Published:Updated:

காலை வாரிய ஹசாரே...கண் சிவந்த மம்தா பானர்ஜி!

Vikatan Correspondent
காலை வாரிய  ஹசாரே...கண் சிவந்த மம்தா பானர்ஜி!
காலை வாரிய ஹசாரே...கண் சிவந்த மம்தா பானர்ஜி!
காலை வாரிய  ஹசாரே...கண் சிவந்த மம்தா பானர்ஜி!

புதுடெல்லி: டெல்லி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதாக வாக்குறுதி அளித்த சமூக ஆர்வலர், வராமல் போனதால் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கோபமடைந்தார்.

சமீபகாலமாக மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசி வந்த அன்னா ஹசாரே, அவர் எளிமையான அரசியல்வாதியாக உள்ளதாகவும், பிரதமர் ஆகும் தகுதி மம்தாவுக்கு உள்ளதாகவும் கூறிவந்தார்.

இந்நிலையில் அன்னா ஹசாரேவின் புகழ் வார்த்தையில் மயங்கிய மம்தா, 

காலை வாரிய  ஹசாரே...கண் சிவந்த மம்தா பானர்ஜி!

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அன்னா ஹசாரேவுடன் கலந்துகொள்ள திட்டமிட்டார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதாக ஹசாரேவும் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் அவர் தான் அளித்த வாக்குறுதியின்படி இன்றைய டெல்லி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் மம்தா பானர்ஜி கடும் கோபமடைந்தார். அவரது இந்த கோபம் இன்றைய கூட்டத்தில் வெளிப்பட்டது. கூட்டத்தில் பேசிய மம்தா, ஹசாரே வராமல் போனது குறித்து கடுமையாக சாடினார்.

அவர் பேசுகையில்," இந்த கூட்டம் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டமல்ல; மாறாக அன்னா ஹசாரேவின் கூட்டம். நான் எனது வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு இங்கே வந்துள்ளேன். நான் நினைத்திருந்தால் ஒரு ரயில் நிறைய மக்களை திரட்டிக்கொண்டு இந்த கூட்டத்திற்கு அழைத்து வந்திருப்பேன்" என்று கோபமுடன் குறிப்பிட்டார்.

கூட்டம் குறைந்ததால் ஹசாரே எஸ்கேப்


இதனிடையே டெல்லி கூட்டத்திற்கு மிகக்குறைந்த அளவில், சுமார் 3000 பேர் மட்டுமே வந்திருந்த நிலையில், இது குறித்து ஹசாரேவின் ஆதரவாளர்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்தே அவர் கூட்டத்திற்கு வராமல் தவிர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.