Published:Updated:

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி: அன்புமணி ராமதாஸ்

Vikatan Correspondent
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி: அன்புமணி ராமதாஸ்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி: அன்புமணி ராமதாஸ்

கிருஷ்ணகிரி: நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி என்று அன்புமணி ராமதாஸ் கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரத்தின் போது கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி: அன்புமணி ராமதாஸ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பா.ம.க வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ''ஐ.நா.சபையில் வேட்டி அணிந்து தமிழில் முதன்முதலில் பேசியவர் ஜி.கே.மணி. அவர் சாதாரன குடும்பத்தில் இருந்து வந்து இப்போது இவ்வளவு பெரிய வளர்சியை அடைந்திருக்கிறார். இவர் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத தூய்மையான மனிதர்.

ஜி.கே.மணியை வெற்றிபெற வைத்தால்தான் நரேந்திர மோடி பிரதமராக முடியும். நரேந்திர மோடி பிரதமரானால்தான் ஊலற்ற ஆட்சியை நாம் பெற முடியும். இந்தியாவிலயே முதன்மை மாநிலமாக குஜராத் இருப்பது போல, இந்தியாவையும் வளர்ச்சி பெற வைப்பார். அந்த வளர்ச்சி ஜி.கே.மணி மூலம் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த தேர்தல் என்னவோ சட்டமன்றத் தேர்தல் போல் இரண்டு திராவிட கட்சிகளும் நாடகமாடுகின்றன. இது தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்குமான போட்டி இல்லை. காங்கிரஸுக்கும், நரேந்திர மோடிக்கும் இடையேயான போட்டி.

தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க. தேர்தல் களத்தில் இல்லவே இல்லை. இந்த தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி. அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெரும் என்று முதலில் சொன்னார்கள். அது படிப்படியாக குறைந்து இப்போது 15 என்கிறார்கள், அப்புறம் அது 5 ஆகிவிடும்.

இப்போதைய நிலையில், அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் இறங்கு முகம்தான். நமக்குதான் ஏறு முகம். கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெரும்" என்றார்.

எம்.புண்ணியமூர்த்தி

படம்:
வி.ராஜேஷ்