Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

• ரிமோட் கன்ட்ரோல் இல்லாத டி.வி... கற்பனை செய்ய முடிகிறதா உங்களால்? 1955-ல் டி.வி. ரிமோட்டைக் கண்டுபிடித்த யூகன் போலே, கடந்த வாரம் இறந்துபோனார். ஜப்பானின் சிகாகோ நகரில் பிறந்து, ஜெனித் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த போலே, ரிமோட்டைக் கண்டுபிடித்தபோது முதலில் யாரும் அதன் இயக்கத்தை நம்பவில்லையாம். ஆயுளின் இறுதியில் போலே வசம் இருந்தது மொத்தம் 18 பொருட்களுக்கான காப்புரிமை. அதில் ஒன்று ஃப்ளாட் டி.வி. ரிமோட். சல்யூட் சார்!

• பெங்களூரு பியூட்டி என்று தீபிகா படுகோனேவை இந்தியாவே கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. ஆனால், அழகி பிறந்தது டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹெகன். 11 மாசக் குழந்தையாக இருக்கும்போது பாப்பாவைத் தூக்கிக்கொண்டு வந்து பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்களாம். டென் மார்க்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

• 'வீரா’, 'தருவு’ என அடுத்தடுத்து இரண்டு படங்களில் ரவி தேஜாவுடன் டாப்ஸி நடித்ததால் கசமுசா எனக் கிசுகிசுக்கிறது ஆந்திரம். இதைப் பற்றிக் கேட்டால், 'அப்படி இல்லை. எனக்கு காமெடி அவ்ளோ பிடிக்கும். ரவி தேஜாவுக்கு நல்லா இந்தி தெரியும். என்கிட்ட அவர் இந்தியில ஜோக் அடிச்சுட்டே இருப்பார். நான் சிரிச்சுட்டே இருப்பேன். அவர் ஒரு ஜீனியஸ். அவரோட ஹ்யூமர் சென்ஸுக்கு நான் நம்பர் ஒன் ரசிகை!’ என்று ஏகத்துக்கும் சிலிர்க்கிறார் டாப்ஸி. ஐ ஸீ!

இன்பாக்ஸ்
##~##

• டைட்டானிக் ஹீரோ லியனார்டோ டி கேப்ரியோவோடு 'தி கிரேட் காட்ஸ்பை’ (The Great Gatsby) என்ற படத்தில் ஒரு காட்சியில் நடிக்கிறார் அமிதாப் பச்சன். ''ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன். பாப்கார்ன் சாப்பிடும்போது ஒவ்வொரு கார்னையும் பார்த்து எடுத்துச் சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், நிச்சயம் நான் வரும் காட்சியை மிஸ் செய்ய உங்களுக்கு அதிக வாய்ப்பு உண்டு!'' என்று ஜாலி கமென்ட் அடிக்கிறார் பிக் பி. பாப்கார்ன் வியாபாரம் படுத்திருமே!

• இந்த முறை டைட்டிலிலேயே விருந்து பரிமாறி இருக்கிறார் வெங்கட் பிரபு. 'பிரியாணி’... இதுதான் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில். 'பிரியாணி - எ வெங்கட் பிரபு டயட்!’ என்பது கேப்ஷனாம்.எ வெங்கட் பிரபு அட்ராசிட்டி!

•  செப்டம்பர் 11... ஹர்பஜன் சிங் - இந்தி நடிகை கீத்தா பஸ்ரா திருமணத்துக்குக் குறிக்கப்பட்ட நாள். கீத்தா பஸ்ரா இங்கிலாந்து வாழ் இந்தியர் என்பதால் திருமணம் லண்டனில். பஞ்சாபில் வரவேற்பு. ஹே பல்லே... பல்லே!

•  ஜனாதிபதி பதவிக்கு ஆளாளுக்கு வரிந்துகட்ட, மக்களவை சபாநாயகர் மீராகுமார் சத்தமின்றி தனது தகுதியை முன்வைத்து ரேஸில் முந்துகிறார். 35 மாதங்களில் சுமார் 28 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்திருப்பதுதான் மீராவின் சாதனைத் தகுதி! என்ன கொடுமை சார் இது?

