Published:Updated:

டெல்லி, ராஜஸ்தான், ஹரியானாவில் தாக்குதல் நடத்த லஸ்கர்–இ–தொய்பா திட்டம்!

Vikatan Correspondent
டெல்லி, ராஜஸ்தான், ஹரியானாவில் தாக்குதல் நடத்த லஸ்கர்–இ–தொய்பா திட்டம்!
டெல்லி, ராஜஸ்தான், ஹரியானாவில் தாக்குதல் நடத்த லஸ்கர்–இ–தொய்பா திட்டம்!
டெல்லி, ராஜஸ்தான், ஹரியானாவில் தாக்குதல் நடத்த லஸ்கர்–இ–தொய்பா திட்டம்!

புதுடெல்லி: டெல்லி, ராஜஸ்தான், ஹரியானாவில் தாக்குதல் நடத்த லஸ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பது, கைதான தீவிரவாதி டைரியின் மூலம் தெரிய வந்துள்ளது.

டெல்லி, மும்பை போன்ற நகரங்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் உள்ளது. இந்த இரு நகரங்களிலும் போலீசாரும், உளவு பிரிவினரும் 24 மணி நேரமும் உஷார் நிலையில் உள்ளனர். இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவர்களை குறிப்பாக பாகிஸ்தான் செல்பவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஹரியானா மாநிலம் மேவாட்டை சேர்ந்த முகமத் சாகித் என்பவர் மீது டெல்லி போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து டெல்லி சிறப்பு புலனாய்வு போலீசார் மேவாட் சென்று முகமத் சாகித்தை கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் அவன் இரண்டு முறை பாகிஸ்தான் சென்று வந்திருப்பதும், அவனுக்கு பாகிஸ்தானின் லஸ்கர்–இ–தொய்பா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், அவனிடம் இருந்து முக்கிய தகவல்கள் அடங்கிய டைரியையும் போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த டைரியில், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் பாகிஸ்தானின் லஸ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் திட்டம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. இதையடுத்து, உடனடியாக முகம்மத் சாகித்தை டெல்லி கொண்டு சென்று ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

##~~##
முகமத் சாகித், சதித்திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக 2 முறை பாகிஸ்தான் சென்று லஸ்கர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்து வந்துள்ளான். இவனுடன், லஸ்கர்–இ–தொய்பா தீவிரவாத இயக்கத்தின் உயர்மட்ட கமாண்டரான ஜாவித் பலுச்சி என்பவனும் தங்கி இருந்து முக்கிய சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறான்.
டெல்லி சிறப்பு போலீசார் முகம்மத் ஷாகித்தை கைது செய்தபோது, ஜாவித் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறான். தற்போது, அவனை பிடிக்க நாடு முழுவதும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.