Published:Updated:

நாடாளுமன்ற தேர்தல்: புதுவையில் பா.ம.க.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு!

Vikatan Correspondent
நாடாளுமன்ற தேர்தல்: புதுவையில் பா.ம.க.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு!
நாடாளுமன்ற தேர்தல்: புதுவையில் பா.ம.க.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு!
நாடாளுமன்ற தேர்தல்: புதுவையில் பா.ம.க.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் புதுவை பா.ம.க.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நடைபெறும் 16வது நாடாளுமன்றத் தேர்தலில், புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக 'மாம்பழம்' சின்னத்தில் போட்டியிடும் ஆர்.கே.ஆர்.அனந்தராமனுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றிக்கு முழு முனைப்புடனும் அர்ப்பணிப்புடனும் தேர்தல் பணியாற்றுமாறு புதுவை மாநில மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளையும், கழகக் கண்மணிகளையும் அன்புடன் வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.