Published:Updated:

தில்ஷன் கொலை வழக்கு:அதிகாரிகளுக்கு ஜெ. பாராட்டு

சென்னை, ஜூலை 11,2011

சிறுவன் தில்ஷன் கொலை வழக்கில் விரைந்து புலனாய்வு மேற்கொண்டு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை கைது செய்த சிபிசிஐடியின் ஏடிஜிபி தலைமையிலான காவல்துறை அதிகாரிகளுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

தில்ஷன் கொலை வழக்கு:அதிகாரிகளுக்கு ஜெ. பாராட்டு

சென்னை கொடிமர சாலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு வளாகத்தில் தில்ஷன் என்ற 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டான். ##~~##

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து சம்பவம் நடந்த 6 நாட்களிலேயே சிறுவன் கொலை தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராமராஜை கைது செய்தனர். அத்துடன் சிறுவனை சுட்டுக்கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் மீட்டனர்.

இந்த வழக்கில் விரைந்து புலனாய்வு மேற்கொண்டு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராமராஜை கைது செய்த சிபிசிஐடியின் ஏடிஜிபி சேகர் தலைமையிலான காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, தமிழக காவல் துறை தலைவர் ராமானுஜம், காவல்துறை நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி ராஜேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.