Published:Updated:

பிரதமரை சந்தித்த 24 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு!

விகடன் விமர்சனக்குழு
பிரதமரை சந்தித்த 24 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு!
பிரதமரை சந்தித்த 24 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு!
பிரதமரை சந்தித்த 24 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரம்: பிரதமர் உறுதியளித்த 24 மணி நேரத்திற்குள் தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை மீண்டும் சிறைபிடித்து சென்றிருப்பது மீனவர்களிடையே அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணம் மற்றும் ஜெகதாபட்டினத்திலிருந்து நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள்  மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்றிரவு இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மீனவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மீனவர்களின் படகுகளை சோதனையிட்ட இலங்கை கடற்படையினர், கோட்டைபட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 6 விசைப் படகுகளையும் அதில் மீன் பிடிக்க சென்ற 22 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் தற்போது காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடற்படையினரின் விசாரணைக்கு பின் இவர்கள் ஊர்காவல்துறை காவல்துறையினர் மூலம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.

ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 231 மீனவர்கள் இலங்கை சிறையில் வாடிவருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 59 விசைப்படகுகளும் போதிய பாதுகாப்பின்றி இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாதகணக்கில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் போதிய பராமரிப்பு இல்லாததால் சேதமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கை சிறை வைக்கப்பட்டிருக்கும் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி தமிழக மீனவர்கள் பிரதமர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சரை நேற்று சந்தித்து முறையிட்டனர்.

##~~##
சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விரைவாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர்களிடம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் உறுதியளித்திருந்தனர். ஆனால் அவர்கள் உறுதியளித்த 24 மணி நேரத்திற்குள் தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை மீண்டும் சிறைபிடித்து சென்றிருப்பது மீனவர்களிடையே அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
"நாட்டின் குடிமக்களான மீனவர்களை மீட்க அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்வர், பிரதமர் என அனைவரிடமும் முறையிட்டுவிட்டோம். இதன் பின்னராவது எங்கள் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இதற்கு நேர்மாறாக இலங்கை கடற்படையினரின் செயல்கள் உள்ளது. இன்று 22 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் செயல் இதனை உறுதிபடுத்துகிறது. இனி நாங்கள் எங்கள் மீனவர்களை விடுவிக்க யாரிடம் சென்று முறையிடுவது என தெரியவில்லை" என மீனவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இரா.மோகன்