Published:Updated:

இலங்கை காமன்வெல்த் மாநாடு: உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றம் அனுமதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இலங்கை காமன்வெல்த் மாநாடு:  உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றம் அனுமதி!
இலங்கை காமன்வெல்த் மாநாடு: உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றம் அனுமதி!

இலங்கை காமன்வெல்த் மாநாடு: உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றம் அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இலங்கை காமன்வெல்த் மாநாடு:  உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றம் அனுமதி!

சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிராக தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தை சேர்ந்த தியாகு என்பவர், வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சென்னை கடற்கரை சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த தியாகுவிற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்தது. இதனையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.

அவரது மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடையாது என்ற அரசின் நிலையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாகவும், அதே சமயம் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இன்று மாலைக்குள் தியாகுவிற்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதே சமயம் உண்ணாவிரதம் இருக்கும் நாள், எத்தனை மணி நேரம் மற்றும் எவ்வளவு பிரமுகர்கள் வருவார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை தியாகு, நீதிமன்றத்திற்கு

##~~##
தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

காமன்வெல்த் மாநாடு: வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு