Published:Updated:

''சோனியாவிடம் மன்னிப்புக் கேட்டேன்!''

சங்மா ரேஸ்

''சோனியாவிடம் மன்னிப்புக் கேட்டேன்!''

சங்மா ரேஸ்

Published:Updated:
##~##

குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசியக் கட்சிகள் இன்னமும் குழம்பிய நிலையில் இருக்கும்போது, ஆதரவு வேட்டையைத் தொடங்கி விட்டார் பி.ஏ.சங்மா. திடீர் வேட்பாளராகக் களத்தில் குதித்துப் பரபரப்பாக இயங்கி வரும் சங்மாவை டெல்லியில் சந்தித்தோம். 

''உங்கள் பெயரை நீங்களே முன்​மொழிந்து​​கொண்டீர்கள். மேலும், ஒரு குறிப்​பிட்ட இனத்தின் சார்பாகவும் போட்டி இடுகிறீர்கள். இது சரிதானா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மே 9-ம் தேதி, பழங்குடிஇனப் பிரதிநிதிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், வரும் ஜனாதிபதி தேர்தலில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க அனைத்து அரசியல் கட்சியினரிடமும் வலியுறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஏனென்றால், கடந்த 60 வருடக் குடியாட்சியில் எங்களைத் தவிர அனைத்து வகுப்பு மக்களின் பிரதிநிதிகளும் இந்தப் பதவியை வகித்து விட்டனர். அதனால், எங்கள் நிலைப்பாட்டை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்

''சோனியாவிடம் மன்னிப்புக் கேட்டேன்!''

எழுதினோம். இதில், தமிழக முதல்வர் மேடம் ஜெயலலிதாவும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் எங்கள் வேண்டுகோளுக்கு உடனடியாக மதிப்புக் கொடுத்தனர். இதையட்டித்தான், மேடம் ஜெயலலிதாவைச் சந்திக்கச் சென்றோம். பல முக்கியப் பழங்குடி இனத் தலைவர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலைக் கொடுத்தோம். அந்தப் பட்டியலைப் பார்த்த தமிழக முதல்வர்தான், 'இந்தப் பதவிக்குப் பொருத்தமான பழங்குடி இனத் தலைவர் நீங்கள்தான்’ என்று என் பெயரைக் குறிப்பிட்டார். அதனால் என் பெயரை நான் முன்மொழியவில்லை, மேடம் ஜெயலலிதாதான் அதைச் செய்தார்.

நான் பழங்குடி இன வேட்பாளராகப் போட்டி​யிடுவதை இன ரீதியாகப் பார்க்கக் கூடாது. ஆனால், ஒரு குறிப்பிட்ட இனத்த வருக்கு (பழங்குடி) அனைத்துத் தகுதிகளும் இருக்கும்போது, அவர்களைப் புறக்கணிக்​கக் கூடாது என்பதற்காகவே இனத்தை முன்னிறுத்து​கிறோம்.''

''உங்களுக்கு வேறு யாருமே ஆதரவு கொடுப்பதாகத் தெரியவில்லையே?''

''எனக்கு மேடம் ஜெயலலிதாவைப் பல ஆண்டுகளாகத் தெரியும். நான் மத்திய அமைச்​சராக இருந்த நேரத்தில், அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மேடம் ஜெயலலிதா என்னை ஆதரிக்க முன்வருகிறார் என்றால், அதற்கு சரியான அடிப்படைக் காரணம் இல்லாமல் இருக்க முடியாது. சரியான ஹோம் ஒர்க் செய்யாமல் அவர் எதிலும் இறங்க மாட்டார். இதில் வெற்றி பெற முடியும் என்கிற நம்பிக்கையும் உறுதியும் இருந்த காரணத்தால்தான் என்னை முன்மொழிந்தார். அவர் என் பெயரை அறிவித்த உடனே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் எனக்கு ஆதரவு கொடுத்து விட்டார்.

