Published:Updated:

மதுவுக்கு எதிராக சிலுவைப் போர்!

மீண்டும் நடக்க ஆரம்பித்தார் வைகோ!

மதுவுக்கு எதிராக சிலுவைப் போர்!

மீண்டும் நடக்க ஆரம்பித்தார் வைகோ!

Published:Updated:
##~##

ஈழம், புலி, தூக்குத் தண்டனை, அணு, முல்லைப் பெரியாறு ஆகிய ஐந்து பிரச்னைகளுக்காக இதுவரை வலம் வந்த வைகோ, இப்போது மது ஒழிப்பைக் கையில் எடுத்துள்ளார். மதுவுக்கு எதிரான விழிப்பு உணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வைகோ, முழுமையான மது ஒழிப்பை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தில் இருந்து பாத யாத்திரையைத் தொடங்கி இருக்கிறார். சிலுவைப் போர் என்று வர்ணிக்கப்படும் இந்தப் போராட்டம், உவரி கிராமத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி தொடங்கியது. 

உவரியை ஏன் தேர்ந்து எடுத்தாராம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தில் உள்ள அமலோற்பவ மாதா ஆலயத்தில் பங்குத் தந்தையாக இருந்த அந்தோணி சூசை​நாதர் என்பவர், 1912-ல் மது விலக்கு சபை என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அந்த அமைப்பில் அங்கத்தினர்களாக இருப்பவர்கள் மட்டுமே ஆலயத்துக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்​பட்டனர்.

மதுவுக்கு எதிராக சிலுவைப் போர்!

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, 'மது குடிக்க​வில்லை’ என்பதை உறுதிப்படுத்தி உறுப்பினர் பதிவைப் புதுப்பிக்க வேண்டும். இந்தச் சபை நிறுவப்​பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவேதான், அந்த இடத்தில் இருந்து மது விலக்கு பாதயாத்திரையைத் தொடங்கத் திட்டமிட்டாராம் வைகோ. தன்னுடன் நடந்து வரும் தொண்டர் படையைத் தேர்ந்தெடுக்க, கடந்த ஒரு மாதமாக ஊர் ஊராகச் சென்று 1,200 பேரைத் தேர்வு செய்தார். அவர்களுடன் யாத்திரையைத் தொடங்கினார் வைகோ.

உவரி கடலுக்குச் சென்று கடல் மாதாவை வணங்கிய வைகோ, அருகில் உள்ள சூசைநாதர் அடிகள் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், இலங்கை அவலத்தை விளக்கும் வகையில் உவர் இளைஞர் மன்றத்தினர் நிகழ்ச்சிகளை நடத்தினர். தத்ரூபமாக இருந்த இந்த நிகழ்வைப் பார்த்த அனைவரும் கண் கலங்கினர்.

பின்னர் நடந்த பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், வேலூர் திருவலம் மடத்துத் தலைவரான சாந்தா சுவாமிகள், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ், பணகுடி புஷ்பவனம் பங்குத் தந்தை பர்னபாஸ் அடிகள் உள்​ளிட்ட பலர் கலந்து​கொண்டனர்.

மதுவுக்கு எதிராக சிலுவைப் போர்!

சாந்தா சுவாமிகள் பேசுகை​யில், ''காந்தியும் விவேகானந்தரும் கண்ட கனவு தேசத்தை உருவாக்க வேண்டுமானால், மது அரக்கனை ஒழிக்க வேண்​டும். அதற்கு, அனைத்து மதத் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும். வைகோவின் இந்த முயற்சிக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை'' என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

மேலும் தொடர்ந்தவர், ''சபர்மதி ஆசிரமத்​தில் இருந்து காந்தியடிகள் தண்டியை நோக்கிப் பேரணியாக சென்றபோது, அவருடன் 71 பேர் மட்டுமே சென்றனர். ஆனால், அவர் தண்டியை அடைந்த நேரத்தில்

மதுவுக்கு எதிராக சிலுவைப் போர்!

அந்தக் கூட்டம் பல்லாயிரக்​கணக்காக உயர்ந்ததோடு... நாடு முழுவதும் பேரணிகள் நடத்தப்பட்டு மாபெரும் எழுச்சி ஏற்பட்​டது. அதுபோல, இப்போது வரலாறு திரும்பு​கிறது. இங்கே 1,200 இளைஞர்களை மட்டுமே அழைத்துக்கொண்டு மதுரையை நோக்கி வைகோ புறப்பட்டுச் செல்கிறார். இது ஏற்படுத்தும் எழுச்சி அலை தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவே அவர் பின்னே திரும்பும் காலம் வெகு தொலைவில் இல்லை. அண்ணா காலத்தில் மது இல்லை. ஆனால் அவரது பெயரைச் சொல்லிக்கொண்டு அவருக்கு பின்னர் வந்தவர்கள் மது அரக்கனை நாட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர். அப்படி வந்துவிட்ட மதுக் கடைகளை மூடுவதற்கு வைகோ புறப்பட்டு இருக்கிறார். அவரால் மட்டுமே இதைச் செய்ய முடியும். காரணம், அவர்தான் அண்ணாவின் உண்மையான வாரிசு.

மதுவுக்கு எதிராக சிலுவைப் போர்!

மதுவின் பிடியில் இருந்து மீளும் வரை தமிழ கத்துக்கு மீட்பு கிடையாது. அதனால் சுயநலம் இல்லாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் வைகோ நடத்தும் இந்தப் பாதயாத்திரையைத் தொடங்கி வைக்க வந்தேன். இதுபோன்ற யாத்திரை மூலம் தமிழகத்தில் மதுக்கடைகள் விரை​வில் மூடப்படும் என்பது என் கண் முன்னே தெரிகிறது' என்று உணர்ச்சிவசப்பட்டார்.

இறுதியாக வைகோ மைக் பிடித்தார். ''மதுவின் கொடுமையால் தமிழகத்தில் பெண்கள் சாலை​களில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை இருக்கிறது. இளைஞர்கள், பெரியவர்கள், மாணவர்கள் மட்டும் இல்லாமல், சில கேளிக்கை விடுதிகளில் பெண்களும் மதுவின் பிடியில் சிக்கிக்கிடக்கும் அவலத்தைக் கேள்விப்படும்போது மனது வலிக்கிறது. உலகத்​துக்கே அறம் போதித்த தமிழகத்தின் இந்த நிலை வருத்தம் தருகிறது. மது விற்பனை மூலமாகக் கிடைக்கும் வருமானத்தை வைத்து இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட இழிந்த நிலைமை வேண்டுமா? எனவே, முழுமையான மதுவிலக்குத் தேவை. கடையின் நேரத்தைக் குறைப்பது போன்ற காம்ப்ரமைஸ் எதுவும் தேவை இல்லை. முழுமையாக மதுக் கடைகளை மூட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அதற்​காகவே இந்தச் சிலுவைப் போரைத் தொடங்கி இருக்கிறோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த யாத்திரையை நடத்துகிறோம். வரும் காலத்தில் முழு மதுவிலக்கு இந்த மண்ணில் நிறைவேறும்போது, 'வைகோ இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நடந்தான்’ என்று ஒரு வரி சரித்திரத்தில் சேர்க்கப்பட்டாலே எனக்குப் போதும். உவரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு வரவேற்பு கொடுத்தனர். இதே நிலை தமிழகம் முழுவதும் தொடர்ந்தால் எங்களின் அறப்போர் வெல்லும்' என்று தழுதழுத்தார்.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism