2010 அக்டோபர் 29. கோவை மக்களால் மறக்கவே முடியாத தினம். அக்கா, தம்பியான முஸ்கானும் ரித்திக்கும் இரக்கமற்ற அரக்கர்களால் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட தினம். சரியாக இரண்டு வருடங்கள் கழித்து அதேநாளில், இறுதிக் கட்டத்தைத் தொட்டது வழக்கு.

கோவை ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித்குமாரின் மகள் முஸ்கான், மகன் ரித்திக் இருவரையும் கடத்திக் கொலை செய்த மோகனகிருஷ்ணனை மடக்கியது போலீஸ். விசாரணையில் அவன் கொட்டிய வார்த்தைகள் குரூரத்தின் உச்சம். ''முன்பு அந்தக் குழந்தைங்க ரெண்டு பேரையும் ஸ்கூலுக்கு நான் கூட்டிட்டுப் போயிருக்கேன். அந்தப் பொண்ணு (முஸ்கான்) என் மனசை ரொம்பவே டார்ச்சர் பண்ணுச்சு. வேலை இல்லாம பணக்கஷ்டத்தில் இருந்தேன். அதனால், அவங்களைக் கடத்திப் பணம் பறிக்கிற ஐடியா வந்தது. பணம், பொண்ணு ரெண்டு விஷயங்களையும் சாதிக்க நினைச்சேன். அதுக்காக என் ஃப்ரெண்ட் மனோகரனையும் துணைக்குச் சேர்த்துக்கிட்டேன்.

அவங்களை கடத்திட்டுப் போய் திருமூர்த்தி மலைப்பக்கத்தில் வண்டியை நிப்பாட்டினோம். அந்தப்பையனை மனோகரன் அமுக்கிப் பிடிச்சுக்கிட்டான். தனியா இருந்த முஸ்கானை நான் 'ட்ரை’ பண்ணினேன். அந்தப் பொண்ணு கதறியும் நான் நிறுத்தலை. பிறகு மனோகரன் போனான். அப்புறமா பி.ஏ.பி. வாய்க்காலில் ரெண்டு பேரையும் தள்ளிவிட்டோம்'' என்று சொல்லி இருக்கிறான். மோகனகிருஷ்ணனின் கிரிமினல் கூட்டாளி மனோகரனையும் மடக்கியது போலீஸ்.

சில தினங்களில் போலீஸ் காவலுக்கு எடுக்கப்பட்ட குற்றவாளிகள், விசாரணைக்காக சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது தப்பிச் செல்ல முயன்றதாகச் சொல்லி, மோகனகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டான். முஸ்கான், ரித்திக் கொலைகள் தொடர்பான வழக்கு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கொலை நடந்த அதேநாளில் தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்டதால், கடந்த திங்களன்று எதிர்பார்ப்புகளுடன் ஏராளமானோர் கூடி இருந்தனர்.

''அரசுத் தரப்பு சாட்சியங்கள் மூலம் மனோகரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன'' என்ற நீதிபதி சுப்ரமணியம், ''குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்கிறாயா?'' என்று மனோகரனைப் பார்த்து கேட்க, மௌனம்தான் பதிலாகக் கிடைத்தது. ''குற்றவாளிக்கு அதிகபட்சத் தண்டனை விதிக்க வேண்டும்'' என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரான சங்கரநாராயணன் வாதாடியதை அடுத்து, தீர்ப்பு நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மனோகரனுக்கு என்ன தண்டனை என்பது நவம்பர் 1-ம் தேதி தெரியும்!

- ஆர்.லோகநாதன், படங்கள்: தி.விஜய்