Published:Updated:

விருதுநகரில் ம.தி.மு.க. மாநாடு தொடங்கியது!

விருதுநகரில் ம.தி.மு.க. மாநாடு தொடங்கியது!
விருதுநகரில் ம.தி.மு.க. மாநாடு தொடங்கியது!

விருதுநகரில் ம.தி.மு.க. மாநாடு தொடங்கியது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விருதுநகர்: விருதுநகரில் ம.தி.மு.க. மாநாட்டை இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.

விருதுநகரில் ம.தி.மு.க. மாநாடு தொடங்கியது!

அண்ணாவின் 105-வது பிறந்தநாளையொட்டி ம.தி.மு.க. சார்பில் விருதுநகரில் மாநில மாநாடு இன்று காலை தொடங்கியது. விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் உள்ள சூலக்கரையில் இந்த மாநாட்டிற்காக 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

விருதுநகரில் ம.தி.மு.க. மாநாடு தொடங்கியது!

இன்று காலை 8 மணிக்கு அபுபக்கர் குழுவினரின் கலை நிகழ்ச்சியுடன், மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாநாட்டை தொடங்கி வைத்தார். இமயம் ஜெயராஜ் தலைமையில் சிவகங்கை மாவட்ட செயலாளர் புலவர் சிவந்தியப்பன் மாநாட்டு பந்தலை திறக்க, விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்று பேச, முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.

விருதுநகரில் ம.தி.மு.க. மாநாடு தொடங்கியது!

அதனை தொடர்ந்து இலங்கையில் இனப்படு கொலை கண்காட்சியை குமரி விஜயகுமார், அணுஉலை பேரழிவு என்ற அரங்கை டாக்டர் ரொஹையா, மீனவர் கொடுந்துயர் அரங்கை பேராசிரியை பாத்திமா பாபு திறந்து வைத்தனர்.

இந்த மாநாட்டில், பாராளுமன்ற தேர்தல், இலங்கையில் நடந்த இனப் படுகொலை, காமன்வெல்த் மாநாடு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

##~~##
மாலை 4 மணிக்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைச்சாமி, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்தியா, துரை பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசுகிறார்கள். அதனை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த மாநாட்டிற்கு, மாவட்ட, மாநில நிர்வாகிகள் உள்பட லட்சக்கணக்கான ம.தி.மு.க. தொண்டர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து கலந்து கொண்டுள்ளனர்.

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு