Published:Updated:

மா நித்ய கோபிகா எங்கே?

ஆர்த்தி ராவ் அப்பாவின் பகீர் சந்தேகம்!

மா நித்ய கோபிகா எங்கே?

ஆர்த்தி ராவ் அப்பாவின் பகீர் சந்தேகம்!

Published:Updated:
##~##

நித்திக்கு இப்போது மிகப்பெரிய செக், ஆர்த்தி ராவ்! 

நித்தி மீது பாலியல் புகாரைக் கிளப்பி, சமீபத்திய சர்ச்சைகளுக்குப் பிள் ளையார் சுழி போட்டவர் இந்த ஆர்த்தி ராவ். அதுபற்றி விளக்க பிரஸ்மீட் கொடுக்க வந்த இடத்தில், பத்திரிகையாளர்களிடம் 'லந்து’ பண்ணியதால்தான், பிடதியில் இருந்தே 'பேக்கப்’ ஆக வேண்டி வந்தது நித்திக்கு. சீட்டுக் கட்டு மாளிகையின் சரிவு போல... சோதனை, விசாரணை, புகார், வழக்கு என்று விவகாரம் நீண்டு கொண்டே போகும் நிலையில், நித்தி மீது வழக்குப் போடுவதற்காக அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்து சேர்ந்தார், ஆர்த்தி ராவின் தந்தை சேதுமாதவ ராவ். அவரிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நாங்க ஆச்சாரமான பிராமணக் குடும்பம். சென்ட்ரல் கவர்மென்ட்ல வேலை செஞ்சி ரிட்டயர்ட் ஆயிட்டேன். என் மகள் ஆர்த்தி அமெரிக்​காவில் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் மாதம் மூணு லட்ச

மா நித்ய கோபிகா எங்கே?

ரூபா சம்பாதிச்சவர். வேலையில் ஏகப்பட்ட டென்ஷன், பிரஷர். அதனால மன நிம்மதிக்காக யோகா கத்துக்கிட்டு யோகா டீச்சர் ஆனார். சின்ன வயதில் இருந்தே சேவை மனப்​பான்மை உண்டு. ஆன்மிகத்திலும் ஆர்வம் அதிகம். அதனால, எங்ககிட்ட கூட சொல்லாம 2004-ல் பிடதி ஆசிரமம் போயி, சுவாமி கிட்டே சேர்ந்துட்டார். ரெண்டு வருஷம் குடும்பம், புருஷன் எல்லாத்தையும் மறந்துட்டு நித்தியானந்தாவே கதியா கிடந்தார்.

ஆர்த்தியின் விருப்பப்படி 2006-ல் நானும் என் குடும்பத்தோடு நித்தியானந்தா ஆசிரமத்துக்குப் போனேன்... அவர் காலிலே விழுந்து கிடந்தோம். ஒன்றரை வருஷம் அவ​ரோடே விசுவாசியா இருந்தோம். ஆறு வருஷமா எங்க வீட்டு பூஜை அறையில் நித்தியானந்தா படத்தை வெச்சி பூஜை செஞ்சோம். ஆனா, இன்னைக்கு என் குடும்பத்தையே பூச்சியை நசுக்கிற மாதிரி அவர் நசுக்கப் பார்க்கிறார்'' என்று கொந்தளித்தவர், மேலும் தொடர்ந்தார்.

''நித்தியானந்தா ஆசிரமத்தில் சாதாரண பக்தையா சேர்ந்து உடல், பொருள், ஆவி எல்லாத்தையும் தியாகம் செய்து ஆசிரமத்தின் பெரிய பொறுப்புக்கு என் பொண்ணு வந்தார். அந்த ஆசிரமத்தில் ஆயிரக்​கணக்கான பெண்கள் இருக்காங்க. ஆனா, இதுவரைக்கும் 10 பேர் மட்டுமே 'அனுகூல அம்மா’ அல்லது 'மாண்புக்​குரிய அம்மா’  பட்டத்தை நித்தியானந்தாவிடம் இருந்து 'தீட்சை’ வாங்கி இருக்காங்க. ஆர்த்தி ராவ் அந்தப் பட்டத்தை வாங்கிய பிறகுதான் நித்தியானந்தாவின் பெர்சனல்

மா நித்ய கோபிகா எங்கே?

செகரட்​ரியா நியமிக்கப்பட்டார். ஏழு உள்வட்டப் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி நித்தியானந்தாவின் இருப்பிடத்​துக்குச் செல்லக்கூடிய அனுமதியைப் பெற்றவராக ரெண்டு வருஷம் இருந்திருக்கார்.

அதுக்குப் பிறகுதான், 'நீ ஜீவன் முக்தி அடைஞ்சா... நினைச்சதெல்லாம் சாதிக்கலாம்’னு சொல்லி நித்தியானந்தா தன்னை சீரழிச்சதாக ஆர்த்தியே சொல்லிட்டாரே..! பெத்த தகப்பனான நான் அதை என் வாயால் சொல்ல முடியாது. ஆனால், இன்னிக்கு 'ஆர்த்தி ராவ் யாருன்னே தெரியல. பார்த்ததே இல்லை’னு அபாண்டமா பொய் பேசுறார் நித்தியானந்தா. அவர் பொய்க்காரர் என்பதை நிரூபிக்க‌ போட்டோ, வீடியோ, மெயில் என்று ஆயிரக்கணக்கில் ஆதாரங்கள் இருக்கு'' என்றவர், பல மெயில்களைக் காட்டினார்.

''2010 ஆகஸ்ட் மாதம் கர்நாடக சி.ஐ.டி. போலீஸில் நித்தியானந்தா மேல ஆர்த்தி ராவ் பாலியல் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, நித்தியானந்தாவோட ஆட்கள் டார்ச்சர் செய்ய ஆரம்பிச்சாங்க. அதைத்தாங்க முடியாமத்தான் மீடி​யாவுக்கு வந்தோம். 'யோகா டெக்னிக்குகளை திருட்டிட்டார்’னு ஆர்த்தி மேல நித்தியானந்தா கேஸ் போட்டிருக்கிறார். 'யாருன்னே தெரியாதவ' மேல கேஸ் போடுறது மட்டும் எப்படி?

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருக்கும் போது, 'சுவாமி என் குடும்பமே நிம்மதி இல்லாம இருக்கு. ஆசீர்வாதம் பண்ணுங்க’னு காலில் விழுந்​தால்... 'ஆனந்தமாக இரு’னு ஆப்பிள் கொடுப்பார். ஆனந்த​மாக இரு... ஆனந்தமாக இருன்னு சொல்லியே என் குடும்​பத்தை இன்னிக்கு நடுத்​தெருவில் நிறுத்திட்டார். ரஞ்சிதா கூட இருக்​குற வீடியோவைப் பார்த்த​போது கூட நான் அப்பாவியா, 'என்னம்மா... நம்ம சுவாமி மேல இப்படி பழி போடுறாங்களே’னு  ஆர்த்தி​​கிட்ட கேட்டேன். அப்போ அவ சொன்ன வார்த்தைதான் என்னைக் கொன்னே போட்டிருச்சு. 'அப்பா, உங்க பொண்ணும் அப்​படி பாதிக்கப்பட்டவதான்’னு சொல்லி தற்கொலை செஞ்சுக்கப் போ​னாள். அவளைக் காப்பாத்தி மன நல மருத்துவர் மூலமா கவுன்சலிங் கொடுத்தப்புறம்தான் தேறி வந்தாள்.

இப்போ நித்தியானந்தா 'ஆர்த்தி ராவ்க்கு எய்ட்ஸ் நோயை விட கொடூ​ரமான நோய் இருக்கு. எய்ட்ஸாவது உடலுறவு வெச்சிக்கிட்டாத்தான் தொற்றும். ஆனால், ஆர்த்தியைத் தொட்​டாலே அந்த நோய் வந்திடும்’னு அசிங்கப்படுத்துறார். ஆர்த்திக்கு அப்படி எந்த நோயும் கிடையாது. என் பொண்ணு செக்கப்புக்கு ரெடி. நித்தியானந்தா ரெடியா?'' என்று கொதித்தவர்...

''நித்தியானந்தாவோட இன்னொரு பெர்சனல் செகரட்டரியாக இருந்த மா நித்ய‌ கோபிகாவை ரெண்டு வருஷமா காணலை. அவங்க இருக்காங்களா... இல்லையான்னே தெரியலை. அதுபோலவே என் பொண்ணையும் பண்ணிடுவாரோன்னு பயமா இருக்கு. மீடியாவும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளும்தான் நித்தி​யானந்தாகிட்ட இருந்து எங்களைக் காப்பாத்தணும். நித்தியானந்தாவுக்கு எட்டு முறை நோட்டீஸ் விட்டும், அவர் சி.ஐ.டி. போலீஸ்கிட்ட செக்கப் பண்ணிக்கப் போகலை. அப்போ யாருக்கு மடியில் கனம் இருக்குனு புரிஞ்சுக்கோங்க... இன்னும் கொஞ்ச நாட்க‌ளில் ஆர்த்தி இந்தியா வருவாள். அதன் பிறகு நித்தியானந்தாவுக்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து பாடம் சொல்லித் தருவோம்'' என்று படபடத்தார் அந்தத் தந்தை.

எரிமலை குமுறுகிறது... எப்பவும் வெடிக்​கலாம்..!

- இரா.வினோத், படம்: ஜஸ்டின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism