Published:Updated:

சிக்னல் எந்திரம் எரிந்தது: தென் மாவட்ட ரயில்கள் பல மணி நேரம் தாமதம்

மதுரை: மதுரை மாவட்டம், கூடலூர் அருகே சிக்னல் எந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த 11 ரயில்கள் தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

கூடலூர் அருகே இன்று காலை திடீரென சிக்னல் எந்திரம் தீப்பிடித்து எரிந்தது. இதனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்பட 11 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப அதிகாரிகள் விரைந்து வந்தனர். பல நேரத்திற்கு பிறகு சிக்னல் எந்திரம் சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன.

##~~##
சென்னை எழும்பூருக்கு காலை 6.40 மணிக்கு வந்து சேர வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் சுமார் 3 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.
இதேபோல் மற்ற ரயில்களும் தாமதமாக வந்ததால் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.