Published:Updated:

"நான் 'முதல்வர்' இல்லை... புரட்சிக்குப் பின் அரசியல்..." - ரஜினி உரையின் டாப் 25 ஹைலைட்ஸ்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இன்று, நடிகர் ரஜினிகாந்த் பேசிய உரையின் ஹைலைட் விஷயங்களைத் தொகுத்து வழங்கியுள்ளோம்!

நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பாகத் தனது விளக்கத்தை அளிப்பதற்காக செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த அறிவிப்பு நேற்று வெளியான போதே, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று போயஸ் கார்டன் வீட்டில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு வணக்கம் சொல்லி, தனது காரில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் லீலா பேலஸ் ஓட்டலுக்குப் புறப்பட்டார். வழியில், ரசிகர்கள் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். அவர் பேசிய உரையின் ஹைலைட் விஷயங்களைத் தொகுத்து வழங்கியுள்ளோம்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
எனக்கு என்ன 50 வயசா ஆகுது. இப்போ விட்டா அப்புறம் பாக்கலாம் என்று சொல்ல... எனக்கு 71 வயசு ஆகுது. ரஜினிகாந்த் 71 வயசுல பொழச்சு வந்திருக்கேன்!
ரஜினிகாந்த்
  • இந்த சந்திப்பு எதற்காக என உங்களுக்குத் தெரியும்... சில நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒரு விஷயத்தில் அதிருப்தி எனத் தெரிவித்திருந்தேன். அது தொடர்பாகப் பேசவுள்ளேன். சில விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த சந்திப்பு.

  • நான் 25 வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் எனச் சொல்வதாகச் சொல்கிறார்கள். இனி அப்படிச் சொல்லாதீர்கள். `2017 டிசம்பரில்தான் அரசியலுக்கு வருவேன்' எனத் தெரிவித்தேன்.

``ரஜினிகாந்த் 71 வயசுல பொழச்சு வந்திருக்கேன்... இப்ப இல்லேன்னா..!?'' - நடிகர் ரஜினிகாந்த் #LiveUpdates #Rajinikanth
  • சிஸ்டம் சரி செய்யாம அரசிலுக்கு வரக்கூடாது. அப்படி வந்தால் மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் சக்கர பொங்கல் வைப்பது போல் ஆகிவிடும்.

  • அரசியல் மாற்று வேண்டும், நல்ல தலைவர்கள் வேண்டும்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
  • `வருங்கால முதல்வர்' ரஜினிகாந்த் என்று சொல்வதை நிறுத்துங்கள்.

  • அரசியலில் நான் மூன்று திட்டங்களை வைத்திருக்கிறேன். முதலாவது திட்டம் : அரசியல் பதவி என்பது தொழில் போலாகிவிட்டது. தேர்தலுக்குப் பின்னர், தேவையில்லாத பதவிகள் நீக்கப்படும். பலர், நான் ஆளும்கட்சி ஆள் என செயல்படுகிறார்கள். வேறு தொழிலே இல்லாமல் இதனையே தொழிலாக வைத்துள்ளனர்.

  • இரண்டாவது திட்டம் : சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் வயதான பலர் இருக்கிறார்கள். ஆனால், நல்ல இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். ரஜினி அதற்குப் பாலமாக இருக்க வேண்டும்!

  • இளைஞர்கள் அரசியல் சாக்கடை என்று விலகிவிடக்கூடாது. அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
  • நல்லவர்கள், கண்ணியமானவர்கள், வேறு கட்சியில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள் உள்ளிட்டவர்களுக்கு 30-40 சதவிகிதம் இடம் வழங்கப்படும்.

  • மூன்றாவது திட்டம்: கட்சிக்கு ஒரு தலைவர். ஆட்சிக்கு ஒரு தலைவர். ஆட்சியில் இருப்பவர் தவறு செய்தால், அவர் பதவியிலிருந்து தூக்கி வீசப்படுவார்.

  • இரண்டும் ஒரே நபரிடம் இருப்பதால், ஆட்சியில் என்ன தவறு நடந்தாலும் அதைக் கேட்க முடியாத சூழல் இருக்கிறது.

  • கட்சியின் பணிகள் தனியாக நடப்பதால், ஆட்சியில் இருப்பவர்கள் கட்சிகுறித்த கவலை இல்லாமல் ஆட்சியில் கவனம் செலுத்த முடியும்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
  • முதல்வர் கனவு எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை. இது, 1996 -ம் ஆண்டிலே மக்களுக்குத் தெரியும். தேடிவந்த முதல்வர் பதவியை வேண்டாம் என்றவன் நான்

  • அரசியலில் எனக்கு பிடிக்காத வார்த்தை, அழகு பார்ப்பது. எம்.பி ஆக்கி அழகுபார்க்க ஆசை என்கிறார்கள். அரசியலில் அழகு பார்க்கக்கூடாது; வேலைபார்க்க வேண்டும்.

  • 50% வாக்குகள் பெண்களுடையது. ஆனால் அவர்கள், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மற்றவர்களிடம் கேட்டு முடிவு செய்கிறார்கள்.

  • கட்சிக்கு தனித் தலைவர். ஆட்சிக்கு தனித் தலைவர் என்பதை 2017 -ம் ஆண்டிலேயே சொன்னேன்.

  • அரசியலில் எனக்கு பிடித்த தலைவர், அண்ணா. அவர் எத்தனை பேரை அழைத்து வந்தார். அவர் அழைத்து வந்தவர்கள்தான் ஆட்சி செய்தார்கள்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
  • தி.மு.க-வுக்கு 30 % வாக்குகள் கிடைத்தால், கலைஞருக்காக 70% வாக்குகள் கிடைத்தன. அ.தி.மு.க-வுக்கு 30% வாக்குகள் கிடைத்தால், 70% வாக்குகள் ஜெயலலிதாவுக்காகக் கிடைத்தன.

  • இன்று அரசியலில் வெற்றிடம் இருக்கு. இதை நல்லவர்கள் பயன்படுத்துக்கொள்ள வேண்டும்.

  • இளைஞர்கள் மத்தியில் அரசியல் அலை வர வேண்டும். அப்போது, அசுர பலம் கொண்ட கட்சிகள் தோற்கும்.

  • நான் முதல்வராக வரவில்லை. வாக்குகளைப் பிரிக்க நான் வரவில்லை. அரசியலுக்கு வந்து 30,40% வாக்குகள் வாங்கவா ரஜினிகாந்த் வரணும்?

  • முதல்வர் பதவி வேண்டாம் என நான் கூறுவது தியாகம் அல்ல.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
  • எனக்கு என்ன 50 வயசா ஆகுது. இப்போ விட்டா அப்புறம் பாக்கலாம் என்று சொல்ல... எனக்கு 71 வயசு ஆகுது. ரஜினிகாந்த் 71 வயசுல பொழச்சு வந்திருக்கேன்.

  • கட்சி வேறு ஆட்சி வேறு என்ற புரட்சி நடக்கணும். அப்புறம் நான் அரசியலுக்கு வர்றேன்.

  • ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது நடக்கவில்லை என்றால் எப்போதும் நடக்காது.

அடுத்த கட்டுரைக்கு