஆக்கிய மகன்கள்!

உத்தரகாண்டில் முதல்வராக இருந்த ரமேஷ் புக்கிரி, ஊழல் குற்றச்சாட்டில்  நீக்கப்பட்டார். ஏற்கனவே ஒரு முறை முதல்வராக இருந்த கந்தூரி மீண்டும் முதல்வர் ஆனார். ஆனால், கந்தூரிக்கும் ரமேஷ் புக்கிரியாலுக்கும் ஏற்பட்ட பனிப்போர்தான் உத்தரகாண்ட்டின் இழுபறிக்குக் காரணமே தவிர, ஆளும் கட்சிக்கு எதிரான அலையை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது என்று சொல்ல முடியாது.

அப்பாக்களை சி.எம். ஆக்கிய மகன்கள்!

இதேமாதிரிதான் மணிப்பூரிலும் நடந்தது. மணிப்பூர்வாசிகளான மைட்டீஸ்களுக்கும் இதே மாநிலத்தில் வசிக்கும் நாகா கிறிஸ்தவர்களுக்கும் இடையே பெரும் போட்டி உண்டு. இம்மாநில கிறிஸ்தவர்கள் கிரேட்டர் நாகலாந்து கேட்கின்றனர். இதனால் பெரும்பான்மை மைட்டீஸ் இந்துவைச் சேர்ந்தவர்கள் அவர்களது இனத்தைச் சேர்ந்த ஒக்ராம் இபாபி சிங் மீண்டும் முதல்வர் ஆனார்'' என்று விரிவாகப் பேசினார்.

இந்த வெற்றி தோல்வி குறித்து 'தி டெலிகிராஃப்’ ஆசிரியர் மானனி சாட்டார்ஜி என்ன சொல்கிறார்?

''இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் மத்திய அரசுக்கு பெரும்

அப்பாக்களை சி.எம். ஆக்கிய மகன்கள்!

பாதிப்பு இல்லை. பாராளுமன்றத் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தலையும் மக்கள் தனித்தனியாக பார்க்க தொடங்கி உள்ளனர். அதுவும் உ.பி. போன்ற மாநிலங்களில் மண்டல் கமிஷனுக்கு அடுத்து, அங்கு மாநிலக் கட்சிகளை ஆதரிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. தேசியக் கட்சிகளுக்கு இந்த மாநிலங்களில் தகுந்த தலைமை இல்லை. அதனால், மாயாவதிக்கு மாற்று முலாயம் என்று முடிவு செய்துள்ளனரே தவிர காங்கிரஸையோ, பி.ஜே.பி-யையோ அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயத்தில் சட்டமன்றத் தேர்தல் நிலையே வரும் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று சொல்ல முடியாது. அதில் காங்கிரஸுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையேதான் போட்டி இருக்கும். இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு கூடுதலாகவே வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், 60 இடங்களாவது கிடைக்கும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது. இப்போது காங்கிரஸுக்கு உடனடிப் பிரச்னை ஜனாதிபதி தேர்தல்தான். மாநிலக் கட்சிகளின் வெற்றி மூலம் கடந்த முறை மாதிரி தாங்கள் நினைக்கும் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி ஜெயிக்க வைக்கமுடியாது. அந்த வகையில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய தோல்வி'' என்றார்.

அடுத்து குஜராத், டெல்லி மாநிலத் தேர்தல் வரப்போகிறது. காங்கிரஸ், பி.ஜே.பி-க்கு இடையே இப்போதே பலே போட்டி கிளம்பி விட்டது.

- சரோஜ் கண்பத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism