Published:Updated:

தமிழக அரசியல்: 2021-ல் இணைய வைரல்களுக்கு அதிகம் கன்டென்ட் தந்தவர் யார் தெரியுமா..?

வைரல்களுக்கு அதிகம் கன்டென்ட் தந்தவர் யார்
News
வைரல்களுக்கு அதிகம் கன்டென்ட் தந்தவர் யார்

2021-ம் ஆண்டு தமிழக அரசியலில் இணையத்தைக் கலக்கிய காமெடி அரசியல் சம்பவங்களையும், இணைய வைரல்களுக்கு அதிகம் கன்டென்ட் கொடுத்த அரசியல்வாதிகளின் செயல்பாடுகளைப்பற்றியும் நகைச்சுவையாக ரீவைண்ட் செய்து பார்ப்போம்...

2021-ம் ஆண்டு தமிழக அரசியலில் இணையத்தில் விமானம் ஏறிய வைரல் கன்டென்டுகளை இரண்டாகப் பிரிக்கலாம். முதல் ஆறுமாதம் சட்டமன்ற எலெக்‌ஷன் என்றும், அடுத்த ஆறுமாதம் சர்ச்சை கலெக்‌ஷன் என்றும் சொல்லலாம். இரண்டுகாலக்கட்டத்திலும் இணையத்தைக் கலக்கிய காமெடி அரசியல் சம்பவங்களையும், இணைய வைரல்களுக்கு அதிகம் கன்டென்ட் கொடுத்த அரசியல்வாதிகளின் செயல்பாடுகளைப்பற்றியும் நகைச்சுவையாக ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021!

தி.மு.க-வின் தேசியகீதமாக `ஸ்டாலின்தான் வராரு... விடியல் தரப்போராரு..' என்ற பாடலும், அ.தி.மு.க-வின் `வெற்றிநடை போடும் தமிழகமே..' என்ற பாடலும் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பின. இந்த ஆண்டின் `இணைய வைரலுக்கான தேசிய விருதே' கொடுக்கலாம். யூடியூப், இன்ஸ்டா, ஃபேஸ்புக் என எல்லாதளத்திலும் `ஸ்கிப் ஆட்'டே கொடுக்கமுடியாத அளவுக்கு பொளந்துகட்டிய இந்தப் பாடல்களின் ஒரிஜினல் வெர்ஷன்களைவிட, மீம்ஸ் கிரியேட்டர்களால் உருவாக்கி ஓட்டப்பட்ட ட்ரோல் வீடியோக்களே இணையத்தை ஓவர்டேக் செய்து மக்கள் மனதில் இடம்பிடித்தன. கட்சிகளின் களேபரங்களைப்போல, ஓட்டுப்போட சைக்கிளில்வந்து பெட்ரோல் விலை உயர்வை மறைமுகமாக கலாய்த்த விஜய், மாஸ்க் போடாமல் ஓயாமல் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த ரசிகரின் மொபைலைப் பட்டென்று பிடிங்கிய அஜித், எய்ம்ஸ் செங்கலை தூக்கிவந்து படம்காட்டிய உதயநிதி என சினிமா ஸ்டார்ஸ்களும் போதாக்குறைக்கு கன்டென்டுகளை அள்ளிக்கொடுத்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்படி, தமிழக அரசியலின் முதல் ஆறுமாதங்கள் தேர்தல் மோடில் சென்றுகொண்டிருக்க, சோர்ந்துகிடக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு புதிய கன்டென்ட் கிரியேட்டராக வந்துசேர்ந்தார் முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை. ஜூலை 8-ம் தேதி தமிழக பா.ஜ.க தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்கச் செல்லும் முன்பே, சொந்தக்கட்சிக்காரர்கள் கூட்டிய வரவேற்புக்கூட்டத்தில், `அமித்ஷா பெரிய சங்கி, அவர்கள் வழிவந்த அண்ணாமலை ஒரு சின்ன சங்கி...' என முதல் கலாய்'யை துவக்கிவைத்தார் சக பா.ஜ.க தொண்டர் ஒருவர்.

அண்ணாமலை
அண்ணாமலை

`மின்தடைக்கு காரணம் அனில்குஞ்சுகள்'தான் என தமிழக அரசியலை அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரவைக்க, அதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக மின்சாரத்துறையில் ஆயிரம்கோடிக்கும் மேலாக ஊழல் நடந்திருக்கிறது என குற்றம்சாட்டினார் அண்ணாமலை. `இதுவெறும் அவதூறு, ஆதாரத்தைக் காட்டு இல்லை மன்னிப்புகேள்' என செந்தில்பாலாஜி பொங்கவும், மன்னிப்பெல்லாம் கேட்கமுடியாது இந்தா ஆதாரம் எனக்கூறி `எக்ஸல் சீட்டை' கொடுத்து அதிரவைத்தார் அண்ணாமலை.

அண்ணாமலை - செந்தில் பாலாஜி
அண்ணாமலை - செந்தில் பாலாஜி

அதற்கடுத்த சில மாதங்களிலேயே, கோவையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித்தேர்தலில் வார்டு மெம்பருக்குப் போட்டியிட்ட பா.ஜ.க நிர்வாகி ஒருவர் ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்று தோல்வியடைந்தது இணையத்தில் தாறுமாறாக கலாய்க்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ட்விட்டர் டிரென்டிங்கில் #ஒத்த_ஓட்டு_பாஜக என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.

ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர்
ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர்

இப்படியாக, 2021-ம் ஆண்டில் மட்டும் தனி ஒரு ஆளாக நின்று, ஒட்டுமொத்த மீம்ஸ்கிரியேட்டர்களுக்கும் தொடர்ந்து கன்டென்ட் கொடுத்த நபராக வலம் வந்திருக்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. இவருக்கு அடுத்தபடியாக, இணைய வைரல்களுக்கு அதிகம் கன்டென்ட் தந்தவரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரண்டாம் இடம் வகிக்கிறார்.

ஆணவப்படுகொலையை, குடிபெருமைக் கொலை என்றது, நீதான்டா சங்கி எனக்கூறி தி.மு.க-வுக்கு செருப்பை எடுத்துக் காட்டியது, தாய்மதம் திரும்புங்கள் என்று பேசியது, தமிழ்த்தாய் வாழ்த்தையே மாற்றுவோம் என்றது, சசிகலாவை சந்தித்தது, கே.டி.ராகவன் ஆபாச வீடியோகால், மாரிதாஸ் கைது, ஜெய்பீம் சர்ச்சை என பலவற்றுக்கும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது என எண்ணிலடங்கா கன்டென்டுகளை எப்போதும்போல, எல்லா ஆண்டுகளையும்போல 2021-ம் ஆண்டும் சீமான் வழங்கியிருக்கிறார்.

சீமான்
சீமான்

இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர்.