Published:Updated:

அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்: டெல்லி அரசு முடிவு!

Vikatan Correspondent
அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்: டெல்லி அரசு முடிவு!
அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்: டெல்லி அரசு முடிவு!
அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்: டெல்லி அரசு முடிவு!

புதுடெல்லி: மத்திய அரசின் அன்னிய நேரடி முதலீட்டை டெல்லியில் அனுமதிக்க மாட்டோம் என கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில், முதல்வர் ஷீலா தீட்ஷித் ஆட்சியின்போது, சில்றை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கபட்டது. ஆனால், தற்போது ஆட்சி பொறுப்பில் அமர்ந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையில் அன்னிய முதலீட்டை எதிர்ப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தது. இதன் அடிப்படையில், டெல்லியில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என தற்போது டெல்லி கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது.

##~~##
இது தொடர்பாக டெல்லி அரசு, தொழில்துறை கொள்கை மற்றும் முன்னேற்ற துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''அன்னிய முதலீட்டு அனுமதியை ரத்து செய்ய வேண்டும். டெல்லியில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்'' எனக் கூறியுள்ளது. டெல்லி அரசின் இந்த கோரிக்கை குறித்து அந்த துறை ஆய்வு செய்து வருகிறது.
இதுவரை இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.