Published:Updated:

மிஸ் கூவாகம் 2014 பட்டத்தை விஜயவாடா சகானா தட்டி சென்றார்! (படங்கள்)

மிஸ் கூவாகம் 2014 பட்டத்தை விஜயவாடா சகானா தட்டி சென்றார்! (படங்கள்)
மிஸ் கூவாகம் 2014 பட்டத்தை விஜயவாடா சகானா தட்டி சென்றார்! (படங்கள்)

விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் விஜயவாடாவை சேர்ந்த சகானா ''மிஸ் கூவாகம் 2014" பட்டத்தை வென்றார்.

மிஸ் கூவாகம் 2014 பட்டத்தை விஜயவாடா சகானா தட்டி சென்றார்! (படங்கள்)

உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவிற்காக ஆண்டுதோறும் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் கூடுவது வழக்கம். இந்த வருடமும் திருவிழாவை சிறப்பாக கொண்டாட திருநங்கைகள் விழுப்புரத்தில் கூட தொடங்கியுள்ளனர். விழுப்புரம் வீதிகள் எல்லாம் திருநங்கைகளால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மிஸ் கூவாகம் 2014 பட்டத்தை விஜயவாடா சகானா தட்டி சென்றார்! (படங்கள்)

இத்திருவிழாவின் ஒரு நிகழ்வான ''மிஸ் கூவாகம்" பேஷன் ஷோ போட்டி நேற்று நடைபெற்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த பேஷன் ஷோவில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். விதவிதமான ஆடைகளில் வந்திருந்த திருநங்கைகளின் ஆடல் பாடலால் அழகிப்போட்டி தூள் பறந்தது. அழகிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், உடை, நடை, அறிவுத்திறன் என பலவற்றிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது இந்த மிஸ் கூவாகம் அழகி போட்டியில்.

மிஸ் கூவாகம் 2014 பட்டத்தை விஜயவாடா சகானா தட்டி சென்றார்! (படங்கள்)

தர்மபுரியை சேர்ந்த சாயா சிங்கிடம் இருந்து மிஸ் கூவாகம் பட்டத்தை விஜயவாடாவை சேர்ந்த சகானா தட்டி சென்றார். இடண்டாம் இடத்தை ஈரோட்டை சேர்ந்த ஐஸ்வர்யாவும், முன்றாம் இடத்தை சென்னையை சேர்ந்த நமிதாவும் பிடித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமாரும் பட்டங்களை சூட்டி, பரிசுகளை வழங்கினார்கள்.

மிஸ் கூவாகம் 2014 பட்டத்தை விஜயவாடா சகானா தட்டி சென்றார்! (படங்கள்)

பரிசளித்துவிட்டு திருநங்கைகள் மத்தியில் பேசிய சரத்குமார், ''2014 திருநங்கைகளுக்கு முக்கியமான வருடம். திருநங்கைகளை முன்றாம் பாலினமாக அங்கிகரித்து, திருநங்கைகளுக்கு உச்ச நீதிமனறம் மிகப்பெரிய அங்கிகாரத்தை அளித்துள்ளது. இன்று சமுதாயத்தில் நீங்களும், நாங்களும் சமமே என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது" என்றார்.

ஆ.நந்தகுமார்


படங்கள்:
தே.சிலம்பரசன்