Published:Updated:

தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Vikatan Correspondent
தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநராக (பொறுப்பு) அனில் மிஸ்ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

வணிகவரித்துறை இணை ஆணையராக (நிர்வாகம்) எஸ்.மலர்விழியும், கோவை வணிகவரித்துறை இணை ஆணையராக அஜய் யாதவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய நிர்வாக இயக்குனராக ஆர்.பழனிசாமியும், சேலம் சேகோசர்வ் நிர்வாக இயக்குனராக வி.சாந்தாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக மகேசன் காசிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனராகவும் மகேசன் காசிராஜன் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று பிறப்பித்துள்ளார்.