ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மன்மோகன் முகத்தில் கரி!

இந்தியாவுக்கு இழப்பு 3.78 லட்சம் கோடி

##~##

ர் அமைச்சர் எட்டு அடி பாய்ந்தால்... இன்னோர் அமைச்சர் 16 அடி பாய்கிறார். இது, நல்ல விஷயத்தில் என்றால் பாராட்டலாம். ஆனால், ஊழலில் அல்லவா பாய்ந்து உள்ளனர்! 

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில்

மன்மோகன் முகத்தில் கரி!

1.76 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளது என்ற சி.ஏ.ஜி-யின் அறிக்கை மீதான விசாரணையே இப்​போதுதான் நடந்து வருகிறது. இன்னமும் குற்ற​வாளிகள் தண்டனை பெறவில்லை. அதற்குள், நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இதனுடைய மதிப்பு சி.ஏ.ஜி-யின் கணக்குப்படி

மன்மோகன் முகத்தில் கரி!

3.78 லட்சம் கோடி. எத்தனை பூஜ்யங்கள் என்பதை பொருளாதார மேதையான பிரதமரே யோசித்துத்தான் சொல்வார்.

மன்மோகன் முகத்தில் கரி!

மத்தியத் தணிக்கைத் துறை என்பது அரசு நிர்வாகத்தில் நடந்த விஷயங்களை நாடி பிடித்துப் பார்த்து... ஊழல்  நடந்துள்ளதா, முறையாக செலவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை எக்ஸ்ரே மாதிரி உள்ளதை உள்ளதாகச் சொல்லும் அமைப்பு. பொதுவாகவே, இதனு​டைய அறிக்கைகள் சர்ச்சையைக்

மன்மோகன் முகத்தில் கரி!

கிளப்புவதாக​வே இருக்கும். அதுவும் வினோத் ராய் தலைவராக வந்த பிறகு இன்னும் விறுவிறுப்பு கூடிப்போனது. இந்த ஆண்டு தனித்தனியாக இல்லாமல் மூன்று அறிக்கைகளை ஒரே நாளில் வெளிட்டதுதான் ஷாக்!

மூன்று தணிக்கை அறிக்கைகளையும் நாடாளுமன்​றத்தில் சமர்ப்பித்துவிட்டு பத்திரிகையாளர்​களிடம் விளக்கினார் கூடுதல் தலைமைக் தணிக்கையாளர் ஏ.கே. பட்நாயக். ஒன்று நிலக்கரி. அதாவது நிலக்கரிச் சுரங்கங்களை அதிக விலைக்குக் கேட்பவர்களுக்கு ஏலத்தில் விட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தனியாருக்கு, தங்களது விருப்பத்தின் அடிப்​படையில் கொ​டுத்த வகையில்  

மன்மோகன் முகத்தில் கரி!

.1.86 லட்சம் கோடி இழப்பு என்பது முதல் குற்றச்​சாட்டு.

இரண்டாவது, டெல்லி புதிய சர்வ​தேச விமான நிலையம் பற்றியது. அதைக் கட்டிப்பராமரிக்கும் தனியார் நிறுவனத்துக்கு நிலத்தைக் குத்தகைக்குக் கொடுத்த வகையில், ஒரு

மன்மோகன் முகத்தில் கரி!

1.63 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு.

மன்மோகன் முகத்தில் கரி!

மூன்றாவது, தனியார் மின் உற்பத்தி நிறுவனமான ரிலையன்ஸ் சம்பந்தப்பட்டது. அந்த நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு மாறாக, நிலக்கரியை எடுக்க அனுமதி கொடுத்து, சுமார் 29 ஆயிரம் கோடி வரை அந்த நிறுவனத்தை லாபம் அடையச் செய்தது என்று மூன்று இழப்புகள் குறித்து குற்றம் சாட்டுகிறது சி.ஏ.ஜி.

இந்த மூன்று விவகாரங்களிலும் சேர்த்து

மன்மோகன் முகத்தில் கரி!

3.78 லட்சம் கோடி அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை. இந்தியாவில் ஒரு வருடத்தில் மக்கள் மீது விதிக்கப்படும் பல வரிகள் மூலம் அரசுக்கு சுமார்

மன்மோகன் முகத்தில் கரி!

7.86 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதன்படி பார்த்தால் ஓர் ஆண்டு வரி வருமானத்தின் பாதித் தொகை இது.

இப்போது, கிரானைட்டில் அடிக்கப்படும் கொள்​ளை​யைப் போன்று 70-களில் நிலக்கரிகளை மாஃபியா கும்பல் கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தது. இந்தநிலையில், நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்ட நிலங்கள் தேசியமயமாக்கப்பட்டன. மத்திய அரசின் கீழ் உருவாக்கப்பட்ட, 'கோல் இண்டியா’ நிறுவனம்தான் இந்த நிலக்கரிக் கனிமங்களைப் பாதுகாத்து ​வந்தது. பொதுவாக, இந்தச் சுரங்கங்களை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின்உற்பத்தி நிறுவனங்​களே பயன்படுத்தி வந்தன. ஒரு சில தனியார் இரும்பு எஃகு நிறுவனங்களும் நிலக்கரியை அரசிடம் வாங்கிக்கொண்டு இருந்தன.  

காங்கிரஸ் தலைமையிலான அரசு 2004-ல் வந்த பிறகு, டாடா ஸ்டீல், டாடா பவர், ஜிண்டல் ஸ்டீல் மற்றும் பவர், எஸ்ஸார் பவர், அதானி பவர் போன்ற 25 நிறுவனங்கள் தங்களுடைய இரும்பு எஃகு மற்றும் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கோரியது. அப்போது, நிலக்கரித் துறை அமைச்சராக இருந்தவர் ஜார்கண்டைச் சேர்ந்த சிபு சோரன். அவர் முடிவெடுப்பதற்கு முன்னதாக ஒரு கொலை வழக்கில் கைதாகி அமைச்சர் பதவியை ராஜினாமா செயதார். பின்னர், இந்தத் துறை பிரதமர் மன்மோகன் சிங் வசம் சென்றது. இந்தத் துறையின் செயலாளர், 'இந்த நிறுவனங்களுக்கு ஏல முறையில் ஒதுக்க வேண்டும்’ என்று குறிப்பு எழுதி அனுப்பினர். இந்தத் துறைக்கு பிரதமர்தான் அமைச்சர், ஆந்திராவைச் சேர்ந்த தாசரி நாராயண ராவ் இணை அமைச்சர். அவர் மூலமாக இந்த ஃபைல் பிரதமருக்கும் சென்றது. ஆனால், இந்த ஃபைல் குறித்து  2006 வரை மன்மோகன் எந்த முடிவும் எடுக்கவில்லை. பிரதமர் அலுவலகம், நிலக்கரித் துறை, சட்டத் துறை, தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், இறுதி முடிவு எடுக்கப் படவில்லை.

இதுவரை 'ஸ்கிரீனிங் கமிட்டி’தான் யாருக்கு எவ்வளவு என்று ஒதுக்கீடு செய்துவந்தது.  இதில் பல்வேறு துறை அதிகாரிகள் இருப்பார்கள். யாருக்கு எவ்​வளவு ஒதுக்கப்பட்டது என்பது தெரியாது. எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்​பட்டது என்றும் கேள்வி கேட்க முடியாது. எனவே, இந்த முறையால் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற்று வருகின்றன என்று நிலக்கரித் துறைச் செயலாளர்கள் இந்த முறையை எதிர்த்தார்கள். ஆனால், பிரதமர் அலுவலகம், இந்த ஸ்கிரீனிங் கமிட்டி முறையை ஆதரித்து இறுதி உத்தரவைப் பிறப்பித்தது. இன்றைய சிக்கலுக்கு இந்த உத்தரவுதான் காரணம்!

25  நிறுவனங்களுக்கு சுமார் 15 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தோண்ட அனுமதிக்கப்பட்டது. இதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையும் அப்போது நிலவிய மார்க்கெட் விலையுடன் ஒப்பிட்டதில் சுமார்

மன்மோகன் முகத்தில் கரி!

1.86 லட்சம் கோடி (1,85,998) குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி குற்றம்சாட்டுகிறது. இந்தத் தொகை இழப்பு என்றாலும், தனியார்களிடம் இருந்து ஆதாயம் பெறும் நோக்கத்தோடு யாராவது செயல்பட்டிருந்தால்தான், இதை ஊழலாகச் சொல்ல முடியும்.

பிரதமர்தான் இந்த விவகாரத்துக்குப் பொறுப்பு என்று எதிர்க்கட்சிகள் பிரச்னையை எழுப்பினாலும், 'அவர்தான் ஊழல் செய்தார்... லஞ்சம் வாங்கினார்’ என்று யாரும் சொல்லவில்லை. சொல்லவும் முடியாத நிலைமை. அப்போது, இந்தத் துறையின் இணை அமைச்சராக இருந்தவர் தாசரி நாராயண ராவ். அப்போதே அவரைப் பற்றி, 'சினிமா தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை அமைச்சராகித் தீர்த்துக்கொண்டார்’ என்று சொல்லப்பட்டது. அதன்பின்னர், இந்தத் துறைக்கு வந்தவர் ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் சந்தோஷ் பக்ரோடியா. இவர்களில் யார் ஆதாயம் அடைவதற்காக, எதற்காக தனியார்களுக்குக் குறைவான விலையில் நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டது என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த நிலக்கரி பேரத்தில் ஆதாயம் பெற்றதற்கான தகவல்கள் இதுவரை ஆதாரமாக வெளியாகவில்லை. ஆனாலும், மன்மோகன் சிங்கின் நிர்வாகக் கோளாறுகளுக்கு மிக மோசமான உதாரணமாக இருக்கிறது இந்த அறிக்கை!

''பல்வேறு மாநில அரசுகள் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் நாங்கள் இந்த முடிவு எடுத்தோம். நிலக்கரியை ஏலத்தில் எடுக்க அனுமதித்தால், மின் கட்டணம் உயரும். பல்வேறு மாநில அரசுகளின் மின்சார வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. அதனால், குறைந்த விலையில் மின்சாரம் தயாரிப்பதற்காகக் குறைந்த விலையில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்பட்டது'' என்று மத்திய அரசு இதற்குப் பதில் சொல்கிறது. ஆனால் இதை பி.ஜே.பி. மற்றும் இடதுசாரிகள் ஏற்கவில்லை.

''மாநில அரசுகள் மின் திட்டங்களுக்கு நிலக்கரி வழங்க சிபாரிசு செய்யலாம். ஆனால், அதை முறையோடு வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான். இதைச் சொல்லி யாரும் தப்பிக்க முடியாது'' என்கின்றனர். இது மட்டும் அல்ல, குறைந்த செலவிலான மின்சார உற்பத்தி என்று சொல்லப்படும் காரணமும் தவறு என்பதை மற்றொரு அறிக்கை தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கிய சாசன் மின்சார நிறுவனத்துக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக மொகெர், அம்லோஹ்ரி, சத்ரசால் ஆகிய சுரங்கங்கள் அனுமதிக்கப்பட்டன. இங்கே கிடைத்த அதிகப்படியான நிலக்கரியை தனது மற்றொரு மின்சார உற்பத்தி நிலையமான சித்ராங்கி மின் திட்டத்துக்கு ரிலையன்ஸ் நிறுவனம் கொண்டு சென்றுள்ளது.

இதைக் கண்டுபிடித்துக் கூறும் சி.ஏ.ஜி., 'சாசன் மின் திட்டத்தின் மின்சாரத்தைக் குறைவான விலைக்கு (ஒரு யூனிட் விலை

மன்மோகன் முகத்தில் கரி!

1.196) கொடுக்க ஒப்புக்கொண்டதால், அந்த நிறுவனத்துக்கு நிலக்கரி ஒதுக்கப்பட்டது. ஆனால் சித்ராங்கி மின்சாரத்தை

மன்மோகன் முகத்தில் கரி!

3.70 வரை விற்பனை செய்துள்ளது. அதிக விலைக்கு விற்கும் மின்சாரத்துக்கு அரசு நிலக்கரி ஒதுக்கவில்லை. ரிலையன்ஸின் சித்ராங்கி மின் நிலையத்துக்குப் பெறப்பட்ட நிலக்கரி மூலம், அந்த நிறுவனம்

மன்மோகன் முகத்தில் கரி!

29 ஆயிரம் கோடி ரூபாய் வரை பலன் அடைந்துள்ளது. குறைந்த விலை மின்சாரத்துக்காக குறைந்த விலை நிலக்கரி என்ற வாதம் தவறு என்பதற்கு இதுவே உதாரணம்.

  தனியார் நிறுவனத்தில் தொழிலாளி ஒருவர் வருமானத்தைத் தடுத்து விட்டார் அல்லது சுரண்டி விட்டார் என்றால், முதலாளி அவரை உடனே வீட்டுக்கு அனுப்பி விடுவார். ஆனால், அரசாங்கத்தின் சொத்துக் களைக் காப்பாற்றத் தவறும் அரசு ஊழியர்களான அரசியல் வாதிகளைக் கண்டிக்க சி.ஏ.ஜி. இருந்தாலும்... தண்டிப்பது யார்?

- சரோஜ் கண்பத்