• 'என்னைக் கொல்வதற்காக சீன உளவுத் துறை, ஓர் இளம் பெண்ணை அனுப்பிஇருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது!' என அதிரவைக்கிறார் தலாய்லாமா. 'அந்த இளம் பெண்ணும் திபெத்தைச் சேர்ந்தவர்தான். என்னிடம் ஆசீர்வாதம் வாங்குவதுபோல நெருங்கி வந்து, தலைமுடி விஷம் மூலம் என்னைக் கொல்வதே திட்டம்!' என்று பேட்டி கொடுத்திருக்கிறார் லாமா. தன் முன் மண்டியிடும் பக்தர்களின் தலைமுடியைத் தொட்டு லாமா ஆசி வழங்குவது வழக்கம். இதனால் இமயமலையில் உள்ள தலாய் லாமாவின் ஆசிரமத்தில் பக்தர்கள் அனைவரையுமே கிடுக்கிப்பிடி சோதனைகளால் துளைத்தெடுக்கிறார்கள். 'திருப்பதி’ பாலிசியை அங்கேயும் கொண்டுவாங்கப்பா!  

• பரபர சர்ச்சைகளுடன் நடந்து முடிந்துஇருக்கிறது பா.ஜ.க-வின் தேசிய மாநாடு. 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, செய்தியாளர்களையும் மோடியே சந்தித்ததில் அத்வானி ரொம்பவே அப்செட். டிசம்பர் மாதம்தான் தலைவர் பதவிக்கான தேர்வு என முடிவெடுத்திருந்த நிலையில், திடீரென முன்கூட்டியே நிதின் கட்காரி இரண்டாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்  சுஷ்மா ஸ்வராஜும் அப்செட். இதனாலேயே இருவரும் மாநாட்டுப் பேரணியில் கலந்துகொள்ளவில்லை.காங்கிரஸுக்கு எதிரி சரியில்லை!

இன்பாக்ஸ்

• மும்பையின் சேரிப் பகுதியில் வாழ்ந்த கல்பனா சரோஜ் இன்று ஆண்டுக்கு சுமார் 300 கோடி ரூபாய் வரவு - செலவு செய்யும்  'காமணி டியூப்ஸ்’ எனும் இரும்புக் குழாய் தயாரிப்பு நிறுவனத்தின் சேர்மன். பிறப்பால் தலித்தான இவர், குழந்தைத் திருமணம் செய்விக்கப்பட்டவர். தன்னுடைய வெற்றிக்குக் காரணம், மறைந்த தன் சகோதரிதான் என்கிறார் கல்பனா. ''வெறும் ஆயிரம் ரூபாய் புரட்ட முடியாமல், மருத்துவமனை சிகிச்சை கிடைக்காமல் இறந்துபோன என் தங்கையின் மரணம்தான் எனக்குப் பணத்தின் மதிப்பை உணர்த்தியது. சாதாரண இரும்பு லேத்தில் ஆரம்பித்த எனது பயணம், இன்று ஆயிரம் பேர் பணிபுரியும் தொழிற்கூடமாக உருவாகி இருக்கிறது!'' என்கிறார் கல்பனா. சலாம் கல்பனா!

•  ரஜினி ஹிட்டின் அடுத்த ரீ-மேக்கில் நடிக்க இருப்பது அநேகமாக விஜய். 'பில்லா’வின் வெற்றி மற்றும் 'பில்லா-2’வின் எதிர்பார்ப்பு அவரை இந்த எண்ணத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. 'பாட்ஷா’ அல்லது 'அண்ணாமலை’. இதில் எது என்பதுதான் கேள்வி. விஜய்யின் சாய்ஸ் அண்ணாமலை. இதற்காக ரஜினியை நேரில் சந்தித்து, தனது ஆசையை நிறைவேற்றும்படி கேட்கப்போகிறாராம். அந்த நாள் உங்க வாழ்க்கையில மறக்க முடியாத நாளா இருக்கும்!

இன்பாக்ஸ்

• 'தாண்டவம்’ படத்தில், எமி ஜாக்சன் ஜாக்கிசான் தங்கச்சியாக வருகிறார். உடனே உற்சாகமாகாதீங்க... அவ்வளவு கடுமையாக ஆக்ஷன் காட்சிகளில் மிகவும் மெனக்கெட்டு நடித்திருக்கிறாராம் எமி. அதிலும் அடுக்குமாடிக் கட்டடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் டூப் போடாமல் கலக்கி இருக்கிறாராம். ஆக்ஷன் குயின்!

• 'முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.’ புகழ் விது வினோத் சோப்ராவின் அடுத்த தயாரிப்பான 'ஃபெராரி கீ சவாரி’ படத்தில் சிவப்பு நிற ஃபெராரி காரும் ஒரு கேரக்டர். அதற்காக சச்சின் உபயோகித்த சிவப்பு ஃபெராரி காரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். படத்தில் இளம் வயது சச்சினைப் போலவே சுருட்டைத் தலைப் பையனைத் தேடிப் பிடித்து நடிக்கவைத்திருக்கிறார்கள். ஃபெராரி சவாரி மாதிரியே படம் நல்லா இருக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism