Published:Updated:

தாந்த்ரீக செக்ஸ் கான்ட்ராக்ட்!

வெளிவரும் வில்லங்கம்

தாந்த்ரீக செக்ஸ் கான்ட்ராக்ட்!

வெளிவரும் வில்லங்கம்

Published:Updated:
தாந்த்ரீக செக்ஸ் கான்ட்ராக்ட்!
##~##

'காவல் நிலையத்துக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ ஆதீனம் வரமுடியாது. ஆதீனம் யாருக்கும் கட்டுப்பட்டவர் அல்ல’ என்று, மதுரையின் மூத்த‌ ஆதீனம் அருணகிரி திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தாலும், நித்தியை விடுவதாக இல்லை கர்நாடக சி.ஐ.டி. போலீஸ். அவர்கள் கையில் எடுத்திருக்கும் புதிய ஆயுதம், பிடதி ஆசிரமத்தின் தாந்த்ரீக செக்ஸ் ஒப்பந்தப் பத்திரம்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வெளிப்படை செய்யக்கூடாத உடன்படிக்கை’ (Non Disclosure Agreement) என்ற பெயரில் தன் னுடைய சீடர்களோடு நித்தி செய்து கொண்ட‌ 'தாந்த்ரீக செக்ஸ் ஒப்பந்தம்’தான் (Tantric sex contract)  விவகாரமே! எதிர்காலத்தில் சட்டச் சிக்கல் எதுவும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தோடு, சட்டப் புள்ளிகளின் உதவியோடு வடிவமைத்த ஒப்பந்தம்தான் இப்போது புது பூதத்தைக் கிளப்பப் பார்க்கிறது. அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அத்தனை விஷயங்களும் மறைமுகமாக வன்மத்தையும் காமத்தையும் மூடநம்பிக்கையையுமே பேசுகின்றன என்பது நித்திக்கு எதிரானவர்களின் வாதம்.

12 பக்கங்கள் கொண்ட இந்த உடன்படிக்கை பத்திரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், அதை ஏற்றுக் கொள்வதற்கான சம்மதக் கையப்பத்தை சீடர்கள் இட வேண்டும். இந்த ஆவணத்தின் பக்கங்கள் நமக்கும் கிடைத்தன. அந்த ஒப்பந்தத்தில் 19 முக்கிய ஷரத்துகளும் 14 துணை ஷரத்துகளும் உள்ளன. முழுக்க முழுக்க வார்த்தை ஜாலங்களாலும், புத்திசாலித்தனத்தாலும் நிரம்பி வழியும் பக்கங்களில் நித்தியை 'லீடர்’ என்றும், ஆசிரமத்தை 'பவுண்டேஷன்’ என்றும் குறிப்பிட்டு இருக்கின்றனர். இந்த ஒப்பந்தம், 'குருவிடம் இருந்து கற்றுக் கொள்தல்’ (Learning from the master) என்ற வகுப்புக்காக ஏற்படுத்தப் பட்டுள்ளது.

தாந்த்ரீக செக்ஸ் கான்ட்ராக்ட்!

இப்போது இதில் முக்கிய வில்லங்க சாட்சியாகக் கருதப்படுவது, முன்னாள் பெர்சனல் செகரட்டரியான மா நித்ய கோபிகாவோடு நித்தி செய்துகொண்ட தாந்த்ரீக செக்ஸ் ஒப்பந்தம்தான். மா நித்ய கோபிகாவின் உண்மையான பெயர் வித்யா. கேரளாவைச் சேர்ந்த இவரும் நித்தியால் பாதிக்கப்பட்டார் என்கிறார்கள். சி.ஐ.டி. போலீஸிடம் புகார் அளித்த கோபிகாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏன் காணவில்லை என்பது இன்னமும் விடுபடாத  புதிர்.

ரஞ்சிதா உடனான வீடியோ விவகாரத்தில் சிக்கிய போதே, நித்தியின் 'செக்ஸ் ஒப்பந்தம்’ குறித்து அரசல் புரசலாகப் பேசப்பட்டது. ஆர்த்தியின் பாலியல் புகார் சர்ச்சையில் நித்தி மீண்டும் வலு​வாக மாட்டி இருப்பதால், அதைக் கையில் எடுத்துள்ளது போலீஸ். சி.ஐ.டி. போலீஸ் வசம் சிக்கி இருக்கும் ஒப்பந்தத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

1. 'குருவிடம் இருந்து கற்றுக்கொள்தல்’ வகுப்புக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்து, குருவின் (நித்தி) கருத்துகளை மறுப்பின்றி ஏற்றுக்கொண்டு, உலகமெங்கும் பரப்பி ஆன்மிகத் தாக‌த்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

2. வகுப்பில் இணைந்ததன் மூலம் நித்தியைப் பற்றித் தெரிந்து கொள்​ளலாம். அவரோடு பேசலாம். ஆசிரமத்தையும் நம் குடும்பங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள உரிமை இருக்கிறது.

3. குருவைப் பற்றியோ, ஆசிரமத்தைப் பற்றியோ தெரிந்துகொண்ட ரகசியத் தகவல்களை எந்தக் காரணம் கொண்டும் வெளியில் சொல்லக் கூடாது.

அ) தங்குமிடம், தனிப்பட்ட வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், மேற்கொள்ளப்படும் பயணங்கள் குறித்த தகவல்களை யாரிடமும் சொல்லக்கூடாது.

ஆ) குருவின் கண்டுபிடிப்புகள், டெக்னிக்குகள், தத்துவங்கள் மற்றும் சடங்குகளைக் கண்டிப்பாக யாரிடமும் சொல்லக்கூடாது.

இ) நித்தியின் கொள்கைகள், ஆசிரமத்தின் நடத்தை முறைகள் மற்றும் எழுதப்பட்ட, எழுதப்படாத விதிகளை யாரிடமும் சொல்லக்கூடாது.

ஈ) சீடராக இருப்ப‌வர் எந்தெந்த விதத்தில் குருவுக்குப் பணிவிடை செய்கிறோம் என்பதை யாரிடமும் சொல்லக்கூடாது.

4. ஆசிரமத்தைப் பற்றியோ, நித்தியைப் பற்றியோ எழுத்து மூலம் தலைமையிடம் அனுமதி பெறாமல் மீடியாக்களிடம் பேசக்கூடாது.

5. சீடர் தன்னுடைய உச்சபட்ச சேவையையும் விசுவாசத்தையும் குருவுக்கும் ஆசிரமத்துக்கும் காட்ட வேண்டும்.

அ) எவராவது நித்தியைப் பற்றியோ, ஆசிரமத் தைப் பற்றியோ விமர்சித்தாலோ, எதிராகச் செயல் பட்டாலோ உடனடியாகத் தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும்.

ஆ) சீடருக்கும் குருவுக்கும் ஆசிரமத்துக்கும் இடையேயான உறவை, எழுத்து மூலமான அனுமதி இல்லாமல் எக்காரணம் கொண்டும் வெளியே சொல்லக்கூடாது.

இ) சீடருக்கு குருவுடனோ, ஆசிரமத்தினுடனோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு இருந்தால் வெளியே பகிரக்கூடாது.

6. சீடர் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆசிரமத்தின் சட்ட​திட்டங்களுக்கு உட்பட்டவர். ஆதலால் இதை மீறினால் கர்நாடக உயர் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தர குருவுக்கு அதிகாரம் இருக்கிறது.

7. குருவைப் பற்றியோ, ஆசிரமத்தைப் பற்றியோ ரகசியத் தகவல்களை, ஆவணங்களை வெளியே கசிய விடாமல், முழுமையாக ஆன்மிகத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

8. மேலே கூறப்பட்டு இருக்கும் சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது சீடரை அடிமைப்படுத்த இல்லை. ஏனென்றால், அனைத்தும் அரசின் சட்டங்களுக்கு உட்பட்டே வகுக்கப்பட்டு இருக்​கிறது.

9. ஆசிரமத்துக்குள் இருக்கும்போது, சீடருக்கு யாரால் எது நடந்தாலும் அதற்கு சீடர் மட்டுமே பொறுப்பு. அதற்கு குருவும் ஆசிரமமும் பொறுப்பு ஆகாது.

10. இந்த ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் சாராம்சங்களை எந்த நேரத்திலும் எந்தக் காரண‌த்துக்காகவும் மாற்றி அமைக்கும் அதிகாரம் குருவுக்கும் ஆசிரமத்துக்கும் மட்டுமே இருக்கிறது. சீடருக்கு இல்லை.

11. சீடர் ஏற்றுக்கொண்டுள்ள இந்த ஷரத்துகளை மீறிச் செயல்பட்டார் என குருவோ, ஆசிரமமோ கண்டுபிடித்தால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க அதிகாரம் இருக்கிறது.

12. சீடர் குருவிடமோ, ஆசிரமத்திலோ ஏதேனும் பிரச்னை செய்தால் அவரை நீதிமன்றம் மூலம் சந்திப்போம். அதே நேரத்தில் அவர் கையெழுத்து இட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் மற்ற ஷரத்துகளின் அடிப்படையில் பிரச்னையைத் தீர்ப்போம்.

தாந்த்ரீக செக்ஸ் கான்ட்ராக்ட்!

13. இந்த ஷரத்துகளை எல்லாம் முழுமனதோடு ஏற்றுக்கொண்டு, கடைப்பிடிக்க வேண்டும்.

- மேற்கண்ட ஷரத்துக்களை ஒப்புக்கொண்டதாக சம்பந்தப்பட்ட சீடரும்... அவருக்கு இவற்றை 'விளங்க' வைத்ததற்கு சாட்சியாக ஆசிரமப் பொறுப்பாளரும் தேதியுடன் கையப்பம் இடுகிறார்கள்.

இந்த ஷரத்துகளிலேயே பூடகமான 'உள்குத்து'கள் இருப்பதாக இப்போது சொல்லும் போலீஸார்... இதன் தொடர்ச்சியான ஆறு அம்சங்கள் ரொம்பவே விவகாரமாகத் தோன்றுவதாகச் சொல்கிறார்கள். அந்த ஆறு - 1. தாந்த்ரீகக் கோட்பாடுகளையும் சடங்குகளையும் உள்ளடக்கிய இந்த வகுப்பில் ஈடுபடும் போது சீடருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதற்குக் குருவோ, ஆசிரமமோ நிச்சயம் பொறுப்பு ஆகாது. சீடர் மட்டுமே முழுப்பொறுப்பு.

2. தாந்த்ரீகச் சடங்குகள் அடங்கிய இந்த வகுப்பில்  வயது வந்தோர் (18 வயது) மட்டுமே பங்கேற்க வேண்டும். ஆன்மிகத்தின் உச்சப்பாதையில் ஜீவன் முக்தி அடையும் வழிகளை காமமாகவோ ( செக்ஸ் விஷயங்களை 'தாந்த்ரீக தியானம்’ என்று குறிப்பிடுகிறார்களாம்)... வன்முறையாகவோ (சில நேரங்களில் தன்னுடைய மந்திரக்கோல் முறியும் வரை சீடரை மந்தகாசச் சிரிப்போடு அடிப்பதும் நடக்குமாம். அதில் தங்கள் கர்மபாவம் தீர்க்கப்பட்டதாக எண்ணி சீடர்களும் அதை எதிர்க்காமல் அனுபவிக்க வேண்டுமாம்)... போகப் பொருளாகவோ பார்க்கக்கூடாது. ஆன்மிகத்தில் திளைக்க, தன்நிலை மறத்தல் அவசியம் என்பதை உணர வேண்டும்.

3. ஆன்மிகத்தின் உச்சநிலையை அடைய, தாந்த்ரீக தியானக் கலையின் கூறுகளில் ஒன்றான செக்ஸிலும் உச்சத்தை அடைய வேண்டும். செக்​ஸில் உச்சநிலையான ஜீவன் முக்தியை அடைய ஏதுவாக வீடியோ காட்சிகளோ, சப்தமோ உங்கள் இணையின் அருகிலோ கூட கிடைக்கலாம். அதற்குக் குருவோ ஆசிரமமோ எந்த வகையிலும் பொறுப்பு ஆகாது.

4. உடல், மன நோய்களுக்காக மருத்துவச் சிகிச்சை மேற்கொள்வோர் தாந்த்ரீகச் சடங்குகளில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.

5. மேற்கூறிய சடங்குகள் அரங்கேறும்போது சீடருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் குருவோ, ஆசிரமமோ பொறுப்பாகாது. சீடர் இந்த விதிகளை மீறிச் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

6. இந்த வகுப்பின் இறுதியில் சீடராகிய உங்களுக்கு, 'அது கிடைக்கும், இது கிடைக்கும்’ என்ற எந்த வாக்குறுதி அல்லது உறுதிமொழியை குருவோ அல்லது ஆசிரமமோ தரவில்லை.

தாந்த்ரீக செக்ஸ் கான்ட்ராக்ட்!

- இந்த சர்ச்சைக்குரிய தாந்த்ரீக செக்ஸ் ஒப்பந்தம் பற்றி போலீஸார் தீவிரமாகக் குடைவதை அறிந்து,  பிடதி ஆசிரமத்தின் தரப்பை அறிந்துகொள்ளத் தொடர்பு கொண்டோம்.

