Published:Updated:

ஆயுர் வேத சிகிச்சை... படகு சவாரி... பேட்டரி கார் பவனி!

கொடநாடு ரிலாக்ஸ் லைவ்!

ஆயுர் வேத சிகிச்சை... படகு சவாரி... பேட்டரி கார் பவனி!

கொடநாடு ரிலாக்ஸ் லைவ்!

Published:Updated:
##~##

கொடநாடு... தற்காலிக தலைமைச் செய லகம் என்று போர்டு வைக்காத குறையாக தமிழகத்தின் மொத்த அதிகாரமும் இப்போது இங்குதான் குவிந்து கிடக் கிறது. எஸ்டேட் பங்களாவுக்குள் இருந்து எந்த நேரத்தில் என்ன உத்தரவு வருமோ என்று குளிரிலும் வியர்த்தபடி காத்திருக்கிறார்கள் உயர் அதிகாரிகள். கொடநாட்டில் இருந்து ஒரு லைவ் ரிப்போர்ட்... 

அம்மா பின்னே... சின்னம்மா முன்னே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொடநாடுக்கு ஜெயலலிதா கிளம்பியபோது உடன் சசி இல்லாதது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. 'எங்கே அவர்?’ என்று மீடியாக்கள் துழாவிக் கொண் டிருக்க... இரண்டு நாட்களுக்கு முன்பே அவர் கொடநாடு எஸ்டேட்டுக்கு வந்து விட்டாராம். 'கண்ணுக்கு காட்ராக்ட் ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ளது’ என பெங்களூரு கோர்ட்டுக்கு தாக்கீது கொடுத்திருக்கும் சசியை, வெளிப்படையாக அழைத்துக்கொண்டு செல்வது சில சிக்கல்களுக்கு வழி வகுக்கும் என்பதால் இந்த ஏற்பாடாம்.

ஆயுர் வேத சிகிச்சை... படகு சவாரி... பேட்டரி கார் பவனி!

தனியே தன்னந்தனியே...

ஜெயலலிதா, சசி இருவருக்கும் இடையிலான விரிசலின் வீரியம் இன்னும் கொஞ்சம் தொடரத்தான் செய்கிறதாம். சாப்பாடு, சில பொழுதுபோக்கு அம்சங்கள் தவிர, மற்றவை எல்லாம் தனித்தனியேதானாம். பெங்களூரு வழக்கு விவகாரம், ராவணன், நடராஜன் சம்பந்தமான காரசார விவாதங்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பங்களாவினுள் அரங்கேறியதாகச் சொல் கிறார்கள். 'இனி வரும் காலத்தில் எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும்’ என்று சசிக்கு இங்கு தொடர் வகுப்பு எடுக்கப்படுகிறதாம். கூடவே சில டாகுமென்ட்களில் மாற்றமும் நடைபெறுகிறதாம்.

எட்டு மணி பரபர...

அதிகாரிகள் தங்கி பணியாற்றுவதற்கு என்றே பங்களா வளாகத்தில் மூன்று கெஸ்ட் ஹவுஸ்கள் இருக்கின்றன. 'முதல்வர் ஓய்வெடுக்கிறார்’ என்ற விமர்சனத்தை தகர்க்க வேண்டும் என்பதால், காலை எட்டு மணிக்குள் ஏதோ ஒரு அரசு உத்தரவையோ, திட்டத்தையோ அறிக்கை யாக தன் ஒப்புதல் பெற்று மீடியாக் களுக்கு வழங்கிட வேண்டும் என்பது பெரிய இடத்து உத்தரவு!

இந்தப் படை போதுமா..?

முதல்வர் தங்கி இருக்கும் பங்களா மூன்று அடுக்கு பாதுகாப்பில் இருக்கிறது. கொடநாடு சாலை ஜங்ஷனில் இருந்து உள்ளே சில கிலோ மீட்டர்களிலேயே தமிழக போலீஸாரும், எஸ்டேட் பங்களாவைச் சுற்றி கமாண்டோக்கள் மற்றும் கறுப்புப் பூனை படையினரும் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். இதுபோக, எஸ்.டி.எஃப். போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். முதல்வரின் பங்களாவைத் தாண்டி கொடநாடு வியூ பாயின்ட்டை நோக்கிச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்குப் பரிசோதனைக்குப் பிறகு அனுமதி அளிக்கப்படுகிறது. அரசு பஸ்களுக்கும் இதேபோல் அனுமதி இருந்தாலும், உள்ளே மஃப்டி போலீஸார் எப்போதும் இருக்கிறார்கள்.

ஏரிக்கரை பூங்காற்றே...

''அரசு ரீதியிலும், பர்சனலாகவும் சில முக்கிய முடிவுகளை ரிலாக்ஸாக யோசித்து எடுக்கவே கொடநாடு வந்திருக்கிறார் முதல்வர்'' என்று அதிகாரிகள் மத்தியில் பேச்சு. கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடத்தில் அமர்ந்து சில பரிகாரங்களை செய்யுமாறு பர்சனல் ஜோதிடரிடம் இருந்து கிடைத்த ஆலோசனையும்  விசிட்டுக்கு காரணம் என்கிறார்கள் கட்சிக்குள் சிலர். ஆனால், இதுவரை யாகங்கள், ஹோமங்கள் என்று புகைவாசம் எதுவும் பங்களாவில் இல்லை. ஆனால் ஜெயலலிதா, சசி இருவருக்கும் சில ஆயுர் வேத சிகிச்சைகள் நடக்கிறதாம். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை கொடநாடு பங்களாவுக்குப் பின்புறம் கீழே இருக்கும் ஏரியில் ஜெயலலிதா படகு சவாரியும் செல்கிறார். பூங்காற்று வீசும் ரம்மியமான சூழலில் பேட்டரி காரில் பங்களாவுக்குள் சுற்றி வந்தும் புத்துணர்ச்சி அடைகிறார்.  

நிர்வாகிகள் மாற்றம் நிச்சயமே!

மலை மேல் இருந்தபடி அனைத்து மாவட்டச் செயலாளர்களின் ஜாதகமும் அலசி ஆராயப் படுகிறது. தெற்கு மற்றும் கொங்கு மாவட்டச் செயலாளர்கள் சிலர் பற்றிய 'நோட்’ மேடத்துக்கு சென்று இருக்கிறது. மேற்கு மண்டலத்திலேயே நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில்தான் அ.தி.மு.க. படு வீக்காக இருப்பதாகக் கிடைத்துள்ள விவரம் முதல்வரை அப்செட் ஆக்கி இருக்கிறது. இதை வைத்து நிர்வாகிகள் மாற்றம் நிச்சயம் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

அள்ளிக் கொடுக்கும் அம்மா...

பங்களா மற்றும் எஸ்டேட் பணியாளர்களிடம் மிகுந்த கனிவோடு நடந்து கொள்கிறாராம் முதல்வர். கேட் திறந்து விடும் அடிமட்ட பணியாளர்களிடம் கூட, காரை நிறுத்தி பெயரைச்சொல்லி விசாரிக் கிறாராம். யார் யாருக்கு என்ன தேவை என்பது மனுவாக பெறப்பட்டு உள்ளது. கொடநாடு பங்களா கட்டிய காலத்தில் இருந்து இங்கு மேஸ்திரியாக இருப்பவர், தனக்கு சொந்த வீடு கட்ட பணம் வேண்டும் என்று பவ்யமாக முறையிட, உடனே ஓகே செய்து இருக்கிறார் முதல்வர். குழந்தைகள் படிப்பு, மகளுக்குத் திருமணம் என்று பங்களா பணி யாளர்களின் தேவைகள் ஒவ்வொன்றும் வரிசையாக நிவர்த்தியாகிக் கொண்டிருக்கின்றன.

கூடிய சீக்கிரம் அந்தப் பகுதியில் இருக்கும் சில ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு, பரிகார பூஜைகளில் இறங்குவார் என்கிறார்கள். படுகர் சமுதாய பெண்களைப் போலவே தலையில் முக்காடு போட்டுக்கொண்டு முதல்வர் நடத்தப் போகும் கிராமத்து விசிட்களை மீண்டும் ஒருமுறை காணும் ஆர்வத்தில் இருக்கிறது கோத்தகிரி வட்டாரம்!

- எஸ்.ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism