Published:Updated:

தெலங்கானாவில் இன்று செயற்குழுக் கூட்டம் தொடக்கம்! - தென் மாநிலங்களைக் குறிவைக்கும் பாஜக?!

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்

தெலங்கானாவில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தை பா.ஜ.க-வுக்கு புதிய ஆற்றலுக்கான கூட்டமாகக் கருதுகின்றனர்.

தெலங்கானாவில் இன்று செயற்குழுக் கூட்டம் தொடக்கம்! - தென் மாநிலங்களைக் குறிவைக்கும் பாஜக?!

தெலங்கானாவில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தை பா.ஜ.க-வுக்கு புதிய ஆற்றலுக்கான கூட்டமாகக் கருதுகின்றனர்.

Published:Updated:
பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்

தெலங்கானாவில் இன்று பா.ஜ.க-வின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஹைதராபாத் வருகைதரும் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தெலங்கானா பகுதியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தை பா.ஜ.க-வுக்கு புதிய ஆற்றலுக்கான கூட்டமாகக் கருதுகின்றனர்.

தற்போது 18 மாநிலங்களை ஆளும் வகையில் பா.ஜ.க வலுப்பெற்றுவருகிறது. எனவே, பா.ஜ.க-வின் இந்தச் செயற்குழுக் கூட்டத்துக்கு 18 முதல்வர்கள், துணை முதல்வர்கள், அனைத்து மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகள் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளனர்.

பாஜக
பாஜக

இந்தச் செயற்குழுக் கூட்டம் தொடர்பாக மத்தியப் பிரதேசத்துக்கான பா.ஜ.க பொறுப்பாளர் பி.முரளிதர் ராவ் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "காங்கிரஸ், மற்ற அனைத்து பிராந்தியக் கட்சிகளில் இருக்கும் வாரிசு அரசியலுக்கு எதிராக பா.ஜ.க-வின் போர் தொடரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

மேலும், வரவிருக்கும் குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். தென்னிந்தியா, குறிப்பாக தெலங்கானா தொடர்பான சில விவாதங்கள் இருக்கும். பா.ஜ.க-வின் தற்போதைய வளர்ச்சி மற்றும் பிந்தைய திட்டங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெறும்" என்று தெரிவித்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமீபத்தில் நடந்து முடிந்த ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றி, பா.ஜ.க-வுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்திருக்கிறது. மிகுந்த நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள, பா.ஜ.க மேலிடம் தேசிய செயற்குழுக் கூட்டத்தை, செல்வாக்குமிக்க வட மாநிலங்களில் நடத்துவதைத் தவிர்த்துவிட்டு, தெலங்கானாவைத் தேர்வு செய்திருக்கிறது. இதில், தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் தென்னிந்தியாவில் கவனம் செலுத்தும்விதமாக தெலங்கானா தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இரண்டு நாள்கள் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்துக்கு இன்று பிற்பகல் பிரதமர் மோடி வருகிறார். ஹைதராபாத் வரும் பிரதமர் மோடியை வரவேற்க தெலங்கானா முதல்வர், அமைச்சர் டி.ஸ்ரீனிவாச யாதவை நியமித்திருக்கிறார். கடந்த ஐந்து மாதங்களில் 3-வது முறையாக தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர், தெலங்கானா வரும் பிரதமரைச் சந்திக்காமல் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே முதல்வர் கே.சி.ஆர்., தெலங்கானா வரும் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்க விமான நிலையத்துக்குச் செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் 2023-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் தெலங்கானாவில் நடைபெறும் இந்த செயற்குழுக் கூட்டம் அரசியல் கவனம் பெற்றிருக்கிறது.