Published:Updated:

''பா.ஜ.க. வயதுக்கு வந்துவிட்டது!''

தாமரை சங்கமத்தில் கலகல

''பா.ஜ.க. வயதுக்கு வந்துவிட்டது!''

தாமரை சங்கமத்தில் கலகல

Published:Updated:
##~##

ழை கெ(£)டுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, வெற்றி அடைந்திருக்கிறது தமிழக பாரதிய ஜனதாக் கட்சி. 'தமிழ்நாட்டில் பி.ஜே.பி. எங்கே இருக்கிறது?’ என்று கேட்​பவர்களை மிரட்டும் வண்ணம், மதுரையில் 'தாமரை சங்கமம்’ என்ற பிரமாண்ட மாநாட்டை நடத்திக் காட்டி விட்டார்கள். 

மே 10-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்க வேண்டிய மாநாடு 12 மணிக்குத்தான் தொடங்கியது. இசை நிகழ்ச்சி, ஆடல் பாடல் மூலம் தொண்டர்களைக் குஷிப்படுத்தினார்கள். பி.ஜே.பி-யின் தோற்றம், வளர்ச்சியை விளக்கும் கண்காட்சியும், பி.ஜே.பி. ஆளும் ஏழு மாநிலங்களின் வளர்ச்சி குறித்த கண்காட்சியும் தமிழ்த் தொண்டர்களுக்குப் புதுசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாட்டுக்குள் அன்னிய முதலீடுகளை வரவேற்றாலும், மாநாட்டுக்குள் அன்னியத் தயாரிப்புகளுக்குத் தடை. தண்ணீர் முதல் குளிர் பானங்கள் வரை அத்தனையும் சுதேசிப் பொருட்கள்தான். மருத்துவ முகாம், குழந்தைகள் பராமரிப்பகம், உணவுக் கூடம், சூரிய சக்தி மின் விளக்கு, நடமாடும் கழிப்பிடம் என்று கச்சிதமான ஏற்பாடுகள். கூட்டத்தை எதிர்பார்த்து, மாநாட்டுப் பந்தலுக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடைகளில் தடுப்புக் கட்டைகள் எல்லாம் கட்டி வைத்து இருந்தார்கள். அதிசயமான உண்மை, அங்கே கூட்டம் சேர​வே இல்லை.

''பா.ஜ.க. வயதுக்கு வந்துவிட்டது!''

பந்தல் நிறையத் தொண்​டர்கள் கூட்டம் இருந்தது. ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் பேசியபோது முக்கியத் தலைவர்கள் யாரும் மேடையில் இல்லை. நிதின் கட்காரி பேசியபோது, வெங்கையா நாயுடு

''பா.ஜ.க. வயதுக்கு வந்துவிட்டது!''

இல்லை. வெங்கையா பேசும்போது, நிதின் இல்லை. சுஷ்மா பேசும்போது, வெங்கையா இல்லை. அத்வானி பேசும்போது, கட்காரியும் இல்லை, வெங்கையாவும் இல்லை. அழைப்பிதழில் பெயர் இருந்தும் மத்தியப் பிரதேச, கர்நாடக முதல்வர்கள் மாநாட்டுக்கு வரவே இல்லை. ஆக, பா.ஜ.க. மாநாட்டில் மேடை நாகரிகம், ரொம்பக் கம்மிதான்.

இரண்டு துரைமுருகன், மூன்று டி.ராஜேந்தர் சேர்ந்தது போல பாடி லாங்வேஜிலும், அடுக்கு மொழியிலும் பேசி மாநாட்டைக் கலகலப்பாக்கினார் முன்னாள் தேசியத் தலைவர் வெங்கையா நாயுடு. அவரது பேச்சை மொழிபெயர்க்க முடியாமல், திணறித்தான் போனார் தமிழிசை சௌந்திரராஜன். 'யு.பி.ஏ. என்றால் உல்டா புல்டா அலையன்ஸ். மன்மோகனுக்கும் சோனியாவுக்கும் இந்த ஆட்சியை எப்படி நடத்துவது என்றே தெரியவில்லை. ஆனால், 29 கட்சிகளைக் கூட்டணியில் வைத்துக்கொண்டு ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக மத்திய ஆட்சியை நடத்திக் காட்டினார் வாஜ்பாய். 50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மூன்று கோடி தொலைபேசி இணைப்புகள், ஆனால், ஐந்து ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் 60 கோடித் தொலைபேசி இணைப்புகள். 50 ஆண்டு  காலமாக ஒரே ஒரு சேனல், அதுவும் உருப்படாத தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. பா.ஜ.க. ஆட்சியில்தான் 600 சேனல்கள் வந்தன. 24 மணி நேர நியூஸ் சேனல்கள் முதல் மிட்நைட் மசாலா வரைக்கும் எத்தனையோ சேனல்கள் வருகின்றன. (மிட்நைட் மசாலா என்பதை, நள்ளிரவுச் செய்திகள் என்று தமிழிசை மொழி பெயர்க்க ஒரே சிரிப்பலை!).

டிரைவர் ஸீட்டில் மன்மோகன் சிங் இருக்கிறார். ஸ்டீயரிங், சோனியா கையில் இருக்கிறது. பிரேக்கோ, கருணாநிதி போன்றவர்களின் கையில் இருக்கிறது. அதனால், இஷ்டத்துக்கு வண்டி ஓடுகிறது. லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். சோனியாவும் மன்மோகன்சிங்கும் சிரிக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். மன்மோகனும் கலைஞரும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸுக்கு எதிரான அலை நாடு முழுவதும் வீசுகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் என்பது நடைமுறைக்கு வரும். ராமர் பாலம் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்படும். கங்கை - காவிரி இணைக்கப்படும். ஸோ, யு.பி.ஏ. அவுட். நோ டவுட்'' என்றார்.

இலங்கை அரசு கொடுத்த பரிசுப் பொருளை பெற்றுக்கொண்டது குறித்துப் பேசிய சுஷ்மா சுவராஜ், 'அவர்கள் பரிசுப் பொருளை எனக்குக் கொடுக்க​வில்லை. இந்திய அரசுக்குத்தான் கொடுத்தார்கள். அதனால், நாடு திரும்பிய அன்றே, டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள அரசுக் கருவூலத்தில் அந்தப் பரிசுப் பொருளை ஒப்படைத்து விட்டேன். இலங்கையில் யாரும் தனிநாடு கேட்கவில்லை. இங்கே இருக்கும் சில தலைவர்கள்தான் இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்' என்றும் குற்றம் சாட்டினார்.

மாநாட்டு நிறைவில், சிறப்புரை ஆற்றிய எல்.கே.அத்வானி, பழங்கதை மட்டுமே பேசி, நிகழ்கால அரசியல் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. 'நல்ல தலைமை, குறிக்கோள், திட்டம், செயல்பாடு ஆகிய நான்கும் இருந்தால், அது போராக இருந்தாலும், தேர்தலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம். தேர்தல் வெற்றி மட்டும் நம் நோக்கம் அல்ல. நல்லாட்சியும், நாட்டின் பாதுகாப்பும்தான் பா.ஜ.க-வின் இலக்கு' என்று முடித்தவருக்கு, வெள்ளிச் செங்கோல் கொடுத்தார்கள்.

மாநாட்டுக்கு மறுநாள் நடந்த மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ''தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சி பெற்று இருப்பதை இந்த மாநாடு நிரூபித்து இருக்கிறது. பா.ஜ.க. வயதுக்கு வந்து விட்டது, அதற்கு அலையன்ஸ் (கூட்டணி) பார்த்துக் கொண்டு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், அதற்குத் திருமணமே செய்து வைத்துவிடும் (ஆட்சிப் பொறுப்பு) முயற்சியில் தலைவர்கள் இருக்கிறார்கள்'' என்று கலகலப்பாக்கினார்.

பி.ஜே.பி-க்குத் திருமணம் நடக்கிறதோ இல்லையோ, நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தமிழகத்தில் நல்ல அலையன்ஸ் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

-கே.கே.மகேஷ்,

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism