Published:Updated:

வெளிச்சத்துக்கு வந்த ஆர்த்தி ராவ்!

டெஸ்ட்டுக்கு நாங்கள் தயார்; நித்தி தயாரா?

பிரீமியம் ஸ்டோரி
##~##

'நித்தியானந்தா என்னை வசியப்படுத்தி 40 முறை உறவு கொண்டார்’ என்று போலீ ஸாரிடம் வாக்குமூலம் கொடுத்தவர். நித்தி - ரஞ்சிதா வீடியோ வெளியில் வர முக்கியக் காரணமாக இருந்தவர். நித்தியின் அறைக்குள் ஏர்ஃபில்டரில் வீடியோவைப் பொருத்தியவர் என்று ஏகப்பட்ட பரபரப்புக்குச் சொந்தக்காரர் ஆர்த்தி ராவ். 

இவர், பகிரங்கமாக நித்தியின் மீது குற்றம் சாட்டத் தொடங்கியதும், 'ஆர்த்தி ராவுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டியது இல்லை. அவரின் உடலோடு உடல் உரசினாலே... அவருக்கு இருக்கும் ஹெர்பியா-2 என்ற நோய் ஒட்டிக்கொள்ளும். டெஸ்ட்டுக்கு நான் தயார்!’ என்று நித்தி சவால் விட்டார். 'போலியான வீடியோ தயாரித்து என்னை அசிங்கப்படுத்தி விட் டார்’ என்று ஆர்த்தி ராவ் மீது, ரஞ்சிதா வழக்குத் தொடர்ந்தார். 'நித்தியானந்தா மீது அவதூறு பரப்பினார்’ என்று நித்தியின் சீடர் ஆத்ம பிரபானந்தாவும் ஒரு பக்கம் வழக்குத் தொடர்ந்தார். இவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல்

வெளிச்சத்துக்கு வந்த ஆர்த்தி ராவ்!

மௌனம் காத்துவந்தார் ஆர்த்தி ராவ். எங்கே இருக்கிறார் என்பதும் தெரியாமல் இருந்தது!

ஒரு கட்டத்தில் கன்னட சேனல் ஒன்றுக்கு ஆர்த்தி ராவ், தனது முகத்தை மறைத்தபடி பேட்டி கொடுத்தார். உடனே, 'நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது ஆர்த்தி ராவை மீடியாவில் பேச அனுமதிக்கக் கூடாது’ என்று நித்தியானந்தா தரப்பு மீண்டும் கோர்ட்டுக்குப் போனது. அந்த வழக்கின் மீது விசாரணை நடந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில்தான், இடைக்கால ஜாமீன் கேட்டு தனது வழக்கறிஞர் சுமதி மூலமாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் ஆர்த்தி ராவ். அந்த மனு மீதான விசாரணை கடந்த 30-ம் தேதி நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, எட்டு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு இட்டார்.

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஆர்த்தி ராவிடம் பத்திரிகையாளர்கள் எவ்வளவோ கேட்டும், மர்மமான புன்னகையுடனே கடந்து போய்விட்டார். ஆர்த்தி ராவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம். ''மீடியாவிடம் பேச ஆர்த்திக்கு எந்த பயமும் கிடையாது. ஏன்னா ஆர்த்தி எந்தத் தப்பும் பண்ணலை. தப்பு செஞ்ச நித்தியே தினமும் பத்திரிகையாளர்களிடம் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டு இருக்கார். ஆர்த்தி ராவ் வாயைத் திறந்தால், தன்னுடைய முகத்திரை கிழிக்கப்பட்டு விடும் என்ற பயத்தில்தான், நித்தி தரப்பு ஆர்த்தி பேசுவதற்கு நீதிமன்றத்தின் மூலமாகத் தடை கேட்டிருக்காங்க. தப்பே பண்ணாத உத்தமபுத்திரனாக இருந்தால், நித்தி எதுக்குப் பயப்படணும்?

ஆர்த்தி இவ்வளவு நாளாக வெளியில் வராமல் இருந்ததால்தானே நித்தியும் அவரோட கூட்டமும் தைரியமாப் பேசிட்டு இருந்தாங்க. இப்போ ஆர்த்தி வெளியில் வந்தாச்சு. ஜாமீனும் வாங்கியாச்சு. 'மீடியாவில் பேசக்கூடாது’ என்று நித்தி தரப்பில் போட்ட மனு இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு வருது. அந்த வழக்கில் எங்க தரப்பு நியாயங்களை முன்வைக்கப் போறோம். அதுக்குப் பிறகு, நித்திக்கு இருக்கிறது கச்சேரி.

ஆர்த்தியோட முகத்தைப் பாருங்க. அது நோய் வந்த பொண்ணு மாதிரியா இருக்கு? ஆர்த்தி வெளியில வர மாட்டார் என்ற தைரியத்தில்தான் நித்தி வாய்க்கு வந்ததை சொல்லிட்டு இருந்தார். ஆர்த்தியும் எல்லா டெஸ்ட்டுக்கும் தயாராகத்தான் இருக்காங்க. டெஸ்ட்டுக்கு வர நித்திக்கு தைரியம் இருக்கா? முழுசா நனைஞ்சாச்சு. இனி முக்காடு போட்டு எந்தப் பிரயோஜனமும் இல்லைங்கிற நிலைக்கு ஆர்த்தி வந்தாச்சு. அதனால், ஆர்த்தியின் ஆக்ரோஷ முகத்தை இனிதான் நித்திப் பார்க்கப் போகிறார்'' என்றார்கள்.

ஆர்த்தி ராவுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும், நித்தி தொடர்பான ஆவணங்களையும் லெனின் கருப்பன் கொடுத்து உதவுகிறாராம். அதோடு, நித்தியால் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து, அவருக்கு எதிராகப் போராட்டக் களத்தில் குதிக்கவும் ஏற்பாடுகளை செய்கிறாராம்.  

லெனினிடம் பேசினோம். ''தான் செஞ்ச தப்பை யாரெல்லாம் தட்டிக் கேட்கிறார்களோ, அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு அலைக்கழிப்பதுதான் நித் தியின் டெக்னிக். நானோ, ஆர்த்தி ராவோ சொல்வது பொய் என்றால், நீதிமன்ற உத்தரவுப்படி, மருத்துவப் பரிசோதனைக்கு ஏன் நித்தி ஆஜராகவில்லை?'' என்று வெடித்தார்.

ஆர்த்தியின் வருகை பல கேள்விகளுக்கு விடை கொடுக்கட்டும்!

- கே.ராஜாதிருவேங்கடம்

படம்: சொ.பாலசுப்ரமணியன் 

வெளிச்சத்துக்கு வந்த ஆர்த்தி ராவ்!

நித்திக்கு பிடிவாரன்ட்?

கடந்த 28-ம் தேதி ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியின் வக்கீல் முத்துமாலை  ஆஜர் ஆனார். ''சுவாமி நித்தியானந்தா ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டவாறு கைலாய மலைக்குப் புனித யாத்திரை சென்றுள்ளார். அதனால் சி.ஐ.டி. போலீஸ் குறிப்பிட்டிருக்கும் தேதியில் மருத்துவப் பரிசோதனைக்கு ஆஜராக முடியாது. ஆகஸ்ட் 25-ம் தேதி சுவாமி கைலாய மலையிலிருந்து திரும்பி விடுவார். அதன் பிறகு ஒத்துழைப்பு கொடுப்பார்'' என்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதற்கு கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு.

''ஏற்கெனவே எட்டு முறை ஏமாற்றிய நித்தி, இப்போது ஒன்பதாவது முறையும் ஏமாற்றுகிறார். இது சட்டத்தையும், காவல் துறையையும் அவமதிக்கும் செயல். அதனால் நித்தியானந்தா ஆஜராகாவிட்டால், அவரது ஜாமீனை ரத்து செய்து பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும்'' என்று கேட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பவதி, ''மனு மீதான‌ தீர்ப்பு ஆகஸ்ட் 2-ம் தேதி வழங்கப்படும்'' என்று அறிவித்துள்ளார்.

அநேகமாக கைலாய மலையில் இருந்து விரைவில் நித்தி ரிட்டன் வரவேண்டிய நிலை வரலாம்!

- இரா.வினோத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு