நொச்சிக்காடு கிராமத்துப் பெண்களுக்கு 20 தையல் இயந்திரங்களை வாங்கிக் கொடுத்து, அவர்களின் தினசரி வருமானத் துக்கு வழி செய்த 'விகடன் தானே துயர் துடைப்பு அணி’, அதே பெண்களுக்கு இன்னொரு தொழில் வாய்ப்பையும் உரு வாக்கிக்கொடுத்துள்ளது. அது, சானிடரி நாப்கின் உருவாக்கும் பயிற்சி!

மாத விலக்கு நாட்களை நகர்ப்புறப் பெண்கள் சமாளிக்க வீதிக்கு வீதி நாப்கின் கள் கிடைக்கின்றன. ஆனால், வறுமையும் அறியாமையும் சூழ்ந்த கிராமத்துப் பெண் களில் பெரும்பாலானவர்கள் இன்றும் பழைய துணிகள் மூலம்தான் தங்கள் துயரங்களைக் களைகின்றனர். அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாடும் நிலையில் நாப்கின் செலவுகளை அவர்களால் எதிர்கொள்ளவே முடியாது.

இதனாலேயே நாப்கின்களை மிகக் குறைந்த விலையில் தயாரித்து வழங்கும் சுயதொழில் திட்டத்தை

அவர்களிடையே அறிமுகப்படுத்த முடிவெடுத்தோம். கோவையைச் சேர்ந்த முருகானந்தம், தான் உருவாக்கிய நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, பயிற்சி அளிக்க முன்வந்தார். நாம் நம்முடைய பங்களிப்பாக நாப்

கின் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கித் தந்தோம். ''இது என்னாடி இது... புதுசா இருக்கு. ஒன்னியும் புரியலயே!'' - இயந்திரத்தைப் பார்த்ததும் அந்தப் பெண்களின் கண்களில் ஆச்சர்யம். இயந்திரத்தின் உதிரி பாகங்களை ஒன்றிணைக்க கோவை ஜெயஸ்ரீ

இண்டஸ்ட்ரீஸில் இருந்து ராஜன் மற்றும் மேகநாதன் ஆகியோர் நொச்சிக்காடு வந்திருந்தனர். தையல் இயந்திரங்கள் பின்னணி இசை சேர்க்க, இயந்திரத்தின் பாகங்களைப் பொருத்தும் பணி நடந்தது. ஒரு கம்ப்ரஸர், அச்சு இயந்திரம், சீலிங் இயந்திரங்கள் எட்டு, காட்டன் பஞ்சுகளை மிருதுவாக்கும் கிரைண்டர் ஆகியவை இணைக்கப்பட்டன. தயாரிக்கப்பட்ட நாப்கின்களில் கிருமி அண்டாமல் இருக்க புற ஊதாக் கதிர்ப் பெட்டகம் ஒன்றும் இருந்தது.

இல்லத்தரசிகள் கலைவாணி, வளர்மதி, பொறியியல் மாணவி ஜெயபிரதா, பத்தாம் வகுப்பு மாணவிகள் சாந்தி மற்றும் ஷீலா ஆகியோருக்கு முதல் கட்டமாக நாப்கின் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. ''இறுகிய பஞ்சுகளை கிரைண்டரில் அரைத்து மிருதுவாக்கி, அதில் இருந்து 10 கிராம் எடுத்து ஒவ்வோர் அச்சிலும் வைத்து அழுத்தம் தர வேண்டும். அழுத்தப்பட்ட பஞ்சுகளைப் பக்குவமாகப் பிரித்து, அதன் பின் பக்கத்தை நீல நிறத் துணியில் வைத்து ஒட்ட வேண்டும். அடுத்து, பஞ்சுடன் கூடிய நீல நிறத் துணியை காட்டன் உறையில் போர்த்தி சீலிங் இயந்திரம் மூலம் அனைத்துப் பக்கங்களிலும் சீல் செய்ய வேண்டும். கிருமித் தொற்று ஏற்படாமல் இருக்க, சீல் செய்யப்பட்ட சானிடரி நாப்கின்களைப் புற ஊதாப் பெட்டகத்தில் 120 விநாடிகள் வரை வைத்து பின்பு பேக் செய்ய வேண்டும்!'' என்று விளக்கினார் ராஜன்.

''ஒரு நாளைக்குக் குறைந்தது 3,000 நாப்கின்கள் வரை தயாரிக்கலாம். ஒரு நாப்கினின் தயாரிப்புச் செலவு ரூ.1.50. கூடுதலாக ஒரு ரூபாய் வைத்து விற்றாலும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 15 ஆயிரத்துக்குக் குறையாமல் வருமானம் ஈட்டலாம். நீங்கள் வாங்கிக் கொடுத்துள்ள மூலப் பொருட்களைக்கொண்டு 50 ஆயிரம் நாப்கின்கள் வரை தயாரிக்கலாம். பிரசவ காலத்தில் பயன்படும் பெரிய அளவு நாப்கின்களையும் இந்த இயந்திரத்தில் தயாரிக்கலாம்!'' என்றார்.

இயந்திரத்தை உருவாக்கிய முருகானந்தனிடம் பேசினோம். ''வசதி இல்லாத பெண்கள் அழுக்குத் துணிகளையே மறுபடி மறுபடி மாதவிடாய் சமயத்தில் பயன்படுத்தும் போக்கு எனக்கு அதிர்ச்சியாக இருந்துச்சு. கடையில் விற்கும் நாப்கினைப் பிரிச்சுப் பார்த்ததும், நானே நாப்கின் தயாரிக்கலாம்னு முடிவுபண்ணேன். அமெரிக்காவில் இருந்து ஃபைன் மரப் பஞ்சை இறக்குமதி செஞ்சு, ஆறு மாசம் போராடி இந்த இயந் திரத்தை உருவாக்கினேன். 'சமூக மாற்றத் துக்கான சிறந்த கண்டுபிடிப்பாக’ இது அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுக்க 643 இயந்திரங்களைத் தயாரிச்சுக் கொடுத்திருக்கேன்!'' என்றார்.

நொச்சிக்காட்டைச் சேர்ந்த இல்லத்தரசி வளர்மதி நம்மிடம், ''இத்தனை வருஷத்துல நாப்கினை டி.வி. விளம்பரத்துல மட்டும்தான் பார்த்திருக்கோம். அதை வாங்குற வசதிகூடஎங்களுக்குக் கிடையாது. இப்ப அதையே தயாரிக்கிற சக்தியை விகடன் வாசகர்கள் எங்களுக்குக் கொடுத்திருக்காங்க. நொச்சிக்காடு மக்கள் சார்பா ரொம்ப நன்றி!'' என்றார் நெகிழ்வாக.

அத்தனை நன்றிகளும் விகடன் வாசகர் களுக்கே!

- விகடன் 'தானே’

துயர்துடைப்பு அணி