Published:Updated:

ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி ஆளுநர் அழைப்பு!

Vikatan Correspondent
ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி ஆளுநர் அழைப்பு!
ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி ஆளுநர் அழைப்பு!
ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி ஆளுநர் அழைப்பு!

புதுடெல்லி: டெல்லியில் ஆட்சியமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 31 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆட்சிக்கு அமைக்க 36 இடங்கள் வேண்டும். ஆனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு வருமாறு பா.ஜ.க.வுக்கு டெல்லி கவர்னர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், பா.ஜ.க. ஆட்சி அமைக்க முன்வரவில்லை.

##~~##
இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி கவர்னர் நஜீப் ஜங் ஆட்சி அமைப்பது குறித்த பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கவர்னரை சந்தித்து பேசுகிறார்.
ஏற்கனவே, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக ராகுல் காந்தி கூறியிருக்கிறார். ஆனால் இந்த ஆதரவை ஏற்க கெஜ்ரிவால் விரும்பவில்லை என்றும், மறு தேர்தலை சந்திக்கவே அவர் ஆர்வமாக உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.