Published:Updated:

கத்தார் சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை!

விகடன் விமர்சனக்குழு
கத்தார் சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை!
கத்தார் சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை!
கத்தார் சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை!

கத்தார் சிறையில் இருந்த 29 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட் நிறுவனத்தினத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த 29 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கத்தார் நாட்டு கடற்படையினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

மீனவர்களை மீட்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கத்தாரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலனுக்கான மத்திய அமைச்சர் வயலார் ரவி கேட்டுக்கொண்டார்.

##~~##
இந்திய அதிகாரிகளின் நடவடிக்கையையடுத்து செப்டம்பர் 30ஆம் தேதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். விரைவில் அவர்கள் நாடு திரும்ப உள்ளனர்.