Published:Updated:

''உங்களைவிட என் படை பெருசுப்பா!''

மதுரையில் களம் காணும் அழகிரி மகன்

''உங்களைவிட என் படை பெருசுப்பா!''

மதுரையில் களம் காணும் அழகிரி மகன்

Published:Updated:
''உங்களைவிட என் படை பெருசுப்பா!''
##~##

மு.க.அழகிரி இப்போதுதான் இயல் புக்குத் திரும்பி இருக்கிறார். மகனுக்கு முன்ஜாமீன் கிடைத்து விட்ட சந்தோஷம், அவரைப் பழைய அதே அழகிரி யாகவே மாற்றிவிட்டது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 'நீங்க கட்டுன வீட்டில் வாழ்றேன், நீங்க வாங்கிக் கொடுத்த காரை யூஸ் பண்றேன். நீங்க அனுபவித்த சிறை வாழ்க்கையையும் நான் அனுபவித்துப் பார்க்க வேண்டாமா?’ - கிரானைட் வழக்கில் தன் மகனுக்கு எப்படியாவது முன் ஜாமீன் கிடைத்துவிடாதா என மு.க.அழகிரி தவித்துக்கொண்டு இருந்த நேரத்தில், இப்படி கூலாகச் சொன்னாராம் மகன் துரை தயாநிதி. 'என்னால் உங்க எல்லோருக்கும் டார்ச்சர். தாத்தா சொல்​றாப்ல, நான் சரண்டர் ஆகிடுறேன்; அப்புறம் ஜாமீன் எடுத்துக்கலாம்’ என்று மகன் சொன்ன போதும், 'அப்படி எல்லாம் அவசரப்படக் கூடாது. ஒரு வழக்கில் சரண்டர் ஆனால், பி.ஆர்.பி-க்கு போட்டதுபோல் அடுத்தடுத்து வழக்குகளைப் போட்டு மாசக்கணக்கில் உள்ளே வச்சிருவாங்க. உன்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டு நாங்க நிம்மதியா இருக்க முடியுமா? அந்தத் தைரியம் எனக்கு இல்லப்பா’ என்று பாசத் தந்தையாய் தழுதழுத்தாராம் அழகிரி. அதனால் சரண்டர் முடிவைக் கைவிட்டு, மும்பை, கோவா, மாலத்தீவு எனத் தாவிக்கொண்டே இருந்தாராம் துரை தயாநிதி. இவர்களுக்கான தேவைகளை கச்சிதமாய் செய்துகொடுத்ததில் முன் னாள் துணை மேயர் மன்னனுக்குப் பெரும் பங்கு உண்டு என்கிறார்கள்.

''உங்களைவிட என் படை பெருசுப்பா!''

டிசம்பர் 10-ம் தேதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நான்காவது வழக்காக வந்தது துரை தயாநிதி உள்ளிட்டோரின் முன்ஜாமீன் மனுக்கள். எப்படியும் முன்ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், 8-ம் தேதியே மதுரைக்குள் வந்துவிட்டாராம் துரை. வீட்டுக்கு வராமல் வேறு இடத்தில் இருந்த அவரோடு, மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதியும் இருந்ததாகச் சொல்கிறார்கள். முன்ஜாமீன் கிடைத்த செய்தி கிடைத்ததுமே உற்சாகமான அழகிரி, 'எனக்குத் துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. அவர்களை இயற்கை பார்த்துக்கொள்ளும்’ என்று, மிசா பாண்டியன் மகன் திருமணத்தில் முழங்கினார்.

முன்ஜாமீன் பெற்ற துரை தயாநிதிக்கு வாழ்த்துச் சொல்வதற்காக வீட்டில் வரிசைகட்டியது அழகிரியின் விசுவாச வட்டாரம். அனைவரிடமும் சால்வைகளை வாங்கிக்கொண்டார் துரை. அழகிரியும் மகனுக்குப் பக்கத்தில் இருந்தார். 10-ம் தேதியே முன்ஜாமீன் கிடைத்துவிட்டாலும் மறுநாள், நீதிபதி சி.டி.செல்வம் விடுப்பில் சென்று விட்டதால் 12-ம் தேதிதான் நீதிமன்ற உத்தரவு நகல் கைக்கு வந்ததாம். 72 பக்கங்கள் கொண்ட அந்த நகலை அன்று மாலையே அழகிரியிடம் சேர்த்தனர் வக்கீல்கள். அன்று இரவே தாத்தாவைச் சந்திக்கக் கிளம்பினார் துரை. பேரனை உச்சிமுகர்ந்து ஆசீர்வதித்த கருணாநிதி, 'கோர்ட்டுக்குப் போறப்ப கூட்டம் கூட்டுறது, கோஷம் போடுறது எல்லாம் வேணாம். எவனாச்சும் ரகளை பண்ணிட்டுப் போனா, அதுக்கும் அழகிரிதான் காரணம்னு கேஸ் போடுவாங்க’ என்று அன்புப் பேரனுக்கு எச்சரிக்கை கொடுத்தாராம்.

  போயஸ் கார்டன் வீட்டில் தனது மாமனார் சீத்தாராமனையும் சந்தித்து, தன்னால் ஏற்பட்ட விசாரணைத் தொந்தரவுக்கு மன்னிப்புக் கேட்டாராம் துரை. 'அழகிரிக்கு சம்பந்தி ஆகப்போகிறோம் என்று முடிவெடுத்தபோதே இதெல்லாம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்ததுதான். இதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’ என்று மருமகனை உற்சாகப்படுத்தி அனுப்பினாராம் சீத்தாராமன். 13-ம் தேதி மாலை மதுரையில் இருந்தார் துரை. ''காலையில் கோர்ட்டுக்குக் கிளம்பணும்பா, தேவை​யில்லாம கூட்டத்தைக் கூட்டாதீங்க'' என்று கட்சிக் காரர்களுக்கு அன்புக்கட்டளை போட்டார் அழகிரி.

அப்படியே காலை 9.30 மணிக்கு, ஃபார்ச்சூனர் காரில் துரை தயாநிதியும் அவருக்கு முன்னதாக ரேஞ்ச் ரோவர் காரில் அழகிரியும் மேலூர் நோக்கிக் கிளம்ப, சுமார் 20-க்கும் மேற்பட்ட கார்கள் பின்​தொடர்ந்தன. வழியிலும் சிலர் கலந்துகொண்டதால் கோர்ட் எல்லையைத் தொட்டபோது, கார்​களின் எண்ணிக்கை 50-ஐ தாண்டியது. மகனையும் மற்றவர்களையும் கோர்ட்டுக்குப் போகச்சொல்லிவிட்டு அருகில் இருந்த எம்.பி. அலுவலகத்தில் அமர்ந்தார் அழகிரி.

''உங்களைவிட என் படை பெருசுப்பா!''

10.30 மணிக்கு, துரை தயாநிதியின் பாஸ்போர்ட் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட, 'கொஞ்ச நேரம் வெளியில் இருங்கள்’ என்று சொன்னார் மாஜிஸ் திரேட். மீண்டும் ஃபார்ச்சூனருக்கு வந்த துரை தயாநிதி, அடுத்த அழைப்புக்காகக் காத்திருந்தார். முன்பு, துரையின் இருப்பிடத்தைக் கேட்டு போலீஸார் துருவியபோது, 'அவர் எங்களோடு தொடர்பில் இல்லை; எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று சாதித்த துரையின் கிரிக்கெட் டீம் நண்பர்கள் அல்வா கடை மனோஜ், ராம கிருஷ்ணன், குட்டி, மருதுபாண்டியன் ஆகியோர் துரையின் காருக்குள் இருந்தனர்.

'நீதிமன்ற வளாகத்தில் யாரும் கோஷம் போடக் கூடாது, ரகளைகளில் ஈடுபடக்கூடாது’ என்று அழகிரி கண்டிப்பாகச் சொல்லி இருந்ததால், அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு அலேக்காகத் தூக்குவதற்காக மிசா பாண்டியன் தலைமையில் ஒரு டீம்  வளாகத்தை வட்டமடித்துக்கொண்டே இருந்தது. கவுன்சிலர் அருண்குமார், தொண்டர் அணி சரவணன், முபாரக் மந்திரி உள்ளிட்டோர் துரை யின் காருக்கு அருகில் நின்றனர். கண்ணாடியை இறக்கிவிட்டபடி துரையும் அவர்களோடு கலாய்த்துக்கொண்டு இருந்தார்.

கோர்ட்டுக்கு வரும்போது புதிதாக ஒரு வழக்கைப்போட்டு துரையைத் தூக்கக்கூடும் என்று ஒரு தகவல் இருந்தது. இதை டெஸ்ட் பண்ணிப் பார்ப்பதற்காகவே துரையின் பார்ட்னரான நாகராஜை ஒரு நாள் முன்னதாக கோர்ட்டில் சரண் அடைய வைத்து ஆழம் பார்த்து இருக்கிறார்கள். அவருக்கு எந்தப் பிரச் னையும் இல்லை என்றதும்தான், மறுநாள் துரையை அழைத்து வந்தார்களாம்.

காருக்குள் இருந்தபோது துரை தயாநிதியிடம் பேசினோம். ''இது பொய்யாகத் திணிக்கப்பட்ட வழக்கு. நீதிமன்ற உத்தரவுப்படி சரண் அடைய வந்திருக்கிறேன். மற்ற சட்ட நடவடிக்கைகளை எங் களது வழக்கறிஞர்கள் பார்த்துக்கொள்வார்கள். நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை கோர்ட்டில் நிரூபிப்போம். இதற்கு மேல் பேசுவது இப்போதைக்கு சரியாக இருக்காது'' என்று சொல்லிவிட்டு கார் கண்ணாடியை ஏற்றிக்கொண்டார்.

கிட்டத்தட்ட ஒண்ணே கால் மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு, கோர்ட்டில் இருந்து அழைப்பு வர, அடுத்தக் கட்ட சம்பிரதாயங்களை நிமிடங்களில் முடித்துக்கொண்டுக் கிளம்பினார் துரை தயாநிதி. 15-ம் தேதி காலை சுமார் 20 கார்கள் பின்தொடர கீழவளவு ஸ்டேஷனில் ஆஜரானார் துரை. தினமும் காலை 10.30 மணிக்கு கையெழுத்துப்போட வேண்டும் என்பதுதான் கோர்ட் நிபந்தனை என்பதால், 10.30 மணி வரை காக்க வைத்தது போலீஸ். காத்திருந்து, சரியான நேரத்துக்குக் கையெழுத்தைப் பதித்து விட்டுக் கிளம்பினார் துரை.

மதுரை - கீழவளவு சாலையில் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு காலை நேரப் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது!

   - குள.சண்முகசுந்தரம்

அட்டை மற்றும் படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

''அடுத்த அதிரடி பிறந்த நாள் விழா''

    மேலூர் கோர்ட்டில் மகன் காத்துக் கொண்டிருக்க எம்.பி. அலுவலகத்தில் மீடியாக்காரர்கள் சிலரிடம் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார் அழகிரி.

''துரை தயாநிதி வெளிநாட்டுக்குப் போனதா சொல்றாங்​களே?'' என்று கேட்டதற்கு, ''அவனோட பாஸ்போர்ட்டை இன்னைக்கு கோர்ட்டுல ஒப்படைச்சாச்சு. அதை வாங்கிப்​பாருங்க தெரியும். இந்த 100 நாளா அவன் எங்கெங்கே இருந்தான்னு என்னைய விட உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு. சொல்லப்போனா, அவன் எங்கெங்கே போனான்னு என் மகனைவிட போலீஸைவிட உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கே. இதை எல்லாம் முன்கூட்டியே இவங்க போலீ ஸுக்குச் சொல்லி இருக்கலாமே. உண்மையை மறைத்த குற்றத்துக்காக பத்திரிகைகாரங்க மேலதான் போலீஸ்காரங்க வழக்குப் போடணும்'' என்று சிரித்தார் அழகிரி.

''உங்களைவிட என் படை பெருசுப்பா!''

''துரை மீது புது வழக்குகளைப் போட்டு கைது செய்யப் போறதா செய்தி வருதே?''

''உண்மையிலேயே என் மகன் தப்புச் செய்திருந்தால், நானே அவனை போலீஸ் ஸ்டேஷனிலோ கோர்ட்டிலோ கொண்டு போய் விட்டிருப்பேன். என் மீதுள்ள அரசியல் காழ்ப்பு உணர்ச்சியில்​தான் அவன் மீது பொய் வழக்குப் போட்டார்கள். என் பிள்ளையை உள்ளவெச்சு, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் என்பதுதான் அவங்களோட திட்டம். அதற்கு இடம் கொடுக்கக் கூடாதுன்னுதான் முன்ஜாமீன்வாங்க​வேண்டியதாப் போச்சு. இனிமேலும் புதுசா பொய் வழக்குகள் போட்டாங்கன்னா அதையும் சந்திச்சுத்தானே ஆகணும்?''

''நீங்கள் மக்களிடம் மனுக்கள் வாங்குவதை நிறுத்திட்டதாச் சொல்றாங்களே?''

''மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி அதிகாரிகளுக்கு அனுப்பினால், எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. அப்புறம் எதுக்கு மனுக்களை வாங்கணும்? அதனால் மக்களைச் சந்திக்கவே தயக்கமா இருக்கு. மதுரை கலெக்டரை நேர்மையானவர்னு சொல்றாங்க. ஆனா, அந்த நேர் மையானவருக்கு ஒரு மத்திய அமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும், அவரை எப்படி மதிக்கணும்கிற புரொட்டோகால் கூடத் தெரியலியே. நேர்மை இருக்கட்டும், மொதல்ல அவரை யாருக்கு என்ன மரியாதை குடுக்கணும்கிற புரொட்டோகாலைப் படிச்சிட்டு வரச் சொல்லுங்க''

''துரோகிகளை இயற்கை பார்த்துக் கொள்ளும்’னு சொல்லி இருக்கீங்களே, இதுக்கு என்ன அர்த்தம்?''

''துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை. அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை. யார் என்ன திட்டம் போட்டாலும் துரோகம் செய்தாலும் இயற்கையிடம் இருந்து தப்பிக்க முடியாது. அந்த அர்த்தத்தில்தான், 'இயற்கை பார்த்துக்கும்’னு சொன்னேன். இதைவைத்து வேறு எந்தக் கற்பனைக்கும் யாரும் போய்விட வேண்டாம். என்னை நம்பி வந்தவர்களை நான் என்றைக்குமே கைவிட்டது இல்லை. அவர்களுக்காக அரசியலில் இந்த அழகிரியின் அதிரடிகள் தொடரும். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த வருடம் எனது பிறந்த நாளை கிராண்டாகக் கொண்டாடத் தீர்மானித்து இருக்கிறேன். அதிக எண்ணிக்கையில் ஏழைகளுக்கு உதவி களை அள்ளிக்கொடுக்கப் போகிறோம்!'' என்று அழகிரி பேசிக்கொண்டு இருக்கும் போதே, 'கோர்ட்டில் இருந்து தம்பி கிளம்பியாச்சு’ என்ற செய்திவர, உடனே அலுவலக வாசலுக்கு வந்தார். அங்கு வந்து இறங்கிய துரை, ''அப்பா, இதுக்கு முந்தி என்னைய இப்படிப் பார்த்திருக்கீங்களா? உங்களுக்குத்தானே ஆளுங்க இருக்காங்கன்னு சொல்வீங்க. இப்ப, எனக்குப் பின்னாடியும் ஒரு படை இருக்கு'' என்று அப்பாவை வாய்விட்டுச் சிரிக்க வைத்தார்!

''அடுத்து வர இருக்கும் தேர்தலில் துரை தயாநிதியைக் களத்தில் இறக்க நினைக்கிறார்கள்'' என்று இப்போதே கட்சிக்காரர்கள் சொல்ல ஆரம்பித்து இருக்கின்றனர்!