என்கவுன்டர் என்றால் என்ன? அது, யதேச்சையாக நடப்பது. ஆனால், 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்கிறார்களே! 'யதேச்சையாக நடப்பதுபோல் திட்டமிட்டு போட்டுத்தள்ளுவதில் ஸ்பெஷலிஸ்ட்’ என்று எடுத்துக்கொள்வதா?

இதோ... தமிழ்நாட்டில், மானாமதுரையில் இன்னும் ஓர் என்கவுன்டர். பாரதி, பிரபு என்ற இரண்டு பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இருவரும் மோசமான கிரிமினல்கள் என்றும் அவர்கள் மீது உள்ள ஏராளமான வழக்குகள் குறித்தும் இப்போது பரபரப்பாகப் பேசப் படுகிறது. இந்நிலையில், என்கவுன்டருக்கு எதிராக வழக்குத்தொடுத்து போராடும் மதுரை 'மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பைச் சேர்ந்த ஹென்றி டிபேனிடம் பேசினோம்.

''கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இப்போது வரை தமிழ்நாட்டில் ஒன்பது பேர் என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இது, சட்டத்தின் ஆட்சியை அப்பட்டமாக மீறும் செயல். நீதிமன்றம் தன்னிச்சையாகத் தலையிடுவதற்கான எல்லா அடிப்படைகளும் இதில் இருக்கின்றன. தாம்பரம் ஸ்ருதி இறந்தபோது சென்னை உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக தலையிட்டதைபோல, மானாமதுரை என்கவுன்டரிலும் மதுரை நீதிமன்றம் சூ-மோட்டாவாக தலையிட்டிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. இன்னொரு பக்கம், வழக்கு விசாரணையில் ஏற்படும் அளவுகடந்த தாமதம் மக்களை சலிப்படையச்

செய்கிறது. ஒரு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கிடைத்து குற்றவாளி தண்டிக்கப்படுவதற்குள் எத்தனையோ ஆண்டுகள் கடந்து விடுகின்றன. அதனால், என்கவுன்டரை 'உடனடி நீதி’ என்று மக்கள் நினைக்கிறார்கள்.

எந்த ஒரு என்கவுன்டருமே நீதியாக இருக்க முடியாது. ஒவ்வொன்றுமே திட்டமிட்ட கொலைதான். பாரதி, பிரபு ஆகியோரின் என்கவுன்டரையே எடுத்துக்கொள்வோம். எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை செய்யப்பட்டது நிச்சயம் மிகமோசமான கொடூரம். அதை யாராலும் ஆதரிக்க முடியாது. அதன்பிறகு, அந்தக் கொலையில் தொடர்பு உடையவர்களை என்கவுன்டரில் தீர்த்துக்கட்ட காவல்துறை முடிவு செய்கிறது. உடனே, டி.எஸ்.பி. வெள்ளத்துரையை மானாமதுரைக்கு டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள். திட்டமிட்டபடி என்கவுன்டர் நடக்கிறது. 'தப்பி ஓடினர், பெட்ரோல் குண்டு வீசினர், தற்காப்புக்குச் சுட்டோம்’ என்ற வழக்கமான வசனத்தை இங்கும் சொல்கிறார்கள்.

பொதுவாக, அனைத்து என்கவுன்டர்களிலும் சில பொதுவான அம்சங்களைப் பார்க்கலாம். பெரும்பாலும் போலீஸ்காரருக்கு காயம் இருக்காது. வெறுமனே துணியை சுற்றிக்கொண்டு படுத்திருப்பார். அப்படியே காயம் இருந்தாலும் அது உயிரை எடுக்கக்கூடிய அளவுக்கு இருக்காது. எந்த என்கவுன்டராக இருந்தாலும் அதைச்செய்தவர் மீது 302 கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என்பது மனிதஉரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல். இதையும் பின்பற்றுவதில்லை. மேலும், குற்றவாளிகளை வளர்த்து விடுவதே போலீஸ்தான். அவர்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும்போது ஆரம்பத்திலேயே தடுக்காமல் மாமூல் வாங்கிக்கொண்டு ஊக்குவிப்பதும், வேறுபல காரணங்களுக்காகப்

பயன்படுத்திக்கொள்வதும், பிறகு, போலீஸே என்கவுன்டரில் போட்டுத்தள்ளுவதும்தான் நடக்கிறது. ஒவ்வொரு என்கவுன்டரும் திட்டமிட்ட கொலை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், மௌனமாக இருக்கிறார்கள். போலீஸும் ஒரே திரைக்கதையை வைத்துக்கொண்டு எல்லாக் கொலைகளையும் செய்கிறது. இப்போது போலீஸ் முன்பு உள்ள சவால் என்பது, ஒவ்வொரு என்கவுன்டரையும் நம்பகத்தன்மையுடன் நிரூபிப்பது மட்டும்தான்.

இந்த வெள்ளத்துரை இதுவரை வீரப்பன், வீரமணி, மணல்மேடு சங்கர், மதுரையில் கவியரசு, உருண்டை ராஜன், இப்போது மானாமதுரையில் இரண்டு பேர்... என 12 பேரை கொலை செய்திருக்கிறார். அனைவரும் குற்றவாளிகள் என்றாலும், மனித உயிர்கள். சட்டப்படி வெள்ளைதுரை தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி. ஆனால் அவரோ வீரப்பனை சுட்டு எஸ்.ஐ-யில் இருந்து டி.எஸ்.பி-யாக பதவியில் உயர்ந்தார். அடுத்தகட்ட பதவியை அடைய மேலும் பலரை என்கவுன்டர் செய்துகொண்டு இருக்கிறார். கேள்வி கேட்க யாரும் இல்லாமல் சுட்டுக் கொல்வது வெள்ளைக்காரன் காலத்தில்தான் இருந்தது என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். இந்த வெள்ளத்துரை காலத்திலும் இருக்கிறது. 'கை எடுக்க இவ்வளவு, உயிரை எடுக்க இவ்வளவு’ என்று கொலை செய்வதை ஒரு தொழிலாகச் செய்பவர்களை கூலிப்படை என்கிறார்கள். அப்படியானால், என்கவுன்டர் நடத்தும் போலீஸை, 'மாதச் சம்பளத்துக்கு அரசே நடத்தும் கூலிப்படை’ என்றுதான் அழைக்க வேண்டும். அதுதான் அவர்களுக்குப் பொருத்தமான பெயரும்கூட!'' என்று பொங்கினார் டிபேன்.

கொல்லப்பட்டவர் குற்றவாளி என்பதற்காக கொலை நியாயம் ஆகுமா?

- பாரதி தம்பி

யார் இந்த தயா நாயக்?

மும்பையில் இருந்து வெளிவரும் சில பத்திரிகைகளில் 'தமிழ்நாட்டின் தயா நாயக்’ என்று வெள்ளத்துரையைப்பற்றி எழுதுகிறார்கள். யார் இந்த தயா நாயக்?

அவர் மும்பை போலீஸில் ஒரு சாதாரண எஸ்.ஐ.யாகச் சேர்ந்த கர்நாடக மாநிலத்துக்காரர். 1995-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தார். இந்த 17 ஆண்டுகளில் இவர் செய்திருக்கும் என்கவுன்டர்களின் எண்ணிக்கை 83. ஒரு வருடத்துக்கு சராசரியாக ஐந்து என்கவுன்டர்கள். இவரது கதையை ராம்கோபால் வர்மா உள்ளிட்ட சிலர் சினிமாவாகவும் எடுத்து இருக்கிறார்கள். ''இந்த சினிமாக்காரர்கள்தான் என்கவுன்டரையும், போலீஸையும் ஊக்குவிக்கிறார்கள். விசாரணை இன்றி கொலைசெய்வதை ஹீரோவுக்கான தகுதிகள்போல சித்தரித்து கொலையை ஆதரிக்கும் மனப்பான்மையை வளர்த்தெடுக்கின்றனர்'' என்று குற்றம் சாட்டுகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.