Published:Updated:

120 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

120 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
120 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சேலம்: மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால், 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 

120 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜர்சாகர் அணைகள் நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம், 118 அடியை தொட்டுள்ளது. அணையின் கொள்ளளவு 89 புள்ளி 84 டி.எம்.சி.யாக உள்ளது.

##~~##
வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் உபரி நீரும், கால்வாய் வழியாக பாசனத்திற்காக 40 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
மொத்தம் 60 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.