Published:Updated:

ரஜினிகாந்த் வீட்டிற்கு மோடி சென்றதில் எனக்கு வருத்தமில்லை: விஜயகாந்த்

சேலம்: ரஜினிகாந்த் வீட்டிற்கு மோடி சென்றதில் எனக்கு வருத்தமில்லை என்று சேலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.

சேலம் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது, ''தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு மட்டுமே எம்.ஜி.ஆரின் பெயரை ஜெயலலிதா பயன்படுத்துகிறார். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை வளர்ச்சியற்ற மாநிலமாக மாற்றிவிட்டன.

2 ஜி ஊழல் மூலம் தி.மு.கவும், சொத்து குவிப்பு மூலம் அ.தி.மு.க.வும், மக்களின் பணத்தை சூறையாடிவிட்டன. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. அதனால், அந்த இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

எங்களுக்குள் கருத்து வேறுபாடு என்று சொல்கிறார்கள். ரஜினிகாந்த் வீட்டிற்கு நரேந்திர மோடி சென்றதால் விஜயகாந்துக்கு வருத்தம் என்கிறார்கள். எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். அப்படி இருந்தால் நான் உங்களிடம் இப்படி பேச முடியுமா? எதை வேண்டுமானாலும் சொல்லக்கூடாது" என்றார்.