Published:Updated:

முல்லை பெரியாறுக்காக குரல் கொடுத்தது தி.மு.க.தான்: கருணாநிதி

Vikatan Correspondent
முல்லை பெரியாறுக்காக குரல் கொடுத்தது தி.மு.க.தான்: கருணாநிதி
முல்லை பெரியாறுக்காக குரல் கொடுத்தது தி.மு.க.தான்: கருணாநிதி
முல்லை பெரியாறுக்காக குரல் கொடுத்தது தி.மு.க.தான்: கருணாநிதி

சென்னை: ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் முல்லை பெரியாறு அணைக்காக குரல் கொடுத்தது தி.மு.க.தான் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''கேரள சட்டசபையில் முல்லை பெரியாறு அணை குறித்து சட்ட திருத்தம் செய்த போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிதான் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. அரசு வழக்கு போட்டும் பதிவெண் பெறவில்லை. இதையடுத்து 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போதுதான் பதிவெண் பெறப்பட்டு முல்லை பெரியாறு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் தி.மு.க.தான் முல்லை பெரியாறு அணைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தற்போது உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.