Published:Updated:

`ஆன்லைன் மூலம் 18 லட்சம் பேர் தி.மு.க-வில் சேர்ந்துள்ளனர்!’ -துரைமுருகன்

துரைமுருகன்
துரைமுருகன்

`சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை’’ என்கிறார் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்.

வேலூர், சேண்பாக்கம் பகுதியில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கிவைத்து உறுப்பினர் அட்டையை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ``பொதுச்செயலாளர் பதவி என்பது சாதாரணமானது அல்ல. சுமார் இரண்டு கோடிப் பேர் இருக்கும் கட்சியில் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் ஆகியோர் இருந்த இடத்தில் என்னை உட்காரவைத்திருக்கிறார்கள்.

துரைமுருகன்
துரைமுருகன்

அதற்குக் காரணம், காட்பாடி தொகுதியில் இருக்கும் நீங்கள் தந்த ஆதரவுதான். காட்பாடி தொகுதியில் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்து எனக்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

`தேர்தல் நேரத்தில் கூட்டணி உடையலாம்!’ - துரைமுருகன் சூசகம்

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ``ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை மூலம் இதுவரை 18 லட்சம் பேர் தி.மு.க-வில் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆதார் அட்டையில் தமிழ் மொழி நீக்கப்பட்டது குறித்து தி.மு.க உறுப்பினர்கள் மூலமாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்.

துரைமுருகன்
துரைமுருகன்

கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை’’ என்றவரிடம், `7.5 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்காவிட்டாலும் பாதிப்பு இல்லை என்று பா.ஜ.க-வினர் கூறுகிறார்களே?’’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துரைமுருகன்,``கொரானாவால்கூட பாதிப்பு இல்லை என்றுதான் பி.ஜே.பி சொல்கிறது’’ என்று தனது பாணியில் நகைத்துவிட்டுச் சென்றார்.

அடுத்த கட்டுரைக்கு