'பெண்கள் வாழத் தகுதியற்ற நாடு இந்தியா’ என்பதைக் குறிக்கும் வகையில் ஜி-20 நாடுகளின் கூட்டத்தில், பெண்கள் நிலையில் கடைசி இடம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதை உறுதிபடுத்தும் வகையில் நடந்துள்ளது அஸ்ஸாம் அநியாயம்.

அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள மதுபான அரங்கொன்றில் நண்பரின் பிறந்த நாளுக்காக நடந்த இரவு விருந்தில் பங்கேற்றுத் திரும்பி இருக்கிறார் ஒரு டீன் ஏஜ் பெண். திரும்பி வரும்போது போதையில் இருந்த 16 பேர் கொண்ட கும்பல், சாலையில் அவரை சூழ்ந்துகொண்டு முடியைப் பிடித்து இழுத்தும் அடித்து உதைத்தும் ஆடைகளைக் கிழித்தெறிந்தும் மானப்பங்கப்படுத்தி உள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் கௌரவ் ஜோதி நியோக் என்ற பத்திரிகையாளர் இருக்க... அவரோடு இருந்த கேமராமேன் அந்த சம்பவத்தை படம் பிடித்தார். அது ஜூலை 9-ம் தேதி 'நியூஸ் லைவ்’ என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இந்தக் காட்சி ஒளிபரப்பானதும் நாடே கொந்தளித்தது. அடாவடிக் கும்பலின் படங்கள் தேடப்படும் நபர்களின் வரிசையில் அஸ்ஸாமின் மூலை முடுக்கெங்கும் ஒட்டப்பட்டது. அஸ்ஸாம் எங்கும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பட்டங்களும் போராட்டங்களும் நடந்த வண்ணம் உள்ளன.

முக்கியக் குற்றவாளி என்று கருதப்படும் அமர்ஜோதி, ஒடிசா மாநிலத்துக்குத் தப்பியோடிவிட... இதுவரை 12 பேரைக் கைது செய்திருக்கிறது போலீஸ்.

இந்த நிலையில்தான், அந்தப் பெண்ணை படம் பிடித்த பத்திரிகையாளரின் தூண்டுதல் காரணமாகவே இந்தக் குற்றச் செயல் நடந்துள்ளது என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் புகாரை எழுப்பி இருப்பவர் அண்ணா ஹஜாரே குழுவின் உறுப்பினரும் கிரிஷக் முக்தி சங்கம் சமிதியின் பொதுச் செயலாளருமான அகில் கோகாய்.

''அமர்ஜோதி கலிதா என்பவர்தான் அந்த இளம் பெண்ணை மானபங்கம் செய்த கூட்டத்தில் பிரதானமானவர். பத்திரிகையாளர் நியோக்கும் கலிதாவும் நெருங்கிய கூட்டாளிகள். அந்தக் கும்பலுக்கு ஆதரவாகத்தான் நியோக் செயல்பட்டுள்ளார். ஒளிபரப்பப்பட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது. முழுமையான வீடியோவை ஆராயந்தால்தான் உண்மைகள் புலப்படும். பத்திரிகையாளரின் குரலும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. அதை எடிட் செய்துவிட்டு ஒளிபரப்பி இருக்கிறார்கள்'' என்கிறார் அவர். இப்போது முழுமையான வீடியோ காவல் துறையின் கையில் இருக்கிறது.

இதனை அடுத்து பத்திரிகையாளரான கௌர ஜோதி நியோக் தன் பணியை ராஜினாமா செய்து

இருக்கிறார். வீடியோவை ஒளிபரப்பிய நியூஸ் லைவின் முதன்மை ஆசிரியர் அட்னு புஹுனும் பணியை ராஜினமா செய்துள்ளார். 'ஒரு பத்திரிகையாளராக சம்பவ இடத்தில் செய்ய வேண்டிய கடமையைத்தான் நியோக் செய்துள்ளார். அவரும் கலிதாவும் நணபர்கள் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. எங்கள் நிர்வாகத்துக்கு அரசியல் ரீதியாகக் கொடுக்கப்படும் அழுத்தத்தைத் தவிர்க்கத்தான் நான் பதவியை விட்டு விலகுகிறேன்’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், ''ஒரு பிரச்னை நடக்கும்போது அதை காவல் துறைக்குத் தகவல் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை ஓர் பத்திரிகையாளனுக்கு உண்டு'' என்று அஸ்ஸாம் முதலமைச்சர் தருண் கோகாயும் ஆவேசக் கருத்து வெளியிட்டுள்ளார்.

சம்பவம் நடக்கும் இடத்தில் ஒரு பத்திரிகையாளனின் கடமை என்னவாக இருக்கவேண்டும் என்பது குறித்து நம்மிடம் இங்கே பேசுகிறார், மூத்த பத்திரிகையாளர் குமரேசன். ''அடிப்படையில் ஒரு தொழில் என்ற முறையில் காண்பதைச் செய்தியாக்க வேண்டிய முதல் கடமை ஊடவியலாளருக்கு உண்டு. அதேசமயம், கண் முன் ஓர் உயிர் துடிக்கிறபோது 'நான் படம் எடுத்துக்கொண்டு இருப்பேன்’ என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஓர் பெண்ணை அவமானப்படுத்துகிறபோது அந்த இடத்தில் மனிதம் மிகுந்த கடமைதான் முக்கியம். ஓர் ஊடகவியலாளனுக்கு அந்த உணர்வு நிச்சயம் அதிகமாக இருக்க வேண்டும். நேரடி ஒளிபரப்பு போன்ற முறைகள் வந்த பின்னர் எல்லாமே செய்தி சார்ந்த வர்த்தகம் என்ற எண்ணமாகிவிட்டது. இதனால் சம்பவங்களை உடனுக்குடன் காட்டுவதில் போட்டி ஏற்பட்டு, ஒரு பெண் மானபங்கப்படுத்துவதையும் காட்சிப் பொருளாகக் காட்டுகிறார்கள். இதுபோன்ற காட்சிகளால் சாதாரணமான ஒரு மனிதனின் மனதிலும் வக்கிர எண்ணங்கள் தோன்ற வாய்ப்பு உண்டு. ஒரு தொழிலாக மட்டும் ஊடகப் பணியை யாரும் செய்யக்கூடாது'' என்கிறார் அவர்.

- மகா.தமிழ்ப்பிரபாகரன்