Published:Updated:

இராப்பகலா குடிக்கிறதா சொல்றவங்கதான் ஊத்திக்கொடுத்தாங்க: விஜயகாந்த் ஆவேசம்

இராப்பகலா குடிக்கிறதா சொல்றவங்கதான் ஊத்திக்கொடுத்தாங்க: விஜயகாந்த் ஆவேசம்
இராப்பகலா குடிக்கிறதா சொல்றவங்கதான் ஊத்திக்கொடுத்தாங்க: விஜயகாந்த் ஆவேசம்

இராப்பகலா குடிக்கிறதா சொல்றவங்கதான் ஊத்திக்கொடுத்தாங்க: விஜயகாந்த் ஆவேசம்

இராப்பகலா குடிக்கிறதா சொல்றவங்கதான் ஊத்திக்கொடுத்தாங்க: விஜயகாந்த் ஆவேசம்

தி்ண்டுக்கல்: "இராப்பகலா குடிக்கிறதா சொல்றவங்கதான் எனக்கு ஊத்திக்கொடுத்தாங்க" என்று திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தபோது  ஆவேசமாக பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி,  தே.மு.தி.க தலைவரான விஜயகாந்த், தனது இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தாத நிலையில் பிரசாரம் மேற்கொண்டவர், தற்போது வேட்பாளருடன் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

நேற்று காலை கொடைக்கானல், தேனி தொகுதிகளில் பிரசாரத்தை முடித்து மாலை ஏழு மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டிற்கு வந்தார்.

மைக் பிடித்த விஜயகாந்த், "நீங்க என்னோட கூட்டணிக்கட்சிகளான ஐ.ஜே.கே, கொங்கு நாடு, பா.ம.க, மதிமுக, பி.ஜே.பி கட்சிகளுக்கு ஓட்டுப்போடுங்க. திண்டுக்கல்லில் போட்டியிடவுள்ள என்னுடைய வேட்பாளரான கிருஷ்ணமூர்த்தியை நீங்கள் வெற்றியடைய செய்யணும். வத்தலக்குண்டு பக்கத்துல இருக்குற நிலக்கோட்டையில் இருந்து அயர்லாந்துக்கு பூக்களை ஏற்றுமதி செய்யுறாங்க. இப்பவும் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அந்த இடத்துல ஒரு கோல்டு ஸ்டோரேஜ் இருந்தா பூக்களை பாதுகாப்பா வச்சுருந்து ஏற்றுமதி செய்யலாம்.

மல்லிகைப்பூ அதிகமா பயன்படுத்துற இந்த ஏரியாவுல மல்லிகைப்பூ சென்ட் பேக்டரி வைக்கிறதா சொன்னாங்க. ஆனா எதுவும்  பண்ணல. அடுத்து வத்தலக்குண்டு. அங்கு ஃபேமஸ் வெத்தலை. மதிய சாப்பாட்டிற்கு பின்னாடி வெத்தலை போட்டா வாய் கமகமன்னு மணக்கும். அதுக்கு பேரு குண்டு வெத்தலைன்னு சொல்லுவாங்க.

இங்க பகக்கத்துல இருக்குற ஊரு பாண்டியராஜபுரம். அங்கதான் அதிகமா கரும்பு சாகுபடி செய்யுறாங்க. அங்கு இருக்குற ஒரு மில்லையும் இப்ப மூடிட்டாங்க. அதனால அங்க இருக்குற மக்கள் தொழிலுக்கு
கஷ்டப்படுறாங்க. அதுமட்டுமில்லாம ஈயம் பூசுறது, நெசவாளர்கள்ன்னு நிறைய குடும்பம் இருந்துச்சு. ஆனா கரண்ட் இல்லாததுனால அந்த தொழிலும் நடக்குறதில்லை.

ஜூன் அல்லது ஆகஸ்ட்டுல இருந்து வானத்துல மின்வெட்டு இருக்குமே தவிர தமிழ்நாட்டுல இருக்காதுன்னு சொன்னவரு உங்க பக்கத்து ஊருககாரர். ஆனா இப்ப அப்படியா இருக்கு? 

காங்கிரஸ்காரங்க யாராச்சும் சோனியா காந்தி, இந்திரா காந்தி ஆட்சியமைப்போமுன்னு சொல்றாங்களா. எல்லாரும் காமராஜர் ஆட்சி அமைப்போமுன்னு சொல்றாங்க. ஏன்னா அவரு இல்ல. அடுத்து அம்மாவோட ஒவ்வொரு மீட்டிங்குக்கும் 200 ரூபாயில இருந்து 500 ரூபா வரைக்கும் கொடுக்குறாங்க. அதை கொடுத்துட்டு மகக்ளை ஆடு மாடுகளை மாதிரி அடைகுறாங்க. 500 வாங்கிட்டு 1000 ரூபாயை மக்கள் டாக்டர்கிட்ட கொடுக்குறாங்க.

வானத்தைப்போல படத்துல நான் சொல்லுவேன். மண்ணை நான் எண்ணிட்டேன் சந்தேகமா இருந்தா நீங்க எண்ணிக்காங்கன்னு சொல்லுவேன். ஆனா இப்ப இருக்குற அதிமுக அமைச்சர்கள் விட்டா அந்த மண்ணையும் எண்ணிடுவாங்க போல.

மதியம் ஒரு மணியாச்சுன்னா எல்லா அமைச்சரும் வரிசையா வந்து குனிஞ்சு நிக்குறாங்க. அவுங்க போனவுடனே அந்த அமைச்சர தூக்கிவிடுறதுக்கு ஆள்வேணும். என்னுடைய வேட்பாளாரன கிருஷ்ணமூர்த்தியை வெற்றியடைய செய்யுங்கள்" எனக் கூறி," உங்கள் வேட்பாளர் யாரு?"ன்னு கேட்க,  மக்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். பின் வேட்பாளரை அறிமுகப்படுத்தி அங்கிருந்து கன்னிவாடி பகுதிக்கு கிளம்பினார் விஜயகாந்த்.

பின்னர், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்தில் தனது வேட்பாளைரை ஆதரித்து பிரசாரம் செய்த விஜயகாந்த், திண்டுக்கல்லில் இருக்குற பழனியில இருந்து அதிகமான வருமானம் வருது. ஆனா பழனி டூ சபரி மலைக்கு ரயில்பாதை போடுறதா சொன்னாங்க. ஆனா இதுவரைக்கும் போடல. வர 13ஆம் தேதி பங்குனி உத்திரம். அன்னைக்கு மக்கள் அதிகாம பழனிக்கு வருவாங்க. ஆனா அன்னைக்கு ஜெயலலிதா மீட்டிங் கரூர்ல இருக்கு. அதனால அதிகபடியான  பேருந்துகள் அங்க போயிடும். இங்க இருக்குற மக்கள் கோயில்லுக்கு வந்துபோக முடியாத நிலை ஏற்படக்கூடாது. உண்மையாக மக்கள் கூட்டம் வருதுன்னு அந்தம்மா சொல்றாங்க. அப்படியே வந்தா ஏன் வண்டிகளை அங்கிட்டு போக விடுறாங்க. மக்களாகவே வந்திடுவாங்களே. நான் வரும்போது இங்க போக்குவரத்து பாதிக்கப்படல. ஆனா அந்தம்மா வந்தா அப்படியா நடக்குது.

ஆசியாவிலேயே ரெண்டாவது மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டு ஒட்டன்சத்திரத்துல இருக்கு. ஆனா அங்க காய்கறிகளை பதப்படுத்துற cold storage இல்ல. ஏன் வைக்க மாட்றாங்க. ஏன்னா கரண்டு இல்ல. இங்க குடிக்கவும் தண்ணி இல்ல. குளிக்கவும் தண்ணி இல்ல. அடுத்து ஒட்டன்சத்திரத்துல இருக்குற ரயில்வே ஸ்டேஷன். அங்க ரெண்டே ப்ளாட்பார்ம் தான் இருக்கு. அங்கேயும் எதுவுமில்ல. அதுக்குத்தான் நம்மளுடைய கூட்டணிக்கு ஓட்டு போடுங்க. இது மக்கள் கூட்டணி, நம்பர் ஒன் கூட்டணி. ஆனா 15 வருசத்துக்கு முன்னாடி மோடி ஆட்சிக்கு வரதுக்கு முன்னால குஜராத் வானம் பார்த்த பூமி. அங்க ஆயிரம் அடிக்கு கீழதான் தண்ணி இருந்துச்சு. அவர்தான்  ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு பைப் லைன் வச்சு நர்மதா ஆத்துல இருந்து தண்ணி கொண்டு வந்தாரு. அங்க மின்சார வசதியும் இருக்கு.

அடுத்து நத்தம் பக்கத்துல மாம்பழ தொழிற்சாலை அமைக்கப்போறேன்னு சொல்றாங்க. நானும் அங்கிட்டு போறதில்லை. என் கைய பாருங்க. என்னைப்பாத்து இராப்பகலா குடிக்கிறதா சொல்றாங்க. ஏன்னா அவுங்கதான எனக்கு ஊத்திக்கொடுத்தாங்க.

உங்க ஊருல ரெண்டு அமைச்சர்கள் இருக்காங்க. அவுங்க மட்டும் வெல்த்தா இருக்காங்க. ஆனா மக்கள் அப்படியேதான் இருக்காங்க. ஆதலால்தான் மக்களே நம்முடைய பிரதம வேட்பாளர் நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என்று கூறி தன்னுடைய கட்சியின் வேட்பாளரான கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்தினார்.

உ.சிவராமன் (மாணவப் பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு