கிரானைட் வழக்கில் துரை தயாநிதியைத் தேடும் மதுரை போலீஸார், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் விசாரணை நடத்துவதற்கான சம்பிரதாயச் சடங்குகளுக்காக, டெல்லி செல்கிறார்கள். அதற்கு முன்னதாக, துரை தயாநிதி சம்பந்தப்பட்ட அத்தனை பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை தொடர்கிறது!

துரை தயாநிதியை எப்படியாவது கைது செய்துவிட மதுரை போலீஸ் துடிக்கிறது. கிரானைட் வழக்கில் துரை மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆரை, ஸ்குவாஷ் செய்யக் கேட்டு கடந்த வாரம் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அடுத்து, முன்ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக 8-ம் தேதி மனுத்தாக்கல் செய்தனர். இவை ஒரு பக்கம் நடந்துகொண்டு இருக்கும்போதே, துரை தயாநிதியைச் சுற்றி வலை விரிக்க ஆரம்பித்தது போலீஸ். தயாநிதியின் அத்தனை அசைவுகளையும் அறிந்தவர் என்பதால், பொட்டு சுரேஷை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியது போலீஸ். கிரானைட் விவகாரங்களில் முக்கிய சூத்ரதாரி என சொல்லப்படும் பொட்டு, போலீஸில் சிக்கினால் கஞ்சி காய்ச்சி விடுவார்கள் என்பதால் எங்கேயோ பதுங்கி விட்டார். இதை அடுத்து, அழகிரிக்கு நெருக்கமான முன்னாள் துணை மேயர் மன்னனை விசாரணைக்கு அழைத்தனர். 6-ம் தேதி கறுப்புச் சட்டையுடன் ஆஜரான மன்னனிடம், தயாநிதியின் இருப்பிடம் குறித்துத் துருவினார்கள்.

'மும்பைக்கு ஏன் போனீங்க?’

கடந்த இரண்டு மாதங்களில் மன்னன் யார் யாரோடு போனில் பேசினார் எங்கெங்கு எல்லாம் பயணித்தார் என்ற விவரத்தைக் கையில் வைத்துக்கொண்டு பேசிய போலீஸ், 'செப்டம்பர் 26, 27 தேதிகளில் மும்பையில் இருந்திருக்கிறீர்கள். அங்கே இருந்து கோவாவுக்குப் போனதற்கான ஆதாரங்கள் இருக்கு. எதற்காக அங்கு போனீர்கள்?’ என்று கொக்கியைப் போட்டதாம். அதற்கு, 'ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர் மும்பையில் இருக்கிறார். வருஷா வருஷம் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு என்னை அழைப்பார். நானும் போவேன்’ என்று சொன்னாராம் மன்னன். அவரது சொத்துக்கள் பற்றி கேட்டபோது, 'என் ஆடிட்டர் நம்பர் தர்றேன். அவருக்கிட்டயே கேட்டுக்குங்க’ என்று டபாய்த்தாராம் மன்னன். 'நாளைக்கு மறுபடியும் வரணும்’ என்று சொல்லி அவரை வழி அனுப்பிய போலீஸார், மறுநாள் நடிகர் ரித்தீஷை விசாரணைக்கு இழுத்தனர்.

அனுஷா வந்தார்!

கடந்த 7-ம் தேதி காலை 11 மணிக்கு முன்னதாகவே மதுரை எஸ்.பி. ஆபீஸில் கறுப்புச் சட்டையுடன் ஆஜரானார் ரித்தீஷ். 'அ.தி.மு.க. அரசைக் கண்டிச்சு எங்க மாவட்டத்தில் துண்டுப் பிரசுரம் கொடுத்துட்டு இருக்கோம். அதனால் நாளைக்கு வரவா?’ என்று ரித்தீஷ் வைத்த கோரிக்கையை ஏற்று, அவரை விசாரிக்காமலேயே அனுப்பி வைத்தது போலீஸ். துரை தயாநிதியின் வெளிநாட்டுப் பயணங்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டவர் என் பதாலும் ஆரம்பத்தில் டெல்லியில் உள்ள தனது வீட்டில் துரையை மறைத்து வைத்திருந்தார் என்று சொல்லப்படுவதாலும் ரித்தீஷைக் கொக்கி போடுகிறதாம் போலீஸ். ரித்தீஷ் அங்கிருந்து கிளம்பிய சற்றுநேரத்தில் மருமகள் அனுஷாவை அழைத்துக்கொண்டு வந்தார் காந்தி அழகிரி. அனுஷாவின் தந்தை வக்கீல் சீதாராமனும் உடன் இருந்தார். காந்தி, காருக்குள்ளேயே அமர்ந்திருக்க, அப்பாவும் மகளும் காரைவிட்டு இறங்கினர். தி.மு.க. வக்கீல்கள், முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன் குமார் தலைமையில், அனுஷாவைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

அம்மா ஆட்சியில் வக்கீலா இருந்தவன்!

''அ.தி.மு.க. ஆட்சியில் நான் அரசின் பேனல் அட்வகேட்டாக இருந்திருக்கிறேன். என்னுடைய மாமனார், எம்.ஜி.ஆரிடம் முதலமைச்சரின் அண்டர் செகரட்டரியாக இருந்தவர். என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்ததே முதல்வர் எம்.ஜி.ஆர். தான். அம்மா ஆட்சியிலும் சிப்காட்டில் அரசு வழக்கறிஞராக இருந்திருக்கிறேன். அழகிரி வீட்டில் சம்பந்தம் வைத்தபிறகு, அமைதியாக இருந்து விட்டேன். துரை தயாநிதியும் எனது மகளும் காதலிப்பதாகச் சொன்னார்கள். அந்தப் பையனிடம் தனியாக 15 நிமிடங்கள் பேசினேன். அவரது பிஹேவியர் பிடித்திருந்ததால், திருமணத்துக்குச் சம்மதித்தேன். சென்னையில், மகளும் மருமகனும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஆரம்பிச்சாங்க. அதுக்கு நான் சட்ட ரீதியான உதவிகளைச் செய்தேன். துரை தயாநிதி சினிமா கம்பெனி வைத்திருப்பது தெரியும். குவாரி பிசினஸில் இருந்தது எங்களுக்கு சத் தியமாகத் தெரியாது'' என்று சொன்னாராம் துரையின் மாமனார் சீத்தாராமன். 9-ம் தேதி மீண்டும் வரச் சொல்லியிருக்கிறது போலீஸ்!

'ரெண்டு மாசமா எங்க இருக்காருன்னே தெரியலை!’

'போயஸ் கார்டன் ஏரியாவில் தனியார் பங்களாவை வாடகைக்கு எடுத்து நானும் துரையும் குடியிருக்கிறோம். மாத வாடகை ஒரு லட்சம். அதை மாமாதான் (அழகிரி) கொடுக்கிறார். எங்களோடு அப்பாவும் இருக்கிறார்’ என்று கூறிய அனுஷா, 'உங்கள் கணவர் எங்கே இருக்கிறார்?’ என்று போலீஸ் கேட்டதுமே முகம் வாடிப்போனாராம். 'இது சாதாரணமான வழக்குதான். பயப்படாதே. முன்ஜாமீன் மனு போட்டிருக்கிறோம். சீக்கிரம் கிடைச்சிடும்’னு போனவர், ரெண்டு மாசமா எங்கே இருக்கார்னே தெரியல... போனில்கூட என்கிட்ட பேசுறது இல்லை’ என்றாராம். 'நீங்கள் சொல்றது நம்புறாப்புல இல்லையே. உண்மையைச் சொல்லுங்க’ என்று போலீஸார் நெருக்க, கண்களைக் கசக்கினாராம் அனுஷா. அதனால், தொடர்ந்து விசாரிக்க முடியாமல் தர்மசங்கடப்பட்டுப் போனதாம் போலீஸ்.

அதன்பிறகு, 'துரைக்கு கிரானைட் பிசினஸ் இருக் கிறதே எனக்கும் தெரியாது’ என்று சொன்ன

அனுஷா இன்னொரு கட்டத்தில், 'கிரானைட் பிசினஸில் இருந்து அவரு 2010-லேயே ரிலீவ் ஆகிட்டார். அவர் மேல் போலீஸ் பொய் கேஸ் போட்டிருக்கு’ என்றாராம். திருமணத்துக்குப் பிறகு லண்டன், தென் ஆப்பிரிக்கா தவிர வேறு எங்கேயும் வெளிநாட்டுப் பயணம் போகவில்லை’ என்று சொன்னவர், துரையின் நண்பர்கள் குறித்து கேட்டதற்கு 'மகேஷ் (திருவாரூர் ஏ.பி.ஆர்.ஓ), செங்குட்டுவன், வியாஸ், நடிகர் மகத், சித்தார்த்தன், சுஷாந்த் - இவங்கதான் துரைக்கு நண்பர்கள். (இதில் மகேஷ் தவிர அத்தனை பேரும் தலைமறைவாகி தாய்லாந்தில் இருப்பதாகச் சொல்கிறது போலீஸ்) சித்தார்த்தனும் சுஷாந்தும் துரையோட க்ளவுடு நைன் மூவீஸைக் கவனிச்சுக்கிட்டாங்க. இந்தக் கம்பெனியில் அஞ்சுகச் செல்வியின் கணவர் விவேக்கும் பார்ட்னர்தான்’ என்றாராம் அனுஷா. விசாரணை குறித்து நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், ''இவங்ககிட்ட எந்தத் தகவலையும் வாங்க முடியாதுன்னு எங்களுக்கும் தெரியும். இருந்தாலும் நாங்க எதுக்கு இதைச் செய்றோம்னு கூடிய சீக்கிரமே அவங்க புரிஞ்சுப்பாங்க’ என்கிறார்கள்.

மன்னன் தரப்பில், ''மன்னனிடம், 'துரையை சரண்டர் ஆகச்சொல்லுங்க; இல்லைன்னா எல் லாருக்கும் சிக்கலாகிப்போகும்’னு மிரட்டியிருக்கு போலீஸ். அவருக்கு இதெல்லாம் சகஜம். ஆனா, அந்தப் பாப்பாவுக்கு (அனுஷா) இதெல்லாம் புதுசு இல்லையா... அதனால் பயந்திருக்கலாம். இதுவரை 57 கிரானைட் வழக்குகள் பதிவாகி இருக்கு. இதுல பி.ஆர்.பி.யின் மேல் 22 கேஸ்கள். ஒரே ஒரு கேஸ்ல அதுவும் இரண்டாவது குற்றவாளியாத்தான் துரையை சேர்த்து இருக்காங்க. பி.ஆர்.பி-க்கோ, மத்தவங்களுக்கோ இத்தனை விசாரணை நடக்குதா? துரை சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கிறாங்கன்னா... இது அரசியல் பழிவாங்கல் இல்லாம வேறு என்ன?'' என்கிறார்கள்.

அடுத்து, காந்தி அழகிரியை விசாரணைக்கு அழைக்க இருக்கிறது போலீஸ். அதன்பிறகும் துரை தயாநிதி சரண் அடையாவிட்டால், அழகிரிக்கு சம்மன் அனுப்பவும் திட்டமிட்டு உள்ளனர். மத்திய அமைச்சர் என்பதால் நாடாளுமன்ற சபா நாயகருக்கு தகவல் தெரிவித்து அனுமதி வாங்க வேண்டும் என்பதற்கான வேலைகளை போலீஸார் தொடங்கி விட்டனர். மத்திய அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு போலீஸ் விசாரணைக்குப் போவதா அல்லது மகனைச் சரணடைய வைப்பதா என்ற கேள்விதான் இப்போது அழகிரி மனதில் பீதியைக் கிளப்பி வருகிறது.

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.காளிமுத்து