Published:Updated:

ரஞ்சிதாவுக்கு காஞ்சியில் இருந்து ஒரு போன்?

நீதிமன்ற மோதலாக மாறும் நித்தி மோதல்!

ரஞ்சிதாவுக்கு காஞ்சியில் இருந்து ஒரு போன்?

நீதிமன்ற மோதலாக மாறும் நித்தி மோதல்!

Published:Updated:
##~##

திலும் கருத்துச் சொல்​லாமல் ஒதுங்கிச் செல்​லும் ஜெயேந்திரர், நித்தியானந்​தா விவகாரத்தில் ரஞ்சிதா குறித்துப் பேச... நீதிமன்றத்தில் நிற்கிறது சிக்கல். 

கடந்த 9-ம் தேதி, ஆன்மிகசுற்றுப்​பயணத்தில் இருந்த ஜெயேந்​திரர், கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்​களைச் சந்தித்​தார். ''மதுரை ஆதீனமாக நித்தியானந்தர் நியமிக்கப்பட்டது சரி​யானது அல்ல. நாங்கள் அதை ஆதரிக்கவும் இல்லை. ஆதீனமாக வருபவர் மொட்டை அடித்து ருத்ராட்சம் அணிந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். ஆனால், நித்தியானந்தர் அப்படிச் செய்யவில்லை. அதோடு, நித்தியானந்​தாவோடு எப்போதும் ரஞ்சிதா என்ற பெண் உடன் இருக்கிறார். இது, ஆன்மிகத்துக்கு எதிரானது. ஆன்மிகவாதிகள் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்று ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டார். அதுதான் இப்போது பற்றி எரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''10 நாட்களுக்குள் ஜெயேந்திரர் இந்தக் கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்'' என்று, நித்தியானந்தர் எச்சரித்தார். '10 நாட்கள் எதற்குப் பொறுக்க வேண்டும்?’ என்று நீதிமன்றப் படி ஏறிவிட்டார் ரஞ்சிதா.

ரஞ்சிதாவுக்கு காஞ்சியில் இருந்து ஒரு போன்?

எழும்பூர், தலைமை மாநகரக் குற்றவியல் நீதிமன்றத்​துக்குக் கடந்த 11-ம் தேதி வந்தார் ரஞ்சிதா.

ரஞ்சிதாவுக்கு காஞ்சியில் இருந்து ஒரு போன்?

போக்குவரத்து நெரிசலில் சிக்கி ரஞ்சிதா வந்து சேருவதற்குத் தாமதமாகிப்போனது. நீதிமன்றத்தில் அழைத்தபோது ரஞ்சிதா வராத காரணத்தால், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மீண்டும் 14-ம் தேதி காலை கோர்ட்டுக்கு வேகமாகவே வந்து சேர்ந்தார். 'என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய ஜெயேந்திரர் மீது, இ.பி.கோ. 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரவீந்திரன், மனு மீதான விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவு போட்டார்.

ரஞ்சிதாவிடம் பேசினோம். ''நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். ஜெயேந்திரர் தேவை இல்லாமல் என்னை வம்புக்கு இழுத்திருக்கிறார். நடிகைதானே... என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டு அமைதியா போயிடுவானு நினைச்​சிட்டார். கண்டிப்பா இந்த விஷயத்தை நான் சும்மா விட மாட்டேன். எப்படி ஊரைக் கூப்பிட்டு என்னைப் பத்தி அவதூறாகப் பேசினாரோ, அதைப் போன்று, 'நான் பேசியது தப்பு’ என்று, அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன்'' என்றார்.

ரஞ்சிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முருகைய்யன்​ பாபு, அப்ரார் அஹமது ஆகியோரிடம் பேசினோம். ''ரஞ்சிதாவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஜெயேந்திரர் பேசி இருக் கிறார். அந்தப் பேச்சு ரஞ்சிதாவின் மனதை ரொம்பவே பாதித்து விட்டது. அதனால் எந்தச் சூழ்நிலையிலும் வழக்கை வாபஸ் வாங்க மாட்டோம்'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.

ஜெயேந்திரரின் கருத்தை அறிய,  காஞ்சி மடத்தைப் பல முறை நாம் தொடர்பு​கொண்​டோம். இது பற்றி அவர் பேச விரும்பவில்லை என்றதும், மடத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

ரஞ்சிதாவுக்கு காஞ்சியில் இருந்து ஒரு போன்?

''ரஞ்சிதாவைப் பற்றி தேவை இல்லாமல் பேசிவிட்டோமோ என்று, ஜெயேந்திரர் இப்போது வருத்தத்தில் இருக்கிறார். மடத்துக்கு வேண்டப்பட்ட டெல்லியைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகர் ஒருவரும் இந்தப் பேச்சை ரசிக்கவில்லை. அதனால், ஜெயேந்திரருக்குப் போன் செய்து அந்த முக்கியப் பிரமுகர் கோபத்தோடு பேசி இருக்கிறார். அதில் ஜெயேந்திரர் ரொம்பவே அப்செட். அதனால்தான் யாரையும் சந்திப்பதைத் தவிர்க்கிறார். ஆனால், இந்த விஷயத்தில் ஜெயேந்திரரை முடக்கிவிடலாம் என்று சிலர் திட்டம் போட்டு பல்வேறு காரியங்களைச் செய்கிறார்கள். இந்த சலசலப்புக்கு எல்லாம் காஞ்சி மடம் அஞ்சாது. எல்லாப் பிரச்னைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்'' என்றனர்.

இதற்கிடையில், ரஞ்சிதாவைத் தொடர்புகொண்ட காஞ்சி மடத்து நிர்வாகி ஒருவர், 'பேசியது தவறு என்பதை ஜெயேந்திரர் உணர்ந்து கொண்டார். உங் களிடம் போன்ல வருத்தம் தெரிவிக்கத் தயாராக இருக் கிறார்.அதனால் நீங்க வழக்கை வாபஸ் வாங்கிடுங்க..’ என்று கேட்டுக்கொண்டாராம். ஆனால் ரஞ்சிதாவோ, 'பிரஸ் மீட் வெச்சு என்னை அசிங்கப்படுத்திட்டு, போன்ல மன்னிப்பு கேட்பாரா..? பிரஸ் மீட் நடத்தி மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க, பிறகு பார்க்கலாம்’ என்று போனை கட் செய்து விட்டாராம்.

- கே.ராஜாதிருவேங்கடம், எஸ்.கிருபாகரன்

படங்கள்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism