Published:Updated:

போராட்டத்தை ஒடுக்க பொய் வழக்கு!

கொளத்தூர் மணியின் கூடங்குள ஆவேசம்

##~##

கூடங்குளம் அணு உலையில் மின்சாரத் தயாரிப்புக்கான பணிகள் ஒரு பக்கம் வேகம் பிடிக்கையில், அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்களைக் கைது செய்வதில் அதைவிட வேகம் காட்டுகிறது காவல்துறை. போராட்டக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், ராஜலிங்கம் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

இப்போது, போராட்டத்துக்குப் பின்னணியில் இருந்து ஆதரவு கொடுப்பவர்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை கொடுக்கும் வகையில், முகிலன், சதிஷ்குமார், வன்னி அரசு ஆகியோரைக் கைது செய்து, 'நக்ஸல்’ முத்திரை குத்தி உள்ளது போலீஸ்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

போராட்டக் குழுவினருடன் நீண்ட காலம் தங்கி இருந்தவர் முகிலன். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உதயகுமாரன், புஷ்பராயன் மீது தாக்குதல் நடந்தபோது, அவர்களைக் காப்பாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர். அவர், தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில், போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

போராட்டத்தை ஒடுக்க பொய் வழக்கு!

அதன்பிறகு, சதிஷ்குமார் என்பவரை போலீ ஸார் கைது செய்தனர். இவர், நெல்லையில் கடந்த 16-ம் தேதி வைகோ, சீமான் உள்ளிட்டோர் பங்கேற்ற, கூடங்குளம் அணு உலைக்கு எதி ரான

போராட்டத்தை ஒடுக்க பொய் வழக்கு!

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, கைது ஆனார். அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். எல்லோருடனும் வெளியே வந்த சதிஷ்குமாரை மட்டும் போலீஸார் வலுக்கட்டாயமாக ஜீப்பில் தூக்கிப் போட்டுச் சென்றதாகச் சொல்கிறார்கள். அவர் எங்கே கொண்டு செல்லப்பட்டார் என்பதே மர்மமாக இருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

இந்தத் தகவல், திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த வைகோ, கொளத்தூர் மணி, சீமான், வேல்முருகன் உள்ளிட்டோருக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே, கொதிப் படைந்து குரல் கொடுத்த பிறகே, சதிஷ்குமார் பற்றிய விவரங்களை போலீஸார் தெரிவித்தனர். அவரை உடனடியாக நாங்குநேரி நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி சிறை க்குக் கொண்டு சென்றனர்.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் வன்னி அரசுவைக் கைது செய்ய முடிவு எடுத்தது போலீஸ். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளரான வன்னி அரசுவைத் தேடியது போலீஸ். அவர் சென்னைக்குச் சென்றுகொண்டு இருப்பதாகத் தகவல் கிடைக்கவே, நள்ளிரவில் ராஜபாளையத் தில் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

அடுத்தடுத்து நடக்கும் கைது நடவடிக்கைகள் குறித்துப் பேசிய பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த

போராட்டத்தை ஒடுக்க பொய் வழக்கு!

கொளத்தூர் மணி, ''கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்பதற்காக, அவர் களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக அவதூறுக் குற்றச்சாட்டுகளை பரப்பினார்கள். அது எடுபடவில்லை. அதனால் போராடும் மக்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் இறங்கி இருக்கின்றன. இதற் காகவே முகிலன், சதிஷ்குமார், வன்னி அரசு ஆகியோரைக் கைது செய்து இருக்கிறார்கள் என சந்தேகிக்கிறோம்.

முகிலனிடம் இருந்து சதிஷ்குமார் எழுதிய கடிதத்தைக் கைப்பற்றியதாக கட்டுக் கதையைக் கிளப்புகிறார்கள். அந்தக் கடிதத்தில், 'காந்திய வழியிலான போராட்டம் சரிப்பட்டு வராது. அதனால் கூடங்குளம் அணு உலையைக் குண்டுவைத்துத் தகர்ப்போம். அதற்கு வன்னி அரசு எல்லா உதவிகளையும் செய்வார்’ என்று எழுதப் பட்டு இருந்ததாம். இப்படி ஒரு வடிகட்டிய பொய்யைப் பரப்புவதன் மூலம் இடிந்தகரையில் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் சாமன்ய மக்களை மாவோயிஸ்ட் போல சித்திரிக்க நினைக்கிறார்கள். போலீஸாரின் இந்தச் செயலை ஒட்டுமொத்தத் தமிழகமும் கண்டிக்க வேண்டும்'' என்றார் காட்டமாக.  

காவல்துறை வட்டாரத்தில் பேசினோம். ''அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது, சட்ட விரோதமாகக் கூடுதல் போன்ற பிரிவுகளில் கூடங்குளம் காவல் நிலையத்தில் முகிலன், சதிஷ்குமார், வன்னி அரசு ஆகியோர் மீது கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வழக்குகளின் அடிப்படையில்தான்  கைது செய்து இருக்கிறோம். சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க ஏற்பாடு நடக்கிறது. அதன் பிறகே முழுமையான தகவல்கள் தெரியும்'' என்றனர். கூடங்குளம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் சிலர் பேசிய வார்த்தைகள் ஆளும் கட்சியையும் போலீஸையும் அதிகமாகத் தாக்குவது போல இருந்ததாம். அதனால்தான் இந்தக் கைது நடவடிக்கைகள் என்றும் சொல்லப்படுகிறது.

நடப்பதைப் பார்த்தால், இனி கைதுகளுக்குப் பஞ்சம் இருக் காது.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்