Published:Updated:

முல்லைப்பெரியாறு தீர்ப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் முழு அடைப்பு (படங்கள்)

Vikatan Correspondent
முல்லைப்பெரியாறு தீர்ப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் முழு அடைப்பு (படங்கள்)
முல்லைப்பெரியாறு தீர்ப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் முழு அடைப்பு (படங்கள்)

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் முழு அடைப்பு நடந்து வருகிறது.

முல்லைப்பெரியாறு தீர்ப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் முழு அடைப்பு (படங்கள்)

உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த கேரளாவைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டு வருவதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு தீர்ப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் முழு அடைப்பு (படங்கள்)

தமிழக- கேரள எல்லையான களியக்காவிளை மற்றும் கோவை வாளையாறு பகுதியில் இருந்து கேரளாவுக்கு பேருந்து போக்குவரத்து பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.