சூரிய சக்தியைப் பயன்படுத்தும் சூப்பர் திட்டத்துக்கு அடித்தளம் அமைத்து விட் டார் முதல்வர் ஜெயலலிதா!

உள்நாட்டுக் குழப்பம் ஏற்படும் அளவுக்கு மின் வெட்டுப் பிரச்னை தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது. செய்வது அறியாது திகைக்கும் ஆட்சியாளர்கள் இப்போது, 'மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைப் போலவே, சூரிய சக்தி மின்உற்பத்தித் திட்டமும் ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்படும்’ என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்காக, 'தமிழ்நாடு சூரியசக்தி கொள்கை 2012’ என்ற அறிக்கையை வெளியிட்டு இருக்கும் ஜெயலலிதா, 'சூரியசக்தி மூலம் 3,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுவதோடு வீடுகளில் சூரியசக்தி அமைக்க ஊக்கத்தொகை வழங்கப்படும்’ என்று நம்பிக்கை வார்த்தைகளையும் வார்த்திருக்கிறார். எரிசக்தி பாதுகாப்பு, சூரியசக்தி மின்சார உற்பத்தி, உள்நாட்டிலேயே சூரியசக்தி சாதனங்களை உருவாக்கும் வசதி ஆகியவை சூரியசக்தி கொள்கையின் முக்கியக் குறிக்கோள்களாக சொல்லப்பட்டு இருக்கின்றன.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டிருக்கும் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சுந்தர்ராஜன் இதை வர வேற்கிறார். ''முதல்வரின் இந்தத் திட்டம் நல்ல

தொடக்கம். நாட்டின் ஒட்டுமொத்த எரிசக்தி கொள்கைக்கும் இந்த அறிக்கை உத்வேகத்தைக் கொடுக்கும். சூரியசக்தியின் மூலம் தூய்மையான, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எரிசக்தி கிடைக்கும். மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை இன்னொரு இடத்துக்கு பகிர்மானம் செய்வதில் அதிகமான இழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், சூரியசக்தியின் மூலம் கிடைக்கும் மின்சாரம் அந்ததந்தப் பகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் அத்தகைய இழப்புகள் ஏற்படாது.

மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சோலார் சிஸ்டத்தை அமைப்பதற்கான ஆரம்பச் செலவுகள் அதிகம் என்பது உண்மைதான். ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு கூறி இருப்பதால் ஓரளவுக்கு செலவுகள் குறையும். செல்போன்கள் வந்த நேரத்தில் அவுட்கோயிங் கால்கள் 48 ரூபாயும், இன்கமிங் கால்களுக்கு 16 ரூபாயும் வசூலிக்கப்பட்டன. தேவை அதிகமானதும் கட்டணங்கள் குறைந்து விட்டன. அதுபோலத்தான், சூரியசக்தி மின்சாரம் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது செலவுகள் குறையும்.

சூரியசக்தி அமைப்புகள் பொருத்தப்பட்ட வீட்டில் இருப்பவர்கள் வெளியூருக்குச் செல்வதாக இருந்தால், அங்கே உற்பத்தியாகும் மின்சாரத்தை அடுத்த வீட்டுக்காரர்கள் பயன்படுத்தும் முறையை மேற்கு வங்காளத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். இந்த நெட் மீட்டரிங் முறை மூலம் எவ்வளவு மின்சாரத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, அதற்குரிய கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.

ஜவஹர்லால் சோலார் சிஸ்டத்தை 2010-ம் ஆண்டு அறிமுகம் செய்தது மத்திய அரசு. சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு ஒவ்வொரு யூனிட்டுக்கும் மத்திய அரசு பணம் தருகிறது. நிலக் கரிக்கு குறிப்பிட்ட தொகையை தீர்வையாக அரசு வசூலிக்கிறது. அதில் கிடைக்கும் தொகையைத்தான் அரசு மானியமாக வழங்குகிறது. அதனால் மானியம் கொடுப்பதில் அரசுக்கு பெரிய அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படாது.

சூரியசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் உடனடியாக நமது தேவையைப் பூர்த்தி செய்துவிடாது. ஆனால், தேவை மற்றும் பயன்பாடு அதிகரித்து அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு அது பயன் அளிக்கும். அதேபோல், காற்றாலைகள் குறித்தும் அரசு இதே அக்கறையுடன் யோசித்து திட்டம் வகுக்க வேண்டும். 1,076 கிலோ மீட்டர் தூரத்துக்கு நமது கடற்கரை பரந்து விரிந்திருக்கிறது என்பதால் கடற்கரைப் பகுதிகளில் காற்றாலை அமைத்து மின் சாரம் தயாரிக்கலாம். மின்சாரத் தன்னி றைவு பெற்ற தமிழகத்தை, முதல்வர் நினைத்தால் உருவாக்க முடியும்'' என்றார் சுந்தர்ராஜன்.

சூரிய சக்தி பூங்காக்களை அமைத்தல், வீடுகளில் சூரியசக்தி அமைப்புகளை அமைக்க ஊக்கத்தொகை, புதிய அரசுக் கட்டடங்களில் சூரியசக்தி அமைப்புகள் நிறுவுதல், தெரு விளக்குகள், குடிநீர் வழங்கும் அமைப்புகளில் சூரியசக்தி, பெரிய தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட சதவிகித மின் சாரத்தை சூரியசக்தி மின்சாரத்தில் இருந்து பயன்படுத்த அறிவுறுத்தல், சூரியசக்தி சாதனங்களை தயாரிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை என பல அம்சங்களை கொண்டிருக்கிறது சூரியசக்தி கொள்கை.

2014 மார்ச் மாதம் வரை வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி அமைப்புகள் ஏற்படுத்துவோருக்கு மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படுமாம். புதிதாக கட்டப்படும் வீடுகள், கட்டடங்கள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் சோலார் வாட்டர் ஹீட்டர் வசதி கட்டாயம் ஆக்கப் படும். சூரியசக்தி மின் திட்டங்களுக்கு அனுமதி பெறுவதற்கான வசதிகளையும் எளிமையாக்கி இருக் கிறார்கள். தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையே ஒற்றைச்சாளர முறையில் 30 நாட்களில் அனைத்து துறைகளின் அனுமதியை பெற்றுத் தந்துவிடும். இதனால், ஓர் ஆண்டுக்குள்ளாகவே சூரியசக்தி மின் திட்டத்தை நிறுவ முடியும்.

இயற்கையைப் பயன்படுத்தி வாழ்வோம்!

- எம். பரக்கத் அலி