அடுத்து முலாயம் சிங் யாதவ், எல்.கே.அத்வானி, பிரகாஷ் சிங் பாதல், பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன், தேவகௌடா போன்றவர்களிடமும் பேசி இருக்கிறார். நாங்களும் பல்வேறு கட்சிகளுடன் தொடர்புகொண்டு பேசி வருகிறோம். ஆதரவு தெரிவித்து இருப்பவர்கள் பற்றி இப்போது வெளியே சொல்ல முடியாது. ஆனால், எங்களுக்குப் போதுமான ஆதரவு இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.''

''சோனியா காந்தியை வெளிநாட்டுப் பிரஜை என்று கடுமையாக விமர்சனம் செய்தீர்கள். இதைத் தாண்​டியும் அந்தக் கட்சி ஆதரவு கொடுக்கும் என்று நம்புகிறீர்களா?''

''எனக்கு சோனியா காந்தி மீது தனிப்பட்ட விரோதம் கிடையாது. அரசியல் சாசனத்தில் இருப்பதை வைத்துத்தான் பிரச்னை எழுப்பினேன். இந்தியா, இறையாண்மை மிக்க நாடு. ஜனாதிபதியாக, பிரதமராகத் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்பதால்தான் சொன்னேன். ஆனால், 2004 தேர்தல் முடிவின்போது என்ன நடந்ததோ தெரியாது. ஆனால், இரண்டாவது முறையாக காங்கிரஸ் அரசு 2009-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நேரத்தில் சோனியா பிரதமராக வாய்ப்பு இருந்தது. அவர் பிரதமராக நினைத்திருந்தால், அப்போது யாராலும் தடுத்திருக்க முடியாது. ஆனால் அவர் முன் வரவில்லை. அதனால் அவரை நான் மிகவும் மதித்து, அவர் வீடு தேடிப்போய் பாராட்டினேன். அவரைப் பற்றி சொன்ன கருத்துகளுக்கு மன்னிப்புக் கோரினேன். நான் சோனியாவுக்கு பெர்சனல் எதிரி அல்ல என்பதால், காங்கிரஸ் எனக்கு ஆதரவு தர வாய்ப்பு இருக்கிறது.

மேடம் ஜெயலலிதா ஏற்கெனவே அத்வானி​யிடம் பேசி இருக்கிறார். நானும் நிதின் கட்காரி, சுஷ்மா, அருண் ஜெட்லி ஆகியோரைச் சந்தித்துப் பேசினேன். முரளி மனோகர் ஜோஷி, அத்வானி போன்ற​வர்​களையும் சந்திக்க இருக்கிறேன். இதுதவிர, சரத் யாதவ், நிதீஷ் குமார் போன்றவர்​களையும் ஏற்கனவே சந்தித்து ஆதரவு திரட்டி இருக்கிறேன். நம்பிக்கையுடன்இருக்கிறேன்!''.  

''ஜனாதிபதி வேட்பாளரான நீங்கள், இந்த நாட்டு மக்களுக்கு  என்ன மாதிரியான  வாக்குறுதி கொடுக்கிறீர்கள்?''

''நாடு இப்போது பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறது. விலைவாசி உயர்வு, அன்னியச் செலாவணிப் பற்றாக்குறை, பணவீக்கம் என்று நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. அதனால், 2014 பாராளுமன்றத் தேர்தல் முடிவு மிகவும் முக்கியமானது. அந்தநேரம் ஜனாதிபதி மாளிகையில் இருப்பவர், அரசியலை நன்கு அறிந்து பக்குவப்பட்டவராக இருக்க வேண் டும். அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவர், அரசின் அன்றாட நிர்வாகத்தில் தலையிட முடியாது. ஆனால், நாட்டின் தலைவர் என்ற முறையில் சில சமயம் நாட்டுக்கு வழிகாட்டவும்,  நிறையவே சீர்திருத்தங்களைச் செய்யவும் முடியும். இப்போது, நாட்டில் ஏராளமான ஊழல் புகார்கள் வருவதால், தேர்தல் சீர்திருத்தம் உட்பட பல மாற்றங்களுக்கு வழிகாட்டலாம். கடவுள் கிருபையால் என் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் இல்லை!' - சந்தோஷ​மாய் சிரிக்கிறார் சங்மா!

- சரோஜ் கண்பத்

படம்: சுபாஷ் பரோலியா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism