Published:Updated:

மதுரை வந்த மு.க.அழகிரி மௌனமாக சென்றார்!

Vikatan Correspondent
மதுரை வந்த மு.க.அழகிரி மௌனமாக சென்றார்!
மதுரை வந்த மு.க.அழகிரி மௌனமாக சென்றார்!

மதுரை: மதுரை விமான நிலையம் வந்த மு.க.அழகிரி, யாரிடமும் எதுவும் பேசாமல் மௌனமாக அங்கிருந்து காரில் ஏறி சென்றார்.

மதுரை வந்த மு.க.அழகிரி மௌனமாக சென்றார்!

சர்ச்சைக்குரிய போஸ்டர், தனியார் தொலைக்காட்சிக்கு அதிரடி பேட்டி போன்றவற்றால் கடந்த சில நாட்களாக தி.மு.க.வுக்குள் பிரளயத்தை உண்டு பண்ணிய மு.க.அழகிரிக்கு பதிலடியாக, அவரின் ஆதரவாளர்கள் அதிகமாக பதவி வகிக்கும் மதுரை மாநகர தி.மு.க. அமைப்பை ஒட்டு மொத்தமாக கலைத்தது மட்டுமில்லாமல், ஸ்டாலின் ஆதரவளர்களை பொறுப்புக்குழு நிர்வாகிகளாக நியமித்து ஷாக் கொடுத்தது கட்சித்தலைமை!

மதுரை வந்த மு.க.அழகிரி மௌனமாக சென்றார்!

அடுத்த பேரிடியாக மன்னன், முபாரக் உட்பட அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் ஐந்து பேரை இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத அழகிரி சென்னையில் முகாமிட்டார். தன் தந்தை கருணாநிதியை சந்திக்க சென்றபோது அவரை சந்திக்க கருணாநிதி மறுத்து விட்டார். அடுத்த முயற்சியாக உறவினர்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கருணாநிதியை சமாதானம் செய்து, கடந்த 11ஆம் தேதி சந்தித்தார்.

##~~##
அப்போது கட்சிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ ஏதாவது அழகிரி ஏதாவது பேசுவார் என்று மீடியாக்கள் எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் ‘‘போஸ்டர் ஒட்டியது என்னுடைய ஆதரவாளர்கள் அல்ல’’ என்றும், ‘‘பொங்கல் வாழ்த்து கூறத்தான் வந்தேன்’’ என்றும்  கூறிவிட்டு சென்றார்.
அடுத்து என்ன செய்யலாமென்று மதுரையில் அவரது ஆதரவாளர்கள் கைபிசைந்து நின்ற வேளையில், அழகிரி மதுரை வருவது சந்தேகம் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை 11 மணி விமானத்தில் மதுரைக்கு வந்தார் அழகிரி. இவரை வரவேற்க, ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்தனர்.
இங்கு ஏதாவது கருத்து சொல்வார் என்ற ஆசையில் மீடியாக்காரர்கள் காத்து நின்றபோது, எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமலும், யாரிடமும் எதுவும் பேசாமலும் முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு காரில் ஏறி சென்றுவிட்டார்.

செ.சல்மான்
படங்கள்:
பா.காளிமுத்து