''இங்கே முதியவர்களும், சந்நியாசிகளும் மட்டுமே இருக்கிறோம். முக்கிய நிர்வாகிகள் எல்லாம் சுவாமியோடு இருக்கிறார்கள்'' என்று பதில் சொன்னார்கள். இந்த ஒப்பந்தத்தில் நித்தி சார்பாக கையப்பம் இட்டு இருக்கும் நித்ய சதானந்தாவும் பேச மறுத்து விட்டார். ஆசிரமம் சார்பாக மீடியாக்களிடம் பேசுவதற்காக நியமிக்கப்​பட்டிருக்கும் வக்கீல் தேவதாஸிடம் கேட்டோம்.

''இந்த ஒப்பந்தம் இல்லை என்றாலும் சுவாமியைத் தேடி வருகிறவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்கள் என்ன காரணத்துக்காக வருகிறார்களோ அது கிடைக்கிறது. சுவாமி சட்டப்படிதான் எல்லாமே செய்கிறார். இதில் மறைப்பதற்கு எதுவுமே இல்லை. சுவாமிக்கு எதிராக இருக்கிற மீடியாக்களும் போலீஸும் கர்நாடக அரசும் சுவாமியிடம் ஒரே ஒரு நாள் கோர்ஸ் மட்டும் அட்டென்ட் பண்ணுங்க. அதன் பிறகு எங்க சுவாமியைப் பத்தி, இப்படித் தப்பாப் பேச மாட்டார்கள்'' என்றார்.

''தாந்த்ரீக செக்ஸ் ஒப்பந்தத்தின்படி என்னதான் நடக்கும்?'' என்ற கேள்வியை நித்தியின் பழைய சீடர் ஒருவரிடம் கேட்டோம்.

''நித்தியின் உள்வட்ட ஆட்களின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இந்த விவகாரத்துக்குள் நுழைய முடியும். அதற்கு சுவாமியிடம் பல தீட்சைகள் பெற வேண்டும். பொதுவாக, தான் விரும்பும் பெண்ணை அடைவதற்காக, 'இது பாவ​மில்லை, குற்றப்பார்வையை முதலில் களை, நம்மை கண்ணன் ராதையாக பாவித்துக் கொள், இந்தச் சடங்கு தியானத்தின் உச்ச நிலை’ என்று சொல்வார். 'உடலையும் ஆன்மாவையும் மனதையும் ஒருங்கிணைத்து 12 மணி நேரம் குருவும் சிஷ்யையும் சஞ்சரிக்கும் போது ஜீவன் முக்தி அடையலாம். இது 7,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருக்கும் ரகசியம். அதை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன். மொத்தத்தில் இதெல்லாம் கவட்டிங் யோக முறை' என்பார். தன்னைக் கடவுளின் அவதார புருஷனாகப் பாவித்து கொள்ளும் முறையே, தாந்த்ரீக செக்ஸ் ஒப்பந்தத்துக்குப் பிள்ளையார் சுழி'' என்றார் அந்த முன்னாள்.

தலையை சுத்துது சாமீ...!

- இரா.வினோத் 

''பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும்''

கடந்த 27-06-2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் 'நித்தி எஸ்கேப்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். இதுதொடர்பாக, 'அகில உலக விஸ்வ ஹிந்து பரிஷத்’ இயக்கத்தின் ஆலோசகர் எஸ்.வேதாந்தம், ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், ''எங்கள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக் சிங்கல், ஒரு ஹிந்து இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் அனைத்து ஹிந்து மடாதிபதிகளிடமும், குருமார்களிடமும் நல்ல முறையில் தொடர்பு கொண்டுள்ளவர். ஹிந்து ஆன்மிக, கலாசாரப் பாரம்பரியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாடு உள்ளவர். அந்த வகையில், சுவாமி நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் தலைவராக தவத்திரு அருணகிரிநாத சுவாமிகள் நியமித்ததைத் தொடர்ந்து, 'அசோக் சிங்கல் தனக்கு ஆதரவு அளித்து உள்ளார்' என்று நித்தியானந்தா பேட்டி தந்த போது, அதை உடனடியாக மறுத்து அறிக்கை வெளியிட்டார். நடந்து கொண்டிருப்பது சைவ மடங்களின் தனிப்பட்ட பிரச்னை. பொதுவில் சண்டையிட்டு அந்தப் பிரச்னையைப் பெரிதாக்கிக் கொள்ளக் கூடாது. ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையே தன் கருத்தாக அசோக் சிங்கல் கூறியுள்ளார். அப்படியிருக்க, ஜூ.வி. கட்டுரையில் வெளியான அந்த வரிகள் அதிர்ச்சியும், மனவருத்தமும் ஏற்படுத்தி விட்டன'' என்று கூறியுள்ளார் வேதாந்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism