Published:Updated:

அமராவதி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் நக்சல் நடமாட்டம்?

அமராவதி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் நக்சல் நடமாட்டம்?

அமராவதி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் நக்சல் நடமாட்டம்?

அமராவதி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் நக்சல் நடமாட்டம்?

அமராவதி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் நக்சல் நடமாட்டம்?

Published:Updated:
அமராவதி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் நக்சல் நடமாட்டம்?

கோவை: அமராவதி வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவில் துப்பாக்கியுடன் 2 பேர் உருவம் பதிவாகியுள்ளது. இவர்கள் நக்சல் கூட்டத்தை சேர்ந்தவர்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அமராவதி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் நக்சல் நடமாட்டம்?

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது அமராவதி வனப்பகுதி. இந்த பகுதியில் வனவிலங்குகளை கண்காணிக்கவும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை அறியவும் வனத்துறையினரால் 18 இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் இருந்தால் தானாகவே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் இந்த கேமராவை அவ்வப்போது வனத்துறை அதிகாரிகள் சோதித்து கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் விலங்குகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்வர்.

இந்நிலையில், அண்மையில் இந்த கேமராவில் பதிவான புகைப்படங்களை சோதித்த வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். காரணம் கேமராவில் துப்பாக்கி ஏந்திய 2 பேர் நடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது தான். திண்டுக்கல் வன எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கேமராவில் இந்த புகைப்படம் பதிவாகி இருந்தது.

இவர்கள் வேட்டையாட வந்தவர்களா? அல்லது சந்தன மரம் உள்ளிட்டவற்றை கடத்த வந்தவர்களா என வனத்துறையினர் விசாரித்தனர். ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியாததையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கியுடன் வனத்தில் திரிந்தவர்கள் நக்சல்களாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~~##
இது குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் தெரிவிக்கும் நபர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நக்சலைட்டுகள் பற்றிய தகவலை 96558 19427, 94875 43112 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மர்ம மனிதர்கள் ஊடுருவல் காரணமாக மஞ்சம்பட்டி, தளிஞ்சி, கிளாவயல் ஆகிய இடங்களில் மேலும் ரகசிய கேமராக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாருடன், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ச.ஜெ.ரவி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism