Published:Updated:

முல்லை பெரியாறில் நீர்மட்டம் உயர்வு: தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

Vikatan Correspondent

சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கனமழை காரணமாக ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. நேற்று 111.01 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 114.04 அடியாக உயர்ந்துள்ளது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்து 1,535 கன அடியில் இருந்து 6,649  கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று, முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 28 மி.மீட்டரும், தேக்கடியில் 51.4 மி.மீட்டரும். மழை பதிவாகியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கனமழை காரணமாக நேற்று ஒரேநாளில் மட்டும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்திருப்பது தமிழக விவசாயிகளை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.