Published:Updated:

முல்லைப் பெரியாறு: சட்ட நடவடிக்கை எடுக்க கேரள அனைத்து கட்சிகள் முடிவு!

விகடன் விமர்சனக்குழு

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவை உயர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கேரள அனைத்துக் கட்சிகள் கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. அதில், முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் உள்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்துக்கு பிறகு உம்மன் சாண்டியும், அச்சுதானந்தனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ''இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மறுஆய்வு மனு அல்லது மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற கருத்தை அச்சுதானந்தன் முன்வைத்தார். அதனை அனைத்துக் கட்சிகளும் ஏற்று கொண்டன" என்று உம்மன் சாண்டி தெரிவித்தார்.