Published:Updated:

தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது கொலை மிரட்டல் வழக்கு!

விகடன் விமர்சனக்குழு
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது கொலை மிரட்டல் வழக்கு!
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது கொலை மிரட்டல் வழக்கு!
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது கொலை மிரட்டல் வழக்கு!

சேலம்: ஏற்காடு தேர்தல் பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க.வினருக்கு கொலை மிரட்டல் விட்டதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்காடு தொகுதியில் அடுத்த மாதம் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த ஏற்காடு எம்.எல்.ஏ. பெருமாளின் மனைவி சரோஜாவும், தி.மு.க. சார்பில் இளைஞரணியை சேர்ந்த மாறனும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட தேசிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தாததால், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனால் அங்கு அனல் பறக்கும் பிரச்சாரத்தில் இரு கட்சி தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

##~~##
இந்நிலையில், சேலத்தை அடுத்த காரிப்பட்டி பகுதியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்ட்டா முத்து தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தி.மு.க முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, ஈரோடு இறைவன், கரூர் முரளி உள்ளிட்ட தி.மு.க பிரமுகர்கள் வேலுமணியின் காரை வழிமறித்து கொலை மிரட்டல் விட்டதாக தெரிகிறது. இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வேலுமணி காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு உள்ளிட்ட தி.மு.க.வினர் மீது கொலை மிரட்டல் விடுத்தது உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.