Published:Updated:

ஒரு செய்தியின் மரணம்!

ஒரு செய்தியின் மரணம்!

பிரீமியம் ஸ்டோரி
ஒரு செய்தியின் மரணம்!

'தி இந்து’ நாளிதழில் 25 ஆண்டு காலமாக ஆசிரியர் பதவி வகித்த பெருமை ஜி.கஸ்தூரிக்கு உண்டு.  

 கடந்த 21-ம் தேதி, தன் 87-வது வயதில் மறைந்த கஸ்தூரி, அந்த நாளிதழின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்தவர். 'தி இந்து’ நாளிதழின் வெளியீட்டாளரான கஸ்தூரி கோபாலனின் இரண்டாவது மகன் கஸ்தூரி. தன்னுடைய 20-வது வயதில் ஆசிரியர் குழுவில் அடி எடுத்துவைத்து ஆசிரியராக உயர்ந்தவர்.

அவரைப் பற்றிய நினைவுகளை மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் நம்மிடம்பகிர்ந்து​ கொண்டார். ''134 ஆண்டுகள் பழைமையான 'இந்து’ பத்திரிகையின் உள்ளடக்கத்துக்கும் வடிவத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் கஸ்தூரி. தொலை​நோக்கு, நவீனத்துவம், தொழில்​நுட்பம் ஆகியவற்றை மூச்சாகக்​கொண்டு செயல்பட்டார். பத்திரிகை உலகில் அறிமுகம் ஆகும் புதிய தொழில்நுட்பத்தை தனது பத்திரிகையிலும் உடனே அரங்கேற்றுவார். 80-களில் பத்திரிகை களில் கலர் பக்கங்களைப் பார்ப்பது அரிது. அந்த நாட்களில் அவர் ஏற்படுத் திய வண்ண அச்சாக்கமும் லே அவுட்டும் அவருடைய பெருமையைப் பேசின. செலவு பிடிக்கும் விஷயம் என

ஒரு செய்தியின் மரணம்!

மற்றவர்கள் தயங்கிய விஷயத்தைத் துணிச்சலோடு செய்துகாட்டி அதில் வெற்றி பெற்றார். இவர் செய்த விஷயங்களை மற்றவர்களும் பின்பற்ற ஆரம் பித்த போதுதான், அவருடைய முயற்சிகள் எப் படிப்பட்டவை என்பது தெரிந்தது. நவீன அச்சாக்கம் பிரின்டிங் நேரத்தை சுருக்கியது. இதனால், நள்ளிரவு வரை செய்திகளை அப்டேட் செய்ய முடிந்தது. மீடியாவின் எதிர்காலம் இன்டர்நெட்டையும் டிஜிட்டலையும் கடந்து போகும் என்பதை கஸ்தூரி வலியுறுத்தினார். நாளிதழை வினியோகிக்க, முதன்முறையாக தனி விமான சேவையைப் பயன்படுத்தினார். இப்படி பத்திரிகை உலகில் முன்னோடியாக காரியங்களைச் செய்தவர் கஸ்தூரி'' என்றார் பன்னீர்செல்வம்.

லால்பகதூர் தொடங்கி வி.பி.சிங் காலம் வரை அரசியல் விஷயங்கள் எல்லாம் இவர் இருந்தபோது அரங்கேறியவை. மிசா, 1974-ல் நடந்த அணுகுண்டு சோதனை, பஞ்சாப் போராட்டம், இந்திரா காந்தி படுகொலை, போபர்ஸ் விவகாரம் என இவர் காலத்தில் பதிவு செய்த விஷயங்கள் ஏராளம்.  

இந்தியாவின் முதல் குடிமகன் உட்பட கஸ்தூரியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திர முதல்வர்கள்கூட இரங்கல் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். தமிழகத்தின் இரண்டு பெரும் தலைவர்களான முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்தும் கருணாநிதியிடமிருந்தும் ஏனோ இரங்கல் வரவில்லை.

'தி இந்து’ தனது 134-வது வருடத்தை நிறைவு செய்த சில மணி நேரத்தில் ஜி.கஸ்தூரியின் மரணம் அமைந்தது.  சிலரது மரணங்கள் செய்தியாகும். இது, செய்தியாகவே வாழ்ந்தவரின் மரணம்!

- எம். பரக்கத் அலி

படம்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு