Published:Updated:

கோவா திரைப்பட விழா கண்காட்சியில் பெரியார் திரைப்படம்!

கோவா திரைப்பட விழா கண்காட்சியில் பெரியார் திரைப்படம்!
கோவா திரைப்பட விழா கண்காட்சியில் பெரியார் திரைப்படம்!

கோவா: கோவாவில் நடைபெறும் இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் பெரியார் திரைப்படத்தின் சுவரொட்டியும் இடம்பெற்றுள்ளது.

கோவா திரைப்பட விழா கண்காட்சியில் பெரியார் திரைப்படம்!

கோவாவில் நடைபெறும் 44வது இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழாவையொட்டி, பனாஜியில் உள்ள கலா அகாடெமியில் தேசிய திரைப்படக் காப்பகத்தின் சார்பில் இந்தியன் பனோரமா சிறப்பு புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான 84 படங்களின் சுவரொட்டிகளுடன் அப்படங்கள் பற்றிய குறிப்பும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வைக்கப்பட்டுள்ளது.

##~~##
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பன்னாட்டுப் பார்வையாளர்கள் இதனை பார்வையிட்டுச் செல்கின்றனர். இதில் அக்கிரகாரத்தில் கழுதை, வேதம் புதிது, நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட சில தமிழ்ப படங்களின் படமும் வைக்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில் பெரியார் திரைப்படத்தின் சுவரொட்டியும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.