ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஆ.ராசா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழகம் வந்தார். ராசாவுக்கு எப்படி வரவேற்பு?

முக்கியஸ்தர் இல்லாத ஏர்போர்ட்!

'கறை படியாத கரமே... திகாரை வென்ற தீரனே’ என்ற பேனர்கள் ஏர்போர்ட்டை சுற்றிலும் இருக்க.. காதைப் பிளக்கும் மேள தாளங்களுடன் வரவேற்பு அமர்க்களப்பட்டது. மாலை 5.30 மணிக்கே விமானம் தரை இறங்கி விட் டாலும், மற்ற பயணிகள் அனைவரும் வெளியில் போகும் வரை காத்திருந்த ராசா, 6.30 மணிக்குத்தான் வெளியில் வந்தார். தொண்டர்கள் குவிந்து நின்றாலும் தி.மு.க-வின் முக்கியத் தலைகள் யாரும் எட்டிப் பார்க்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், திருச்சி செல்வராஜ், சற்குணபாண்டியன், விஜயா தாயன்பன் ஆகியோர் மட்டுமே வந்ததால், ராசாவின் ஆதரவாளர்கள் அப்செட். கனிமொழிக்கு வைக்கப்பட்டது போன்று நகர் முழுவதும் வரவேற்புப் பலகைகள் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கும் ஏமாற்றம்தான்.

களை இழந்த அறிவாலயம்!

ஏர்போர்ட்டில் கிடைக்காத வரவேற்பு அறிவாலயத்தில் கிடைக்கலாம் என்று எதிர்பார்த்தால், அங்கேயும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில தொண்டர்களே நின்றார்கள். பேராசிரியர் அன்பழகன் மட்டும் போர்ட்டிகோவில் தன்னந்தனியாக நின்றிருந்தார். குவிந்திருந்த மீடியா ஆட்களிடம், 'லைவ் வேன்கள் எல்லாம் வந்திருக்கா?’ என்று டி.கே.எஸ். இளங்கோவன் கேட்டார். 'ஓ.பி. வேன் எல்லாம் பழசு. 2ஜி முடிந்து 3ஜி டெக்னாலஜி வந்துவிட்டதால் நேரடி ஒளிபரப்புக்கு சின்ன சைஸ் எக்யூப்மென்ட்ஸே போதும்’ என்றார்கள். '2ஜி போய் 3ஜி வந்து விட்டது’ என்று மீண்டும் அழுத்திச் சொன்னதை, டி.கே.எஸ். இளங்கோவன் உட்பட பலரும் ரசித்துச் சிரித்தார்கள்.

ராசாவின் கார் இரவு 7.25 மணிக்கு அறிவா லயத்துக்குள் நுழைந்தது. அவுட் கேட் வழியாக முக்கிய வி.ஐ.பி-கள் மட்டுமே கடந்த காலங்களில் வந்திருக்கிறார்கள். கருணாநிதியே இந்த வழியில் வராத நிலையில், அந்த வழியாக ராசாவின் கார் வந்து சேர்ந்தது. 'ஏர்போர்ட்டில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. சென்னையைச் சேர்ந்த தி.மு.க. புள்ளிகள் யாரும் வரவில்லை’ என்று டி.வி-களில் செய்தி ஓடிக் கொண்டு இருக்க, எங்கிருந்தோ அவசர அவசரமாக கொஞ்சம் பேர் அறிவாலயத்தில் திரண்டார்கள். 'திகாரை வென்ற தீரனே! தமிழினத்தின் மறவனே! வருக வாழ்க வெல்க!’ என்று பிரின்ட் செய்யப்பட்ட பனியன்களில் ராசா சிரித்துக்கொண்டு இருந்தார்.

'கலகம் பண்ணாதீர்கள்!’

கருணாநிதியைச் சந்தித்ததும் காலில் விழுந்து வணங்கினார். இரண்டு பேரும் பரஸ்பரம் சால்வைகளைப் பறிமாறிக் கொண்டனர். ராசாவுக்கு மாலை போட்டு வரவேற்றார் கருணாநிதி. அடுத்து பிரஸ்மீட். கருணாநிதியோடு அன்பழகன், ஸ்டாலின் ஆகியோர் மேடையேறியபோது ராசாவும் வந்தார். ராசாவிற்கு இருக்கை போட்டபோது, 'வேண்டாம்’ என்று சொல்லி நின்று கொண்டார். கருணாநிதியும் அன்பழகனும் வற்புறுத்தியும் கேட்கவில்லை. 'பிரிந்திருந்த தம்பியைப் பார்க்கும்போது ஓர் அண்ணனுக்கு என்ன உணர்வு இருக்குமோ அந்த உணர்வுதான் தம்பி ராசாவைப் பார்க்கும்போது எனக்கு இருந்தது'' என்றார் கருணாநிதி. ''சிறையில் இருந்தபோது தி.மு.க. உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததா?'' என்ற கேள்விக்கு ''பனிக்குடத்தில் உள்ள குழந்தையைப் போல தி.மு.க-வின் கரங்களில் பத்திரமாக இருந்தேன்'' என்றார் ராசா.

''கனிமொழிக்கு கிடைத்த வரவேற்பு உங்களுக்குக் கிடைக்கவில்லையே?'' என்ற கேள்விக்கு கருணாநிதி சூடானார். ''இதுவரை செய்தியைக் கேட்டீர்கள். இப்போது கலகம் பண்ணப் பார்க்கிறீர்கள். நல்ல பத்திரிகையாளராக நடந்துகொள்ளுங்கள்'' என்றார். உடனே, அருகில் இருந்த சற்குணப் பாண்டியன், ''ஏர்போர்ட்டுக்குப் போயிருந்தேன். நல்ல கூட்டம் இருந்தது. ஆனால், பத்திரிகையாளர்கள் பொய் சொல்கிறார்கள்'' என்றார்.

''கனிமொழிக்கு 1,002 பேர் வந்தார்கள். ராசாவுக்கு 1,003 பேர் வந்திருக்கிறார்கள் போதுமா?'' என்றார் கருணாநிதி. ''சுதந்திர இந்தியாவில் இதுவரை நடக்காத ஊழலாக ஸ்பெக்ட்ரம் விவகாரம் பேசப்பட்டது பற்றி என்ன சொல்கிறீர்கள்?'' என்ற கேள்விக்கு, ''வழக்கின் விவரங்களுக்குள் போக விரும்பவில்லை. அது நீதிமன்ற அவமதிப்பாகும்'' என்றார் கருணாநிதி. உடனே ராசா குனிந்து கருணாநிதி காதில் ஏதோ சொல்லிவிட்டு, ''1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று எந்த நீதிமன்றமும் என் மீது குற்றச்சாட்டு சொல்லவில்லை'' என்றார் அதிரடியாக.

பிரஸ்மீட் முடிந்ததும் கருணாநிதி, சி.ஐ.டி. காலனிக்குக் கிளம்பினார். அந்தக் காரில் ராசாவும் ஏறிக்கொண்டார்!

'முடிந்தால் வழக்கு போட்டுப் பார்!’

நீலகிரியில் வரவேற்பு அமர்க்களப்பட்டது. 'கழகத்தின் இமயமலையே, எங்களின் சேகுவேராவே, தடை

தகர்த்த வெற்றி வீரனே’ என்று அஞ்சாநெஞ்சனுக்கு நிகராக அதிரடி ஃப்ளெக்ஸ்கள். கோவை ஏர்போர்ட்டில் ராசாவை வரவேற்கக் கணிசமான கூட்டம். பெரம்பலூர், அரியலூர் மாவட்டத் தலைகள்தான் அதிலும். இங்கு ராசாவுக்குக் கிடைத்த வரவேற்பை உன்னிப்பாகக் கவனித்தது ஸ்டாலின் தரப்பு. தன் முகத்தைக் காட்ட வண்டியில் ராசா ஏறி நின்றபோது, அவருடன் நின்று போஸ் கொடுக்கக்கூட கோவை தி.மு.க. புள்ளிகள் யாரும் ஏறவில்லை. அதனால் ராசா ஏகத்துக்கும் அப்செட்.

தனது சொந்தத் தொகுதியான ஊட்டிக்குள் நுழைந்ததும் மைக்கைப் பிடித்த ராசா, ''நீதிமன்ற உத்தரவைப் பெற்று சென்னை வந்து தலைவரைச் சந்தித்தவன்... பிறகு என்னை வளர்த்து ஆளாக்கிய பெரம்பலூர் மாவட்டத்துக்குச் செல்ல நினைக்கவில்லை. என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய நீலகிரி மாவட்ட மக்களைக் காண வேண்டும் என்றுதான் அனுமதி வாங்கினேன்'' என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ''என் மீதான வழக்கில்தான் எத்தனை அனுமானங்கள். 22 ஆயிரம் கோடி, 33 ஆயிரம் கோடி, 1.76 லட்சம் கோடி என்று பண மதிப்பைக் குறிப்பிட்டார்கள். ஊடகங்களும் பத்திரிகைகளும் என்னை கொஞ்சமாகவா விமர்சித்தார்கள்? 1.76 லட்சம் கோடி ரூபாயையும் ராசா வண்டிகளில் ஏற்றி சென்னை, நீலகிரியில் பதுக்கிவிட்டான் என்கிற அளவுக்கு எழுதித் தள்ளினார்கள். ஆனால், எதை நிரூபிக்க முடிந்தது? என்ன குற்றம் செய்தேன்? தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து தொலைபேசிக் கட்டணத்தை புரட்சிகரமான வகையில் குறைத்து பல கோடிக்கணக்கானவர்களை பயன்படுத்தச் செய்தது குற்றமா?

சோதனை என்ற பெயரில் என் வீடு, என் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் எல்லாம் ரெய்டு நடத்தினார்களே என்ன கிடைத்தது? எந்த ஓர் ஆவணத்தையும் கைப்பற்றவில்லையே. நான் சட்டம் படித்தவன். இப்போதும் சொல்கிறேன், 1.76 லட்சம் கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு, முடிந்தால் வழக்கு போட்டுப் பார். அதை எதிர்கொண்டு வென்று முடிக்கத் தயாராக இருக்கிறேன்'' என்று நீதிமன்ற உத்தரவை மீறி ஆவேசமாக சீறினார்.

''ஜாமீனில் வந்ததற்கு இப்படி வெற்றி விழா போல் நடத்தணுமா?’ என்று ராசாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். ''நானாக யாரையும் வந்து எனக்கு வரவேற்பு கொடுங்கள் என்று சொல்லவில்லை. யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். அன்பின் அடிப்படையில் அவர்களாகவே கூடியிருக்கிறார்கள். அதை நான் எப்படித் தடுக்க முடியும்?'' என்றார் பட்டென.

ராசாவுக்கு சென்னையில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் மற்ற இடங்களில், அவருடைய ஆதரவாளர்கள் திரண்டதால் ஏகப்பட்ட கூட்டம். கனிமொழி ஜாமீனில் வந்தபோது ஏர்போர்ட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே போய் காத்திருந்து வரவேற்றார் கருணாநிதி. அவருடன் மொத்தக் குடும்பத்தினரும் கலந்துகொண்டார்கள். அதோடு, தி.மு.க. புள்ளிகள் எல்லோரும் ஆஜர் ஆகி இருந்தார்கள். ஆனால், ராசாவுக்காக கருணாநிதி ஏன் ஏர்போர்ட் போகவில்லை என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் சொல்ல முடியாத மனவருத்தம்!.

- எம்.பரக்கத்அலி, எஸ்.ஷக்தி,

ஜோ.ஸ்டாலின்

படங்கள்: என்.விவேக், தி.விஜய், வீ.நாகமணி